யாவரும் வல்லவரே

அன்பின் சக்தி கூறும் யாவரும் வல்லவரே
யாவரும் வல்லவரே

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில் இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் "யாவரும் வல்லவரே'.

அன்பு நிஜ வாழ்வில் மட்டுமல்ல, சினிமாவிலும் தோற்றதில்லை. அப்படியான அன்பை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ராஜேந்திர சக்ரவர்த்தி. படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""இந்தக் கதையின் எல்லா வாசல்களும் மனிதத்தில்தான் போய் முடியும். உலகின் அதி தேவையும் அதுதானே.

பிரிவு, விரக்தி.... எல்லாமே பொய். அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானூடத்தின் நிரந்தரம். அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பது

தான் வாழ்க்கை. எல்லா இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு மனசு மட்டுமே போதும்... போதும். எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. செல்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்கள் ஏராளமாக இருந்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது

திருச்சி, தொழுதூர், பெரம்பலூர், திட்டக்குடி, உளுந்தூர்பேட்டை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஆறில் இருந்து அறுபது வரை எல்லோருக்குமான படமாக இது உருவாகி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இவ்வளவு வன்மம், வெறுப்புகள் வளர காரணம் எல்லோர் உள்ளும் தேங்கி இருக்கும் அன்புதான். அந்த அன்பை தொலைத்துவிட்டுதான் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதை மீட்டெடுக்கும் முயற்சிதான் இந்தப் படம். வரும் 15-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது'' என்றார் இயக்குநர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com