Enable Javscript for better performance
இணைய வெளியினிலே!- Dinamani

சுடச்சுட

  
  computer-on-grass

  முக நூலிலிருந்து

   

  பள்ளிக்கூடம் வைத்தால் அடைமழை பெய்கிறது,விடுமுறை விட்டால் விளையாட ஏதுவாக வெயிலடிக்கிறது... கடவுளும் கூட குழந்தைகள் பக்கம் தான் இருக்கிறார்.

   

  -பூபதி முருகேஷ்.

   

  அஜித்தைக் கௌரவப் படுத்தவே சென்னைக்கு தலைநகரம் என பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

   

  தலை மேல் எச்சம் போட்ட காக்கையை தேடிப் பிடித்து கொல்லவா முடியும்?

  துடைத்துக் கொண்டு போக வேண்டியதுதான் - தத்துவம்

   

  -ஆதிரா ஆனந்த்.

   

  அவளுக்கு சில

  நுணுக்கமான

  பிரார்த்தனைகள் உண்டு

   

  நிறுத்தத்துக்குப் போனதும்

  நாற்பத்தேழு டி கிடைக்க வேண்டும்

  கிடைத்தபின் இருக்கைகள்

  காலியாக இருக்க வேண்டும்

  முன்புறப் படிக்கட்டிருக்கை

  அவளுக்கே கிடைக்க வேண்டும்

   

  மெல்லியதாய் தூவல்மழை

  அவளுக்கென பெய்ய வேண்டும்

  பெய்மழையில் அவள்மட்டும்

  நனையாதிருக்க வேண்டும்

   

  எப்போதும் சுமக்கும் சுமையை

  வைக்க இடம் இருக்க வேண்டும்

  ஏதோ வொரு ராஜகுமாரன்

  ஏறியிருக்க வேண்டும்

   

  எல்லாப் பெண்களிலும் அவளை

  தேர்வு செய்திருக்க வேண்டும்

  இருக்கைக்கு வரும் நடத்துனர்

  இன்முகத்துடன் சீட்டு

  கொடுத்திட வேண்டும்

   

  விடலைப் பையன்கள் அவளை

  சீண்டாதிருக்க வேண்டும்

  இந்த எளிய பிரார்த்தனையை

  நிறைவேற்றும் கடவுள் ஒன்றும்

  அவளுக்காக இருக்க வேண்டும்.

   

  - நந்தன் ஸ்ரீதரன்.

   

   

  கழுதையிடம் 1000 ரூபாய் நோட்டை கொடுத்தால் அதை யோசிக்காமல் தின்றுவிடும். ஆனால் அந்த காசுக்கு ஒரு ரீம் பேப்பர் வாங்கி திங்கலாம்னு அந்த கழுதைக்கு தெரியாது. நீங்கள் செலவழிக்கும் நேரத்தின் மதிப்பு தெரியாதவர்களுக்காக உங்கள் நேரத்தை கொல்லாதீர்கள்....

   

   

  தர்க்கத்தில் சுபக்கம், பரபக்கம் என்று இரு பகுதிகள் உண்டு... சுபக்கம் என்பது நாம் நம்பும் தரப்பு, பரபக்கம் என்பது மற்றமை. சுபக்கத்தை விரித்துரைக்க புகும் முன் பரபக்கத்தை விளக்கி அதன் போதாமைகளைச் சொல்லி சுபக்கத்தை நிறுவுவது தர்க்கவாதவியல். (பௌத்த மரபு இந்த தர்க்கமுறைமைக்கு பெரும் பங்களிப்பு செய்திருக்கிறது) கலைக்கும் அறிவுக்கும் தீராத பகைப்புலம் ஒன்று தமிழ்ச்சூழலில் எப்போதும் இருந்து வருகிறது. கலை, தத்துவம் இரண்டிலும் ஆர்வமுள்ளவனான என்னைப் போன்றவர்கள் இதில் உணரும் சிக்கல் கலைஞர்களாகட்டும், சிந்தனையாளர்களாகட்டும் பரபக்கம் என்றொரு தரப்பே இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். சிக்கலே இதுதான். தாம் நம்புவது சரி என்று நினைப்பதில் தவறு இல்லை. மற்றமையை மறுப்பது ஒருவகையில் தம்மையே தாம் மறுப்பதுதான். முரண்கள் ஒன்றை ஒன்று மறுத்தும், வெட்டியும், ஒட்டியும் இயங்குவதன் வழியாகத்தான் சிந்தனையே முன்னகரும். முரணியங்கியல் என்பதும் அதுதான்.

   

  - இளங்கோ கிருஷ்ணன்.

   

  தாமிரபரணி தண்ணி க்ளியரா இருக்குமே அங்க ஏன் போறான் பெப்சிக்காரன்? திருப்பூர் வந்துருங்கடா.. நொய்யல் தண்ணிய அப்டியே பாட்டில்ல புடிச்சு கொஞ்சம் சக்கரை போட்டா பெப்சி ரெடி. கலர் கூட கலக்கத் தேவையிருக்காது.

   

  -ராஜன் ராதாமணாளன்.

   

   

  சின்னத் தெருவில்கூட

  சிக்னலைப் பொழியும்

  செல்போன் டவர்கள்

  சிட்டுக்குருவி

  சிணுங்குகிறது

  செல்போன் ரிங் டோனில்..

   

  -முருகேஷ் பாபு.

   

   

   

  வலைத்தளத்திலிருந்து

   

  "அப்பாவுக்குக் குளிக்க ஒரு மணி நேரம் அவசியப்படும். அநியாயத்துக்கு ஏன் அவர் தாமதம் பண்ணுகிறார் என்று இருக்கும். அது குழந்தைப் பருவம். கேள்விகளால் மட்டுமே ஆன பருவம். இப்போது தெரிகிறது.

  குளிப்பது அழுக்குப் போகவா? அழுக்குப் போகக் குளித்தது யார்? குளிப்பது ஒரு சுகம்.

  உச்சந்தலையில் விழுந்த குளிர்ச்சி வழிந்து வழிந்து பாதத்துக்கு வருகிற இன்பத்துக்குத் தானே குளிப்பது... குளித்த பின் ஏற்படுகிற புத்துணர்ச்சிக்குத்தானே குளிப்பது? அப்பா ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டது நியாயம் என்றே தோன்றுகிறது.

   

  - பிரபஞ்சன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai