ரயிலில் பிரேக் ஜர்னி..!
By செளமியா சுப்ரமணியன் | Published On : 22nd January 2023 06:00 AM | Last Updated : 22nd January 2023 06:00 AM | அ+அ அ- |

ரயிலில் பயணம் செய்யும்போது, இறங்கி உறவினர்கள் வீட்டில் இரண்டு நாள்கள் தங்கி, மீண்டும் அதே டிக்கெட்டில் பயணம் செய்யலாம். இதன்பெயர் "பிரேக் ஜர்னி'.
சுமார் 500 கி.மீ.க்கு அதிகமான தூரம் தொடர்ந்து பயணிப்போருக்கு இது பொருந்தும். 1000 கி.மீ. பயணம் செய்வோர் இருமுறை இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு 501கி.மீட்டரில் உள்ள ரயில்நிலையத்தில் இறங்கி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் டிக்கெட்டில் கையெழுத்து பெற்று மீண்டும் பயணத்தைத் தொடரலாம்.
ரயிலில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், குறைந்தபட்சம் மூன்று மணிநேர இடைவெளியில் ரயிலை தேர்ந்தெடுக்க வேண்டும். ஜன் சதாப்தி, சதாப்தி, ராஜஸ்தானி போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க முடியாது. டிக்கெட்டை கவுன்ட்டர்களில் தான் வாங்க வேண்டும்.