நெடுஞ்சாலைத் துறையில் வேலை
By -வி.குமாரமுருகன் | Published on : 17th November 2015 07:04 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 188 பணியிடங்கள் உள்ளன.
ஊதிய விகிதம் : 9300-34800 மற்றும் தர ஊதியம் 4200.
விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டயப் படிப்பு
(டிப்ளமா இன் சிவில்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1-7-2015 தேதியில், ஆதிதிராவிடர், அருந்ததியர்கள் மற்றும் பழங்குடியின வகுப்பினர்களின் வயது 18 வயது முதல் 35 வரை இருக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) ஆகியோரின் வயது 18 முதல் 32 வயது வரை இருக்கலாம். இதர வகுப்பினர்கள் 18 முதல் 30 வயது வரை இருக்கலாம். நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி சிறப்புச் சலுகை உள்ளவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பத்தை www.tnhighways.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து படிவத்தை பூர்த்தி செய்து பதிவு அஞ்சல் மூலமாக நவம்பர் 18 ஆம் தேதிக்குள் இணை இயக்குநர் (நிர்வாகம்), முதன்மை இயக்குநர் அலுவலகம், (நெடுஞ்சாலைத்துறை), பொதுப்பணித்துறை வளாகம், சேப்பாக்கம்,சென்னை -600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.