கல்விக்காக போராடும் நடுநாடு

கல்வியின் வெளிச்சம் தேடி - சமூக நீதியின் கதை
கல்விக்காக போராடும் நடுநாடு

உண்மை சம்பவத்தை களமாக கொண்டு தயாராகி வரும் படம் "நடுநாடு' எஸ். எஸ். எஸ். ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் சி. கோவிந்தன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சந்தோஷ் சேகரன். படத்துக்கான நடிகர்கள் தேர்வு நடந்து வரும் நிலையில், படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""ஒரு சமூகத்தின் நீதி கல்விக் கூடங்களில்தான் பிறக்கிறது. ஆசிரியர்களிடம் இருந்துதான் ஒவ்வொரு சமூகமும் முதல் ஒளி வாங்கி கொள்ள முடியும். ஒரு பள்ளி, மாணவர்கள், சக ஆசிரியர்கள் இதுதான் களம்.

ஆசிரியர்கள் நமக்குச் சொல்லித் தந்த பூக்கள், எப்போதும் உதிராத பூக்கள். நிறம் இழக்காமல் , வெயில் மழை குடிக்கும் பூக்கள். எங்கே சென்றாலும், என்ன ஆனாலும் ஆசிரியர்களுக்கு நாம் சிறு பிள்ளைகள்தான். அவர்கள் கடவுளின் நிழல் போல் எங்கோ இருக்கிறார்கள். வயதாகி உடல் உடைந்து சிரமங்கள் கடந்து எப்படி எப்படி எல்லாமோ ஆகி விடுகிறார்கள். ஆனால், நம் நினைவில் நிற்பது கம்பீரமான ஆசிரியர்கள்தான்.

பறவையின் இறகைப் போன்ற அப்பழுக்கு எதுவும் இல்லாத நமது பால்யத்தை எடுத்துக் கொண்டு ஆசிரியர்கள் போய் விடுகிறார்கள். அதனால்தான் காலத்துக்கும் அவர்களை நினைத்துக் கொண்டே இருக்கிறோம். ஆசிரியர்கள் எப்போதும் பரிசுத்தம். பள்ளி இல்லாத ஊரில் பள்ளிக்கூடத்தை கொண்டு வர முயற்சிக்கும் ஒரு ஊரின் கதைதான் இது. கடலூர் மாவட்டத்தில் நான் பார்த்த ஓர் உண்மை சம்பவத்தை கருவாக கொண்டு கதையை உருவாக்கி இருக்கிறேன்'' என்றார் இயக்குநர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com