பெயரைச் சொல்லவா..?

ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தைப் படைத்த பிரபல எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் சொன்ன நகைச்சுவையான உண்மைச் சம்பவம் இது:

ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தைப் படைத்த பிரபல எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் சொன்ன நகைச்சுவையான உண்மைச் சம்பவம் இது:
கானன் டாயில் பாரிஸ் சென்றபோது, ஒரு டாக்ஸி ஸ்டாண்டில் நின்ற கார் ஒன்றில் தனது சூட்கேஸை டிக்கியில் வைத்துவிட்டு உள்ளே ஏறி அமர்ந்தார்.
டிரைவர், ""எங்கே போகணும் மிஸ்டர் டாயில்? என்றார்.
""எப்படி கண்டுபிடித்தாய்? என்னைப் பார்த்திருக்காயா? என்று அசந்தவாறு கேட்டார் டாயில்.
இதற்கு ஓட்டுநரோ, "உங்களை இதற்கு முன்னர் பார்த்தில்லை. இன்றைய பேப்பரில் கானன் டாயில் மார்செயில்ஸில் சுற்றுப்பயணம் செய்கிறார் என்றிருந்தது என்றார்.
""மார்செயில்ஸ் வருகிறவர்கள் நிறைய பேர் இந்த டாக்ஸி ஸ்டேண்ட்தான் வருவர். லேசாகக் கருத்திருக்கும் உங்கள் நிறம் வெகேஷனில் இருப்பதைத் தெரிவிக்கிறது. வலது கையில் இங்க் கறை ஒரு எழுத்தாளர் என்கிறது. உடை ஆங்கிலேயர் என்கிறது. என சொன்னார். அப்போது குறுக்கிட்ட ஷெர்லாக்,  ஆஹா நீ என் ஹோம்ஸைத் தோற்கடித்துவிட்டாய் என்று வியந்து பாராட்டினார்.
அப்போது ஓட்டுநர் சொன்னார், மேலும் உங்களது சூட்கேஸில் உங்கள் பெயர் எழுதி இருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com