இசைப் பாடலாகும் திருக்குறள்

இசைப் பாடலாகும் திருக்குறள்

சினிமா துறையில் இயங்குபவர்கள் தங்களது ஆத்மத் திருப்திக்காக வித்தியாச முயற்சிகளை கையாள்வது உண்டு. அந்த வகையில் கவனம் ஈர்க்கிறார் பாடலாசிரியர் ஏ. இரமணிகாந்தன். லைசன்ஸ், கழுமரம் உள்ளிட்ட படங்களில் இவர் எழுதிய பாடல்கள் கவனிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு புது முயற்சியாக, திருக்குறளைப் பொருள் அடிப்படையில் இசைப் பாடல்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக 1330 குறள்களையும், 133 இசைப் பாடல்களாக எழுதி அசத்தி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது... ""மனிதர்களை நல்வழிப்படுத்த, அவர்கள் நல்வழியில் செல்ல, எத்தனையோ நன்னெறிகளும் அறநெறிகளும் அனுபவ மொழிகளும் உள்ளன.

அவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் அது நிம்மதியான அறவாழ்வாக அமையும். திருக்குறள் போல, ஆத்திசூடி போல தமிழ் இலக்கியங்கள் எல்லாமே மனிதர்களுக்கு நன்னெறியைத்தான் போதிக்கின்றன. எப்பொழுதும் நல்லதையே நினைத்து நல்லதைச் செய்பவர்களுடன் தொடர்பில் இருந்தால், எதிர்மறையான சிந்தனையைத் தவிர்த்து எப்போதும் நேர்மறையாக இருந்தால், வாழ்க்கையில் சில சறுக்கல்கள் ஏற்பட்டாலும் அது சிறப்பாக மாறும் என நம்பினால், நல்ல வார்த்தைகளைப் பேசினால் நம் வாழ்வில் எல்லாமே நன்மையாக நடக்கும்.

சிந்திப்பது என்பது கடினமான விஷயம் இல்லை. மனிதர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் இயற்கையாகவே சிந்திக்கிறார்கள். ஆனால் நிலையான, உயர்தரமான சிந்தனைகளின் வழிநடப்பதுதான் முக்கியம். திருக்குறள் அப்படிப்பட்ட நல்லொழுக்கத்தையும் நல்லுரைகளையும் வழங்கும் நூலாகும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், நல்ல சிந்தனை பலனளிக்கும் என்பதை வலியுறுத்தும் இந்த இசைப் பாடலை கேட்பவர்களின் வாழ்வில் நிச்சயம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com