சுடச்சுட

  

  தீபாவளி சிறப்புக் கவிதை

  dewali.jpg

  அந்த
  ஒளி வெள்ளத்தை
  அள்ளிப் பருகலாமெனத் தோன்றும்

  புஸ்வாணம்
  புஸ்பித்து பொழிவதிலிருந்து
  ஆனந்தத்தை அப்படியே வாங்கி
  பதுக்கலாம்

  தாறுமாறாய் வெடித்து
  சிதறிக் கிடக்கும் பட்டாசுகளின்
  தாள்களிலிருந்து
  காகிதம் தயாரிக்கலாம்

  சிறார்களின்
  அடிவயிற்றிலிருந்து பீறிட்டுவரும்
  சந்தோச குரலானது
  தீபத்தின் முகத்தில்
  வெற்றியை பொருத்துகிறது

  ஒவ்வொரு
  பட்டாசின் வெவ்வேறான
  வெடிப்புகளின்
  நீளொலிக்கு ஏற்ப
  இல்லம் ஒளி நடனம்
  புரிகிறது

  இன்னாரென்றில்லாது
  எல்லாரின்
  மனக்கால்களும் இறங்கி களிக்கும்
  ஒளிக் களமானது
  ஒருமைப்பாட்டினை விவரிக்கிறது
  கதிரொளியா
  நிலவொளியா என
  இல்லாது காணும்
  இந்திய நிலப்பரப்பினில்
  ஒளி நடவு
  நடந்துகொண்டிருக்கிறது

  இதில்
  மகிழ்ச்சியும் அழகும்
  மனக்குளத்தில்
  நீச்சலடித்துக் குளிக்கும்
  லயிப்பில்
  மனம் பட்டாம்பூச்சியாகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai