சவூதி அரேபியா நாட்டின் அதிசயங்கள்..!

சவூதி அரேபியாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.  முக்கியமான விஷயங்கள்!
சவூதி அரேபியா நாட்டின் அதிசயங்கள்..!

சவூதி அரேபியாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். முக்கியமான விஷயங்கள்!

திருமணமாகாத ஆணும் பெண்ணும் தனிமையில் காரில் எங்கும் பயணம் செய்ய முடியாது. கணவன் மனைவிக்கு "இக்காமா கார்டு' என்று லைசென்ஸ் இருக்கிறது. அது இல்லாமல் எங்கும் செல்ல முடியாது . "இக்காமா கார்ட்‘ இல்லாமல் எந்த ஹோட்டலிலும் ஆணும் பெண்ணும் தங்க இயலாது .

கணவன் மனைவியாக இருந்தாலும் பார்க்கிலும் பீச்சிலும் வரம்பு மீற அனுமதி கிடையாது. பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் உடனே கைது செய்யபட்டு ஒரு வாரம் ஒழுக்கம் பற்றி இஸ்லாமிய பாடம் எடுக்கப்படும்.

சவூதி அரேபிய நாட்aடைச் சேர்ந்த அனைவரும் இஸ்லாமியர்களே மாற்று மதத்தை சேர்ந்த ஒருவர் கூட இல்லை.

அல்லாஹ்வை பற்றியோ இஸ்லாத்தின் சட்டத்தைப் பற்றியோ விமர்சனம் செய்தால், சவூதி நாட்டு பிரஜையாக இருந்தாலும் கூட உடனே எந்த கேள்வியும் இன்றி மரணத் தண்டனை கொடுக்க படும்

பெட்ரோல் பேங்க் நடத்த லைசன்ஸ் வேண்டும் என்றால், அங்கு 100 பேர் தொழும் அளவுக்கு பள்ளிவாசல் இருக்க வேண்டும். மாநகருக்கு வெளியே திறக்கப்படும் பெட்ரோல் பங்குகள் பயணிகள் தொழுவதற்காகவே இருக்கும்.

பொதுவெளியில் சிறுநீர் கழிக்க அனுமதி இல்லை. எல்லா பெட்ரோல் பங்கிலும் இலவச கழிவறை உண்டு. அப்படி இல்லை என்றால் பள்ளிவாசலிலும் உள்ள கழிவறைகளை இலவசமாகப் பயன்படுத்தி கொள்ளலாம்.

வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம். வீட்டில் எவ்வளவு தங்கம் வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம். வருமான வரித்துறை சோதனையெல்லாம் கிடையாது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மன்னர் குடும்பமாக இருந்தாலும் மரணத் தண்டனை கொடுக்கப்படும். அதற்கு சான்றாக அண்மையில் நடைபெற்ற நிகழ்வு. மன்னர் சல்மானின் பேரன் துப்பாக்கியால் ஒருவரை சுட்டு கொலை செய்தார் என்பது நீருபிக்கப்பட்டது அதற்கு இஸ்லாத்தின் சட்டப்படி கொலைக்கு கொலை என மன்னர் சல்மான் பேரன் தலை வெட்டப்பட்டது.

பட்டதாரிகளைவிட, அலுவலகங்களில் வேலை செய்பவர்களைவிட பள்ளிவாசலில் வேலை செய்யும் இமாம்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும். இமாம்களுக்கு ராஜமரியாதை கொடுக்கப்படும் "முதவ்வா' என அவர்கள் அழைக்கப்படுவார்கள்.

பெண்கள் மீது கை வைத்தாலோ, மானபங்கம் செய்ய முயற்சி செய்தாலோ உடனே தலை வெட்டப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com