சுடச்சுட

  
  3im4

  காலை ஆறு மணிக்கு பாண்டிச்சேரியில் புரொபஸர், கணேஷ் மற்றும் குட்டிப்புலி ஒரு டீக்கடைக்கு செல்கிறார்கள். டீ மாஸ்டர் செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் ஒரு பெஞ்சில் உட்கார்கிறார்கள். எதிரில் உள்ள பெஞ்சில் ஒரு வயதானவர் வெள்ளை வேட்டி சட்டையில் இருக்கிறார். அவர் டீ குடித்தபடி நாளிதழ் படிக்கிறார்.

   

  கணேஷ்: சார் நீங்க growl பத்தி சொன்னீங்க. அதை எப்பிடி உச்சரிக்கிறது?

  புரொபஸர்: க்ரெளள்

  கணேஷ்: கிரெளள்

  புரொபஸர்: இல்ல தப்பு. கி-ன்னு சொல்லக் கூடாது. "க்' ஓசையில துவங்கணும். ஆனா அது தனியா தெரியாம மென்மையா சொல்லணும். க்க அடித்தொண்டையில ஆரம்பிக்கணும். "ரெள' ஒலி வரப்போ தான் வாய் திறக்கணும். கொஞ்சம் பயிற்சி பண்ணினா வந்துடும்.

  அப்போது அங்கே நாய் ஜூலி மோப்பம் பிடித்து வருகிறது.

  ஜூலி: இங்க ஒரு bad smell வருதே

  குட்டிப்புலி: கிர்ர்ர்ர்

  ஜூலி பல்லைக் காட்டி சீறுகிறது: கிர்ர்ர்

  கணேஷ்: சார் Julie growls

   

  புரொபஸர்: இல்ல Julie snarls. நாய் பல்லைக் காட்டி சீறினா அது snarling.

  குட்டிப்புலி கர்ஜிக்கிறான்.

  டீக்கடைக்காரர் பதறி வருகிறார்: ஐயோ என்னாச்சு?

  புரொபஸர்: ஒண்ணும் இல்ல. மாஸ்டர் நீங்க மூணு டீ போடுங்க.

  அவர் போகிறார்.

  புரொபஸர்: Julie quiet. (கணேஷைப் பார்த்து) ஜூலி குரைக்கிறதை எப்பிடி இங்கீலீஷ்ல சொல்றது தெரியுமா?

  கணேஷ்: Julie barked.

  புரொபஸர்: Good. "ர்' ஒலி வெளித் தெரியாம உச்சரிக்கணும்.

  கணேஷ்: சார் ஊர்ல நாய் வள்வள்னு குரைக்குதுன்னு சொல்வாங்களே?

  புரொபஸர்: அது ஹ்ஹல். The dog yapped. அதாவது கூர்மையான குரல்ல வேகமா குரைக்கிறது. கோபத்தில கத்துறதை சள்ளுன்னு விழுந்தார்னு சொல்வாங்களே, அதையும் She yapped how dare youன்னு சொல்லலாம். உச்சரிப்பு யாப். தமிழ்ல யாருன்னு சொல்றப்போ வர "யா'. ஆனா "யா'வை அந்த அளவுக்கு இழுக்க கூடாது.

  கணேஷ்: சார் நாய் வாலை மிதிச்சோமுன்னா அது கீன்னு அழுமே, அதை என்ன சொல்றது?

  ஜூலி: yelp. ஆனா அதே நாய் திரும்ப உன்னை கடிச்சா you scream. screamன்னா வலி பொறுக்காம கத்துறது

  புரொபஸர்: உன் காலை யாராவது மிதிச்சு நீ கத்தினா கூட அது ஹ்ங்ப்ல் தான். Ganesh yelped as I accidentally crushed his toe. Crushன்னா காலை மிதிச்சு காயம் ஏற்படுத்துறது. பர்ங்ன்னா கால் விரல்.

  குட்டிப்புலி: toe crushing குங் பூவில் ஒரு முக்கியமான டெக்னீக். Fist of Fury படத்துல புரூஸ் லீ எதிரிகளோட காலை சட்சட்னு மிதிச்சு அவங்களை வீழ்த்துவார்.

  கணேஷ்: Fistன்னா?

  புரொபஸர்: முஷ்டியை முறுக்கினா அது ச்ண்ள்ற். கோபத்தில வர ஆவேசம் தான் Fist.

  மாஸ்டர் டீ கொண்டு வருகிறார்.

  கணேஷ்: சார் டீ போடுறவரை ஏன் டீ மாஸ்டர்னு சொல்றாங்க?

  புரொபஸர்: அந்த பெயர் ஜப்பானியர்களோட தேநீர் சடங்கில் இருந்து வருது. ஜப்பானில் டீ போடுறதோ குடிக்கிறதோ நாம தெருமுனையில் நின்னு அவசரமா பஜ்ஜியை பிச்சு முழுங்கி குடிக்கிற மாதிரி இல்ல. அவங்களுக்கு அது நம்மளோட கோயில் சிறப்பு பூஜை மாதிரி. டீயை எப்படித் தயாரிப்பது, டீ கோப்பைகளை எப்படி கழுவி விருந்தினருக்கு அளிப்பது, டீ அருந்தும் அறையை எப்படி அலங்கரிப்பது பற்றி அவங்களுக்கு திட்டவட்டமான விதிமுறைகள் இருக்கு. ஜென் பெளத்த மதத்தில் டீ செய்வதும் அதை குடிப்பதும் ஒரு ஆன்மீகச் செயல்பாடு. இந்தச் சடங்கை சரியா செய்ய தெரிஞ்சவங்க தான் ஜப்பானில் டீ மாஸ்டர். அங்கிருந்து தான் நம்ம ஊருக்கு இந்த பெயர் வந்திருக்கணும்.

  குட்டிப்புலி: சார் அது ஏன் ஜப்பானில் இருந்து வந்துச்சு?

  புரொபஸர்: டீயே சீனாவில இருந்து ஜப்பானுக்குப் போய் அங்கிருந்து உலகமெல்லாம் பரவினது தானே?

  கணேஷ்: ஆனா டீங்கிறது இங்கிலீஷ் இல்லியா?

  புரொபஸர்: இல்லை. அது ஜப்பானிய வார்த்தை. அமோய் டெ என்கிற ஜப்பானிய துறைமுகத்தில் இருந்து ஐரோப்பாவுக்கு டீ முதன்முறையாய் ஏற்றுமதி ஆச்சு. அதில் உள்ள டெவில் இருந்து இங்கிலீஷில் டீ வந்தது. அதே போல "சா' என்கிற துறைமுகத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பட்டதால் நம்மூர் தேநீருக்கு "சாய்' என்ற பெயர் வந்துது. இந்தியில் சாய் என்றும் மலையாளத்தில் சாயா என்றும் கூறுகிறார்கள்.

  ஜூலி குட்டிப்புலியிடம்: டீ எப்பிடி?

  குட்டிப்புலி: நான் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தான் பொதுவா டீ சாப்பிடுவேன்.

  டீ மாஸ்டர்: எங்க நகர் தலைவரே காலைல முதல் வேலையா என் கடையில் வந்து டீ குடிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பார். அதோ உங்க எதிர்ல இருக்காரே அவர் தான் எங்க நகர் தலைவர்

  எதிர்பெஞ்சில் இருக்கும் நகர் தலைவர் அவர்களை நோக்கி வணங்குகிறார். அவர்கள் அதிர்ச்சியில் மெளனமாகிறார்கள். குட்டிப்புலி எழுந்து நின்று கர்ஜிக்கிறான். டீ மாஸ்டர் பயந்து கடையை விட்டே ஓடுகிறார்.

  நகர் தலைவர்: தம்பி ஏன் இப்பிடி ஆர்ப்பாட்டம் பண்றே? மக்கள் உன்னைப் பார்த்து பயந்து ஓடுறது பெருமை இல்ல...

  கணேஷ்: நகர் தலைவர் இப்பிடி எளிமையா இருக்கிறதுக்கு இங்கிலீஷ்ல என்ன சார்? சிம்பிள்னு சொல்லலாமா?

  புரொபஸர்: Humbleன்னு சொல்லலாம். Modest, unassuming அப்டீன்னும் சொல்லலாம்.

  குட்டிப்புலி: சாரி சார். ஊர்ல I was made to eat the humble pie. அதான் இங்க ஓடி வந்திட்டேன்.

  கணேஷ்: ஹம்பிள் பையா?

  புரொபஸர்: made to eat the humble pieன்னா திமிரை அடக்கிட்டாங்கன்னு அர்த்தம்.

  நகர் தலைவர்: சரிப்பா. இங்கயாவது அடக்கமா இரு,

   

  (இனியும் பேசுவோம்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai