சுடச்சுட

  
  3im3

  1. பிறரைக் கவர்வதும், ஊக்குவிப்பதும்: தலைவர்கள் தெளிவான எதிர்கால இலக்கை உருவாக்கி, அதன் கீழ் ஏராளமானவர்களைப் பணியாற்றுமாறு ஊக்குவிக்கின்றனர். அனைவரையும் ஒருங்கிணைத்து, அதன் தாக்கத்தை சமூகம் அல்லது வாடிக்கையாளர்கள் மீது வெளிப்படச் செய்வரே, சிறந்த தலைவர் ஆவார்.

  2. ஒருமைப்பாட்டையும், நேர்மையையும் வெளிப்படுத்துதல்: தலைவர் என்பவர் தனது செயல்களிலும், பேச்சுகளிலும் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்பவர்களாகவும், நேர்மை, வெளிப்படைத்தன்மை போன்ற உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும்.

  3. பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல்: தலைமை தாங்குபவர், தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களின் திறமைகளுக்கேற்ப அவர்களிடம் பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும். சிறந்த ஊழியர்களை சிறிய குழுக்களுக்கு தலைமை தாங்குமாறு செய்து தலைமைப் பண்பை அவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். அவரவர் குழு சார்ந்த தீர்மானங்களை குழுத் தலைவர்களே திட்டமிடும் அளவுக்கு அவர்களைத் தயார் செய்ய வேண்டும்.

  4. பிரச்னைகளைச் சமாளித்தல்: சந்தையிலும், சமூகத்திலும் ஏராளமான பிரச்னைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றைத் தீர்க்கும் திறமைகளையும் அனுபவங்களையும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் பெற்றிருக்க வேண்டும். சந்தை நிலவரங்களை நிறுவனத்துக்குச் சாதகமாக மாற்றிக் கொள்பவர்களாக தலைவர்கள் இருக்க வேண்டும்.

  5. இலக்குகளை நோக்கிப் பணிபுரிதல்: தலைவர்கள் விடாமுயற்சி கொண்டவர்களாகவும், இலக்குகளை சரியாகத் திட்டமிடத் தெரிந்தவர்களாகவும், மற்றவர்களை விட துடிப்புமிக்கவர்களாகவும், பல்வேறு விஷயங்களைத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டியது அவசியம். நிறுவனத்தின் நிதி நிலைமை, ஊழியர்களின் திறன், சமூகத்தின் தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இலக்கைத் திட்டமிட வேண்டும்.

  6. நேர்மறை மனப்பான்மை: நிறுவனத்தின் இலக்கை நோக்கிச் செல்லும் பாதையில், ஊழியர்களிடம் தொடர்ந்து நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்துவது அவசியம். அதன் மூலம் அவர்கள் மத்தியில் எப்போதும் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஊழியர்களின் சிறிய தேவைகளைப் பூர்த்தி செய்வது, சம்பள உயர்வு, மகிழ்ச்சிகரமான அலுவலகச் சூழல் ஆகியவை இதில் அடங்கும்.

  7. மற்றவர்களைத் தரம் உயர்த்துதல்: தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழியர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுடைய தொழில்நுட்பம், கல்வி சார்ந்த திறமைகளை மேம்படுத்த ஊக்கமளிக்க வேண்டும். அந்த ஊழியர்கள் பெற்ற பயிற்சி, அனுபவங்களின் அடிப்படையில், நிறுவனத்தின் அடுத்த தலைமுறையினரை அடையாளம் காண வேண்டும்.

  8. படைப்பாற்றல்: எல்லா முடிவுகளும் தெளிவாக இருந்து விடாது. சில நேரங்களில் சூழ்நிலை கருதி அவசர முடிவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அவை சிக்கலான முடிவுகளாகவும் இருக்கக் கூடும். ஆனால், அத்தகைய சூழல்களைக் கடந்து செல்லும் திறமை தலைவருக்கு அவசியம். அத்துடன், வேலை முறைகளில் புதிய அம்சங்களைப் புகுத்தி வெற்றி பெறவும் தெரிந்திருக்க வேண்டும்.

  9. விவாதம்: நிறுவனத்தின் செயல்பாடுகளில் விவாதங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஒவ்வொருவரும் தங்களது யோசனைகளை தயக்கமின்றி தெரிவிக்கும் சூழலை அதிகாரி ஏற்படுத்தித் தர வேண்டும். நிறுவனத்தின் செயல்பாடுகளில் தங்களுடைய யோசனைகளும் பங்கு வகிக்கின்றன என்பது ஊழியர்களுக்குப் புரிந்தால், அது நிறுவனத்தின் வளர்ச்சியில் நிச்சயம் எதிரொலிக்கும்.

  10. தொடர்புகள்: நிறுவனத்தில் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு, தொடர்புகள் முக்கியம். அவர்களது தொடர்புகளை நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும். அதேபோல், தனது கீழ்மட்ட ஊழியர்களுக்குத் தேவையான குறிப்புகளும், தகவல்களும் எளிதாகச் சென்றடைகிறதா? என்பதைக் கவனிக்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai