சிட்னியில் என் சிம்பொனி
By சலன் | Published On : 25th September 2022 06:00 AM | Last Updated : 25th September 2022 06:00 AM | அ+அ அ- |

இளையராஜா இதுவரை 20 ஆயிரம் கச்சேரிகளை இசையமைத்திருப்பார். தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அங்கே இவரது கச்சேரி நடந்திருக்கும்.
இவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது, அமெரிக்காவில் கச்சேரியில் இருந்தார். சென்னைக்கு வந்தவுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பிறகே,புதுதில்லிக்குச் சென்று பதவியேற்றார்.
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் அண்மையில் நடைபெற்ற கச்சேரி, அந்த நாட்டு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
இந்தக் கச்சேரியைப் பார்க்கும்போது என் நினைவு பின்னோக்கி நகர்ந்தது. இளையராஜா, அவரது சகோதரர் பாஸ்கர், இளையவர் கங்கை அமரன் (அன்று அவருடைய பெயர் அமர்சிங்) தி.நகர் மூஸா தெருவில் அன்று குடியிருந்த திரைப்படத் தயாரிப்பாளர் மறைந்த பஞ்சு அருணாசலத்தை பார்த்துவிட்டு சென்றபோது, நானும் பார்க்கச் சென்றேன். என்னிடம் அவர்களைபற்றி சொன்னார். " இந்தச் சகோதர்களில் நடுவரைதான் அடுத்த படத்துக்கு நான்இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப் போகிறேன். அவர்அசாத்தியத் திறமைசாலி'' என்றார்.
அவர் கூற, அடுத்த ஓரிரு வாரங்களில் அவரை பேட்டி எடுத்து வெளியிட்டேன். அப்புறம் 8 டிராக், 16 டிராக் சாதனைக்கு மேல் சாதனை நிகழ்த்திக் கொண்டே
சென்றார்.
இளையராஜா முதன் முதலில் பேட்டி கொடுத்தது எனக்குதான் என்பதில் மகிழ்ச்சி.
இளையராஜா சிட்னிக்கு வந்தவுடன் அவருக்கு அமோக வரவேற்பு. அவருடன் பாடகர்கள் கார்த்திக், எஸ்.பி.பி. சரண், யுகேந்திரன் வாசுதேவன், முகேஷ், ஸ்வேதா மோகன், மது பாலகிருஷ்ணன், அனிதா கார்த்திகேயன், சுர்முகிராமன், பிரியா ஹிமேஷ், விபவரி ஜோஷி என்று பெரிய குழுவினர் உடன்வந்தனர்.
கச்சேரி ஹில் சாங்கன் வென்ஷன் உள் அரங்கில் நடைபெற்றது. இது 3,200 பேர் உட்கார வசதி நிறைந்து. 1, 200 கார்களை நிறுத்தலாம். அரங்கம் நிரம்பி வழிந்தது.
இளையராஜா கச்சேரி ஜனனி பாடலுடன் தொடங்கியது. அவரது நிறைய பாடல்களைப் பாடிய மனோ மூன்றாவது பாடலுக்கே வந்தார். அவரது பெயர் விளம்பரத்தில் இல்லாதபோதும் வந்திருந்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இல்லாதக் குறையை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நிறைவாகச் செய்திருந்தார்.
இளையராஜா தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் பற்றி பேசும்போது, "" நான் ஒருசமயம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துபொழுது பஞ்சு சார் வந்து, ரஜினி கால்ஷீட் கொடுத்து விட்டார்கள். பாடல் மட்டும் பாக்கி'' என்றார்.
எனது அப்போதைய உதவியாளர் சுந்தரராஜனை கூப்பிட்டு, விசில் ஒலி எழுப்பி பாட்டைசொல்லி, எஸ்.பி.பி.க்கு விசில் மொழியிலே சொல்லிக் கொடுத்து, பாட்டு உருவானது. அதை எஸ்.பி.பி. வாரிசு சரண்படுவார்.
""தம்பிக்கு எந்த ஊரு'' என்ற படத்தின் "காதலின் தீபம் ஒன்று' சரண்பாடினார். இரண்டாவது சரணம் பாடும்போது, தனது தந்தை நினைவுவர, பாடமுடியாமல்
அழுதார்.
இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசும்போது, "இயக்குநர் பிரியதர்சனின் "காலாபானி' படத்துக்கு பாடல் அமைக்கும்போது எப்படி பாடல் வேண்டும்?' என்று கேட்டேன்.
அவருக்கு வார்த்தை தெரியலே.
"பூவருஷம்பூ பூத்தாச்சு'என்ற பாடலின் ட்யூன் சொன்னாரு. நான் அதே ட்யூன் கொஞ்சம் மாற்றிக் கொடுத்தேன்.
"ஓ பிரியா.. பிரியா..' எப்படி இசைக் கோர்வை செய்ய முடிந்தது என்பதையும் இளையராஜா விளக்கினார்.
பழைய "விக்ரம்' படத்தின் பாடலை கார்த்திக் பாடி முடித்தவுடன், இளையராஜா "உங்கள் வயது என்ன?' என்றுகேட்டார். "42' என்றார்.
நீ பாடிய "விக்ரம்' படத்துக்கு நான் இசைஅமைத்தது 40 ஆண்டுகளுக்கும் முன்னால். என்றார் இளையராஜா.
"என்ஜோடிமஞ்சகுருவி' என்ற பாடலைபாடும் போது அரங்கில் மக்கள் ஒவ்வோரின் கைப்பேசிகளும் படம் பிடிக்கத் தொடங்கின.
"சிந்து பைரவி' படத்தில் வரும் "நான் ஒரு சிந்து' பாடல் உருவான விதத்தையும் இளையராஜா விளக்கினார்.
நாயகன் படத்தில் வரும் "தென் பாண்டி சீமையிலே' பாடலை புது வார்த்தைகளோடு பாடிய இசைஞானி, அவருக்கும் ரசிகர்களுக்கும் இசைதான் பாலம், நம்மை யாரும் பிரிக்க முடியாது என்று முடித்தார்.
பின்னர் அவர் பேசுகையில், ""இங்கே உள்ள ரசிகர்கள் எனது அலுவலத்தைத் தொடர்பு கொண்டால், உங்களுக்குப் பரிசு உங்கள் வீடு தேடி வரும். விரைவில் ஓபரா ஹவுஸில் என்சிம்பொனி இசைஒலிக்கும்'' என்றார்.