Enable Javscript for better performance
இது ரொம்ப உயரம்ங்க!- Dinamani

சுடச்சுட

    
    3ie9

    ஓலம்பஸ் மோன்ஸ் - இது ஒரு மலையின் பெயர். இந்த மலையின் உயரம் 71 ஆயிரத்து 800 அடி. நமது எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 29 ஆயிரத்து 35 அடி. கிட்டதட்ட இரண்டு மடங்குக்கும் மேல் அதிக உயரம். உலகத்தில் இப்படியொரு மலை இருப்பதைப் பற்றிக் கேள்விப்படவில்லையே? என்றுதானே எண்ணுகிறீர்கள்? உண்மைதான். நமது உலகத்தில் இந்த மலை இல்லை. இருக்கும் இடம்: செவ்வாய்க்கிரகம். சூரியக் குடும்பத்திலேயே இதுதான் மிக உயரமான மலை. அப்படித்தான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதைவிட 100 மீட்டர் அதிக உயரம் உள்ள இன்னொரு மலை இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த மலையின் பெயர் ரெசில்வியா. சூரியனைச் சுற்றிவரும் ஒரு சிறிய கோள் வெஸ்டா. அதில்தான் இந்த ரெசில்வியா இருக்கிறது. வெஸ்டாவிற்கு அனுப்பப்பட்ட விண்கலம், பெயர் டான், ரெசில்வியா பற்றிய தகவல்களை அனுப்பியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai