செரீனா வில்லியம்ஸ் தந்த அதிர்ச்சி!

செரீனா வில்லியம்ஸ் தந்த அதிர்ச்சி!

இரு கின்னஸ் சாதனைகளுடன் தனது 27 ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் "ராணிகளின் ராணி' என்றழைக்கப்பட்ட செரீனா வில்லியம்ஸ்.

இரு கின்னஸ் சாதனைகளுடன் தனது 27 ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் "ராணிகளின் ராணி' என்றழைக்கப்பட்ட செரீனா வில்லியம்ஸ்.

உலக அளவில் கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.  பல்வேறு காலகட்டங்களில் தலைசிறந்த வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். டென்னிஸில் மார்க்கரெட் கோர்ட், நவரத்திலோவா,  ஸ்டெஃப்பி கிராஃப், கிறிஸ் எவர்ட் போன்றவர்கள் தங்கள் பெருமையை நிலைநாட்டியுள்ளனர்.

தவிர்க்க முடியாத வில்லியம்ஸ் சகோதரிகள் அதே நேரத்தில் மகளிர் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் அமெரிக்காவின் வீனஸ் - செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர்.  இதில் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் 27 ஆண்டுகளாகத் தனது இருப்பை பிரம்மாண்டமாகப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் மிச்சிகனில் ஆரகேன் பிரைஸ்-ரிச்சர்ட் வில்லியம்ஸ் தம்பதிக்கு 1981-இல் பிறந்த செரீனா  கடைக்குட்டி ஆவார். கலிபோர்னியாவின் காம்ப்டன் நகரில் குடும்பம் இடம் பெயர்ந்தபோது,  4-ஆம்  வயதில் டென்னிஸ் ஆடத் தொடங்கினார் செரீனா.  பின்னர் ஃபுளோரிடாவின் பாம் பீச்சில் டன்னிஸ் அகாதெமியில் சேர்ந்து தீவிரமாக பயிற்சி பெற்றார். 

அவர்கள் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் வீனஸ்-செரீனா சகோதரிகளை வெள்ளை இனத்தவர் பாகுபாடு காண்பித்தனர். இதனால் ஒரு கட்டத்தில் தனது மகள்கள் டென்னிஸ் பயிற்சிக்கு ரிச்சர்ட் வில்லியம்ஸ் அனுப்பவில்லை. கல்வியில் கவனத்தை செலுத்துமாறு கூறினார்.

பின்னர் 1995-இல் தனது 14-ஆவது வயதில் தொழில்முறை வீராங்கனையாக மாறினார் செரீனா.  ஆனால் முதல் போட்டியில் தோல்வி கண்டார்.  பல்வேறு டபிள்யுடிஏ போட்டிகளில் தோல்வி கண்டாலும், 1998 விம்பிள்டன், யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

முதல் ஒற்றையர் பட்டம் 

இதன் தொடர்ச்சியாக,  1999 யுஎஸ் ஓபனில் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிûஸ வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். அதே ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் கிம் கிளிஜஸ்டர்ஸ், கோன்சிதா மார்ட்டினஸ், மோனிகா செலஸ் ஆகியோரையும் வென்றிருந்தார்.
1999 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் உலகின் முதல்நிலை வீராங்கனைகளில் ஒருவராக ஆனார் செரீனா. தொடர்ந்து 2002-03 சீசனில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் கைப்பற்றினார்.

27 ஆண்டுகளில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் 

தனது 27 ஆண்டுக்கால டென்னிஸ் வாழ்க்கையில் 23 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் உள்பட மொத்தம் 73  பட்டங்களை வென்றார்.   தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் வென்ற போது கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு அறிவிப்பு 

இந்த நிலையில்,  அண்மையில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் போட்டியின் மூன்றாவது சுற்றில் ஏற்பட்ட தோல்வியுடன் தனது 27 ஆண்டுக்கால டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீருடன் அறிவித்தார் செரீனா வில்லியம்ஸ் (40).

ஒற்றையர் பிரிவில் செரீனாவும், இரட்டையர் பிரிவில் வீனஸ்-செரீனாவில்லியம்ஸ் என சகோதரிகளின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக நீடித்தது.  இருவரும் இணைந்து 14 இரட்டையர் பட்டங்களை கைப்பற்றினர். 31 முறை நேருக்கு நேர் மோதியதில் செரீனா 19, வீனஸ் 12 முறையும் வென்றுள்ளனர். இருவருக்கும் அவர்களது தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸ் பயிற்சியாளராகத் திகழ்ந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸி. வீராங்கனை மார்க்ரெட் கோர்ட் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி அதிக பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை நிகழ்த்தி இருந்தார். அந்தச் சாதனையை சமன் செய்யவோ அல்லது முறியடிக்கவோ செரீனா தீவிரமாக முயன்றார். 2018 விம்பிள்டன் இறுதி, 2019 யுஎஸ் ஓபன் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்ததால், மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்ய முடியாமல் வேதனையுடன் ஓய்வு பெற்றுள்ளார் செரீனா.

2 கின்னஸ் சாதனைகள் 

ஓய்வு பெறும்போது 2 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி விட்டுச் சென்றார் செரீனா. அதில் ஒன்று யுஎஸ் ஓபன் போட்டியில் ஒட்டுமொத்தமாக 108 வெற்றிகளை பெற்றது. மற்றொன்று கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக ஆட்டங்களில் 367 வெற்றிகள் என 2 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தினார். மேலும் 25 கின்னஸ் சாதனைகளும் செரீனாவின் பெயரைக் கூறுகின்றன.

மேலும் டென்னிஸ் களத்தில் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் இடையே இருந்த ஏற்றத் தாழ்வுகளையும், மகளிர் மீதான தாக்குதல்களையும்,  இன பேதத்தையும் எதிர்த்து உறுதியாக நின்றவர்.

ஓய்வு குறித்து செரீனா வில்லியம்ஸ் கூறியதாவது:

சிறுவயதில் நான் டென்னிஸ் அகாதெமியில் பயிற்சிக்கு சென்ற போது எனது பயிற்சியாளர் ரிக்கி மாக்கி, நீதான் உலகின் நம்பர் 1 வீராங்கனை எனக் கூறி மூளைச் சலவை செய்து கொண்டே இருந்தார். அந்த கூற்று ஒருகாலத்தில் உண்மையாகி விட்டது. வீனஸ் இல்லை என்றால் எனக்கு டென்னிúஸ இல்லை.  எனது டென்னிஸ் வாழ்க்கையே  பெற்றோருக்கு சொந்தம்''  என்றார்.

ஒற்றையர் பட்டங்கள்

ஆஸி. ஓபன்: 2003, 2005, 2007, 2009, 2010, 2015, 2017 (92 வெற்றிகள்).
பிரெஞ்சு ஓபன்: 2002, 2013, 2015 (69 வெற்றிகள்).
விம்பிள்டன்: 2002, 2003, 2009, 2010, 2015, 2016 (98 வெற்றிகள்).
யுஎஸ் ஓபன்: 1999, 2002, 2008, 2012, 2013, 2014 (108 வெற்றிகள்).
2002-03, 2014-15 என இரண்டு சீசன்களிலும் இரு முறை நான்கு பட்டங்களையும் கைப்பற்றினார்.

2012  லண்டன் ஒலிம்பிக்ஸ்: தங்கம்.

இரட்டையர் பட்டங்கள்

ஆஸி. ஓபன்: 2001, 2003, 2009, 2010.
பிரெஞ்சு ஓபன்: 1999, 2010.
விம்பிள்டன்: 2000, 2002, 2008, 2009, 2012, 2016.
யுஎஸ் ஓபன்: 1999, 2009.
ஒலிம்பிக்ஸ் தங்கம்: 2000, 2008, 2012.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com