நிறம் மாறும் உலகில்

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் உருவாகி வரும் படம் "நிறம் மாறும் உலகில்'.
நிறம் மாறும் உலகில்

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் உருவாகி வரும் படம் "நிறம் மாறும் உலகில்'.

இயக்குநர் பா. ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிறுவன நிர்வாக இயக்குநர் தமிழ்குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்கள் சமூக தளம் வழியே இணையத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் இரத்தம் பாயும் கரும் சிவப்பு நிற பின்னணியில், துப்பாக்கி, ஆட்டோ, கண்ணாடி, ஹவுஸிங் போர்ட் பின்னணி, ஒரு பெண்ணின் நிழல் முகம், என குறியீடுகளுடன், கதாப்பாத்திரங்களின் வித்தியாசமான தோற்றத்தில் பார்த்தவுடனே இதயத்தை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.

கதைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கலர் டோனில் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிதான அழகான அனுபவம் தரும் படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com