சுடச்சுட

  
  3im1

  உனக்கு மூளை இருக்கா?'' என்று சிலர் கிண்டலாகக் கேட்பதுண்டு. நாம் அனைவரும், மூளையோடுதான் பிறக்கிறோம். ஆனால், அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பது தான் கேள்வி. அத்தகைய மூளையின் சக்தியை, பயன்பாட்டைப் பொறுத்தே நினைவாற்றல் அமையும்.

  எந்தவிதமான சூழ்நிலைக்கு ஏற்றவாறும், தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கும், மாற்றிக் கொள்வதற்கும் ஏற்ற ஆற்றல் மனித மூளைக்கு உண்டு என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மூளையின் சக்தியை, நாம் எந்த வயதிலும் தூண்ட முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

  நியூரோ பிளாஸ்டிசிட்டி: சரியான விதத்தில் மூளையைத் தூண்டினால் நினைவாற்றல் பெருகும். தேர்வுக்குத் தயாராகும் மாணவராக இருந்தாலும் சரி, வேலைக்குச் செல்லும் நடுத்தர வயதினராக இருந்தாலும் சரி, ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களானாலும் சரி, யார் வேண்டுமானாலும் நினைவாற்றலைப் பெருக்க முடியும். இந்த ஆற்றலுக்கு, நியூரோ பிளாஸ்டிசிட்டி என்று பெயர்.

  தொடர் பயிற்சி அவசியம்: நினைவாற்றல் பெருக, மூளைக்கு தொடர்ந்து பயிற்சி கொடுப்பது அவசியம். உடல் தசைகளுக்கு வலுவூட்டும் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள, தசைகள் வலுப்பெறும். பயிற்சிகளைக் கைவிட்டால், தசைகள் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும். அதைப் போலத் தான், நினைவாற்றலும்.

  மூளையை வலுப்படுத்த: நமக்குப் பழக்கமில்லாத புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும், அவற்றில் பயிற்சி பெறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

  அது சவாலானதாக இருக்கக்கூடும். எனினும், ஏற்கெனவே பழகிய விஷயங்களில் தொடர்ந்து பயிற்சி பெறுவது மூளைக்கு வலு சேர்க்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  சவாலான சந்தர்ப்பங்களில் மட்டுமே, ஒருவரால் முழு கவனத்தையும் செலுத்தி செயலில் ஈடுபட முடியும். உதாரணமாக, இசையில் பயிற்சி மேற்கொள்ளும்போது, ஏற்கெனவே தெரிந்த சங்கதிகளை திரும்பத் திரும்ப பழகாமல், புதிய சங்கதிகளை கற்கப் பழக வேண்டும்.

  அதேபோல், செஸ் விளையாடுவது, ஃபிரெஞ்சு மொழியில் பேசிப் பழகுவது, கோல்ஃப் விளையாடுவது போன்ற புதியனவற்றை நாம் பழக முயலலாம். இவையும், நினைவாற்றலைப் பெருக்க உதவும்.

  சிலர் "சுடோகு' போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வர். இது, உண்மையிலேயே நினைவாற்றலைப் பெருக்க உதவுமா? என்பது சந்தேகமே.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai