சுடச்சுட

  
  17im8

  நற்பது வயதைத் தாண்டினால்தான் உடல் எடை கூடும் என்பது முன்பு. இப்போது 20 வயதுக்குள்ளாகவே உடல் எடை கன்னாபின்னாவென்று அதிகரித்துவிடுகிறது. இதற்குக் காரணம் ஃபாஸ்ட் ஃபுட் மட்டுமல்ல. உடற்பயிற்சி இல்லாதது, கம்ப்யூட்டர், வீடியோ கேம்கள், செல்போன், ஃபேஸ் புக், வாட்ஸ் அப்... என அடுக்கிக் கொண்டே போகலாம்.

  உடல் எடை குறைய கொழுப்புச் சத்து நிறைந்த உணவை தேவைக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது என்பார்கள். நார்ச்சத்து மிக்க உணவுகள், கீரைகள், காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பார்கள். எதையும் அளவாகச் சாப்பிட வேண்டும் என்று இன்னொரு அறிவுரையையும் சொல்வார்கள். ஆனால் இவற்றை எல்லாம் நடைமுறையில் எப்படிச் செய்வது? என்பதுதான் எல்லாருக்கும் பிரச்னை, அறிவுரை சொல்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும்.

   

  நாம் சாப்பிடும் உணவை எப்படிக் குறைக்கலாம்?

   

  1. எந்த உணவைச் சாப்பிடுவதற்காக வாயருகே கொண்டு செல்லும் முன்பு முதலில் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  இப்போது எனக்குப் பசிக்கிறதா?

  இதை ஏன் நான் சாப்பிட வேண்டும்?

  இதைச் சாப்பிடுவது எனது உடல் நலத்தை மேம்படுத்துமா?

  அப்படியே சாப்பிட்டாலும் எனது உடலுக்குத் தேவையான அளவு சாப்பிட்டதும் எப்போது சாப்பிடுவதை நிறுத்துவது?

   

  2. உங்களுக்கு எந்த அளவுக்குப் புரதச் சத்து தேவை? எந்த அளவுக்கு தாது உப்புகள் தேவை? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய சாப்பாட்டுத் தட்டில் நீங்கள் சாப்பிடும் மொத்த உணவில் பாதி காய்கறிகளாக இருக்கட்டும். கால் பகுதி புரதச் சத்தாகவும், மீதி கால் பகுதி மாவுச் சத்தாக இருக்கட்டும்.

   

  3. மெதுவாகச் சாப்பிடுங்கள். சாப்பிடுவதற்கு முன்பு அமைதியாக சிறு தியானம் செய்யுங்கள். பத்துக் கவளம் சாப்பிட்டதும் உங்களுடைய பசி எந்த அளவுக்கு இருக்கிறது?என்று யோசித்து, அதற்கேற்ப சாப்பிடும் அளவைத் தீர்மானியுங்கள்.

   

  4. கையால் சாப்பிடுவதைக் குறைத்து சிறிய ஸ்பூனில், சாப்பிடுங்கள். முள் கரண்டியைப் பயன்படுத்தி சாப்பிடுவது இன்னும் நல்லது. இது நீங்கள் சாப்பிடும் உணவின் அளவைக் குறையச் செய்யும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai