Enable Javscript for better performance
இணைய வெளியினிலே! - Dinamani

சுடச்சுட

  
  31m10

  முக நூலிலிருந்து...

   

  அமைதியான பையனை,"அவன் சாம்பார் பையன்டீன்'னு நக்கல் பண்ண பொண்ணுங்கள்லாம் இப்ப "வாவ்..சாம்பார் பையன்டீ'ன்னு வழிஞ்சு பேசுறாங்க.

   

  பருப்பு விலை

  ஒண்ணு செளத் ஆப்பிரிக்காகாரய்ங்க ஊக்க மருந்து சாப்பிட்டு விளையாடிருக்கணும்..

  இல்ல இந்தியாகாரய்ங்க தூக்க மருந்து சாப்பிட்டு விளையாடிருக்கணும்..

   

  -பூபதி முருகேஷ்.

   

  பிடிக்கும் இடங்களில் மன்னிப்புக்கு தேவையும், மதிப்பும் இல்லை..

  பிடிக்காத இடங்களில்...மன்னிப்புக்கு மதிப்பும் இல்லை, தேவையும் இல்லை.

  அதான் தமிழ்ல மன்னிப்பு பிடிக்காத வார்த்தையா போயிடுச்சு.

   

  - கிருத்திகா தரன்.

   

  காலையில் தவில் வித்வான் ஒருவர் சன் தொலைக்காட்சியில் நேர் தோன்றினார். அவர் பேச்சும் தோற்றமும் ஆளுமையும் அக்கலையில் அவர் கரை கண்டவர் என்று உறுதியளித்தன. பார்த்த நொடியிலேயே காலம் தாழ்த்தாமல் ""ஐயா...'' என்று கைகுவித்து வணங்கும்படியான தோற்றம். திருவையாற்றுக்காரர். தாம் பயின்ற இக்கலையைத் தம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார், எனினும் அவர்களை இக்கலைத் தொழிலில் ஈடுபடுத்தவில்லையாம். அவர்கள் ஒவ்வொருவரையும் பொறியாளராக, மருத்துவராக ஆக்கினாரேயன்றி இக்கலையே இனி உன் வாழ்வென்று கைகாட்டவில்லை அவர். ""இது அருங்கலைதான், ஆனால் இதை நம்பிப் பிழைக்க முடியாது, இதற்கு வருங்காலம் இல்லை'' என்றார். முன்பு எல்லாக் கோவில்களிலும் நாதஸ்வரத்தை மங்கள இசையாக வாசிப்பார்கள். அந்த வழக்கம் இப்போது மறைந்துவிட்டது. ""பெரிய மேதைதான், என்றாலும் வருமானமின்றி எப்படிப் பிழைப்பது?'' என்று கேட்டார். அதைச் சொல்லும்போது அவர் முகத்தில் அரும்பிய கசப்புப் புன்னகையைக் கண்ணால் பார்க்க முடியவில்லை. தம் தாளக் கருவியை வாசித்துக் காட்டுகையில் தோன்றிய பெருமிதம் சற்று முன்புதான் அதே முகத்தில் படர்ந்திருந்தது. எல்லாக் கலைகளுக்கும் இதுவே இன்றைய நிலைமை என்னும்போது இம்முன்னேற்றங்களும் பொருளாதார வளர்ச்சிகளும் மக்களின் ஆடம்பரங்களும் எதை அள்ளிக்கட்டப் போகின்றன என்று கேட்கிறேன்.

   

  - மகுடேஸ்வரன்.

   

  மழைநாளில் நீங்கள் உங்கள் சன்னலின் கண்ணாடியில் வழிகிறீர்கள்

   

  - போகன் சங்கர்.

   

  இன்று முழுவதும் மழை சிணுங்கிக்கொண்டேயிருக்கிறது. இரவு தவளைகளின் கதம்பக் கச்சேரி.... குளிரென்ற குளிர். இந்தக் குளிர் தோலைத் துளைத்து எலும்பைத் தேடுவதன்று; இதமானதும் கதகதப்பானதுமான குளிர். மழையைக் கேட்டுக்கொண்டே படுத்திருப்பதுபோன்ற ஆனந்தம் வேறேது?

  நேற்றிலும் நாளையிலும் வாழ்வதனால் இன்றை இழந்துவிடுகிறேனென்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். மற்றவர்கள் பேச்சைக் கேட்பதற்கு முதல், நமது பேச்சைக் கேட்க நாம் கற்றுக் கொள்ளவேண்டும்

   

  - தமிழ்நதி.

   

  வலைத்தளத்திலிருந்து...
   

  வண்ணநிலவனின் "கம்பாநதி' நாவலில் பாப்பையாவும் கோமதியும் இண்டர்வியூவுக்குப் போய்விட்டு மழை விட்ட மாலையில் நயினார்குளத்துக் கலுங்கில் கால்களைத் தொங்கப் போட்டபடி பேசிக் கொண்டிருக்கும் அந்த எட்டுப்பக்கங்கள் தமிழ் இலக்கியத்தின் உச்சமான பக்கங்கள். காதல்வயப்படுதல் என்கிறார்களே, அது இதுதான். "வெண்ணிற இரவுகள்' படித்துவிட்டுத் தூக்கம் பிடிக்காமல் விடிய விடியத் தெருக்களில் சுற்றித் திரிந்ததுபோல கம்பாநதியின் இந்தப் பக்கங்களைப் படித்துவிட்டுப் பல இரவுகள் வேறொரு மனசோடு கண்களில் வழிந்து கொண்டேயிருக்கும் கண்ணீரைத் துடைக்கவும் மனசின்றி அலைந்து திரிந்ததுண்டு.

  அப்படி ஒன்றும் அவர்கள் பேசியிருக்கவும் மாட்டார்கள். அவன் முன்னிலையில் அவள் அழுகிறாள். ஏன் அழுதாள் என்று அவளுக்கும் தெரியவில்லை. அவனுக்கும் புரியவில்லை. ஏன்? ஏன்? என்று அவன் கேட்டுக்கொண்டே இருப்பான். அவன் அப்படிக் கேட்டுக் கொண்டே இருந்தது அவளுக்கு ரொம்பவும் பிடித்திருக்கும். ""என்னம்போ போலத் தோணிச்சி. அதான் அழுதேன்....'' இதுதான் அவள் சொல்லும் காரணம். அவள் சொன்னதில் எவ்வளவோ இருந்ததாக அவனுக்குப் பட்டது.

  தான் ஒளிக்காமல் அவனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்ட நிறைவு அவளுக்கும் இருக்கும். அவ்வளவுதான். என்ன ஒரு மனநிலை அது? இப்பக்கங்களை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் என்னைப்போலவே தன் பாலியல் சார் கசடுகள் எல்லாம் தானே உருகி வழிந்து தரையில் ஓடுவதைக் கண்ணாரக் காண்பார்.

  ச.தமிழ்ச்செல்வன் <http://keetru.com/>

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai