சுடச்சுட

  
  3im5

  இந்தக் காலத்தில் இளம் பெண்கள் சமையல் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. படிப்பு... வேலை... என்று வாழ்க்கை பறந்து கொண்டிருக்கும்போது, சமைப்பதற்கு நேரம் இல்லை. ஆர்வமும் இல்லை.

  திருமணமான பின்பு சமைக்க வேண்டிய தேவை வந்துவிடுகிறது. அம்மாவிடம் சமைக்கக் கற்றுக் கொண்டது போய், இணையதளத்தில் தரப்படும் சமையல் குறிப்புகளைப் பார்த்துச் சமைக்கக் கற்றுக் கொள்கிறார்கள். சிலர் நன்றாகவே சமைக்கிறார்கள். பெண்கள் மட்டுமல்ல, தனியராக உள்ள இளைஞர்களும் இப்படித்தான் சமையல் கற்றுக் கொள்ள இணையதளங்களை நாடுகிறார்கள்.

  இணையதளம் எல்லாம் எதற்கு? சமைக்கும் பாத்திரமே சமைப்பதற்கான குறிப்புகளைக் கொடுத்தால் நேரம் மிச்சமாகுமே என்று நினைத்தார்கள் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃ டெக்னாலஜியைச் சேர்ந்த பொறியாளர்கள்.

  உருவானது, பேன்டெலிஜன்ட் என்ற சமைக்கும் பாத்திரம்.

  இந்தப் பாத்திரத்தைச் சூடாக்கும்போது அது எத்தனை சென்டிகிரேடு வெப்பமாகிறது என்பதை இந்தப் பாத்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள வெப்ப சென்சார்கள் மூலமாக பாத்திரத்தின் கைப்பிடியில் இணைக்கப்பட்டுள்ள கருவிக்குத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. அதன் வழியாக ஸ்மார்ட் போனுக்குத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

  இந்தத் தகவல்களின் அடிப்படையில் சமையலின் அடுத்த கட்டம் என்ன? என்று சொல்லும்விதமாக செயலி ஒன்று ஸ்மார்ட் போனில் இணைக்கப்பட்டுள்ளது. சமைக்கும்போது ஒரு செயல் முடிந்தவுடன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தகவல் கிடைக்கும். இவ்வாறு முழுச் சமையலையும் செய்துவிட முடியும்.

  நிறைய சமையல் முறைகள் இந்தச் செயலியில் இருக்கின்றன. எதைச் சமைக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்து கொண்டு சமைக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.

  அந்தக் கருவி சொல்லும் சமையல் முறைகள் எல்லாம் வேண்டாம். எங்கள் பாட்டியின் கைப்பக்குவ மணக்கும் சமையலே வேண்டும் என்று அடம்பிடித்தால், அந்தச் செயல்முறையையும் இந்தச் செயலியில் நடைமுறைக்குக் கொண்டு வர முடியும்.

  இதில் முக்கியமானது என்னவென்றால், சமைக்கும் ஒவ்வோர் உணவுப் பொருளின் சத்தும் அதிகப்படியான வெப்பத்தால் அழிந்துவிடாமல், தேவையான அளவு மட்டுமே சூடாக்கி இந்த பேன்டெலிஜன்ட்டில் சமைக்க முடியும்.

  இந்த சமைக்கும் பாத்திரத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

  http://www.popsci.com/frying-pan-teaches-you-cook என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai