சுடச்சுட

  
  Online-Applications

  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப் படிநிலைகள்:

   

  CBSE - நெட் தேர்வு எழுத விரும்புவோர் www.cbsenet.nic.in  எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

   

  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முன்பு ஸ்கேன் செய்த மார்பளவுப் புகைப்படத்தை (Passport Size) வைத்துக்கொள்ள வேண்டும்.

   

  நெட் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்த பின்பு, கணினியின் மூலம் வங்கிச் சலான் எடுத்து, ஏதாவதொரு ஸ்டேட் பாங்க் கிளையில் ரூ.40-க்குப் பணம் செலுத்திட வேண்டும். (கமிசன் உள்பட). பணம் செலுத்திய இரண்டு நாள்களுக்கு முன்பு (by SBI) பணம் செலுத்தியதன் நிலையை CBSE இணையதளம் மூலம் அறிந்துகொள்ள வேண்டும்.

   

  புகைப்பட அடையாள அட்டை ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்ட நுழைவுத்தேர்வு அட்டை ஆகியவற்றைத் தேர்வு நாளன்று மையத்திற்கு மாணவர்கள் கொண்டு வர வேண்டும்.

   

  விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் முன்பு அதற்கான அறிவுரைகளைச் சரியாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள முறையைத் தவிர, பணவிடை, டிடி, ஐபிஓ மூலம் செலுத்தினால் நிராகரிக்கப்படும்.

   

  விண்ணப்பிக்க கடைசிநேர நெருக்கடியை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இணையதளச் சிக்கல்கள், இயற்கைச் சிக்கல்கள் எதுவும் விண்ணப்பிக்கும்போது ஏற்பட்டால் அவற்றுக்கு CBSE பொறுப்பல்ல.

   

  “Population Studies’ தாள் எழுதுவதற்கு கணக்கு / புள்ளியியல் பாடம் படித்துள்ளோரும் தகுதியுடையவர்களாவர் (Code No: 15)

   

  கலையியல் (Humanities) பட்டம் பெற்றோர் (மொழிப் பாடங்கள் உள்பட) மற்றும் சமூக அறிவியல் பட்டம் பெற்றோர் உள்பட "Woman Studies’ பாடத் தேர்வு எழுதலாம் (Code No: 74)

   

  ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் முன் மாணவர்கள் கீழ்க்காணும் விவரங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

   

  நெட் தேர்வு எழுத விரும்புவோர் தங்களுக்குக் கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளதா என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

   

  விண்ணப்பப் படிவத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மாணவர் எந்த வகுப்பைச் சார்ந்தவர் (General / OBC / SC / ST / PWD) என்பதைச் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

   

  PWD மாணவர்கள் மட்டும் அவர்களுக்கென்று விண்ணப்பப் படிவத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். மற்றவர்கள் அந்தப் பகுதியை அப்படியே விட்டுவிட வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai