சுடச்சுட

  

  சுய முன்னேற்றம் - 11: மனப்பாடமும் செய்ய வேண்டும்!

  By முனைவர் வ.வே.சு. கல்வியாளர்  |   Published on : 24th November 2015 01:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  im5

  (A+b)2= A2+B2+2AB

   

  இந்த அல்ஜீப்ரா ஃபார்முலா தெரியாத பள்ளிப் பிள்ளைகளே இல்லை. கேட்டுப் பாருங்கள். கணக்கைப் பாடமாகக் கல்லூரியில் எடுத்துப் படிக்காத மாணவர்களுக்கும் இந்த ஃபார்முலா தெரியும். ஒப்பிப்பதற்கு ஓர் உலக மகா உதாரணமே, இந்த ஏ ப்ளஸ் பி தி ஹோல் ஸ்கொயர்தான்.

  பல துறைகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் குழுவில் பேசியபோது, மனப்பாடம் செய்வது சரியா? தவறா? என்று கேட்டேன். 50 பேர் இருந்த வகுப்பில் ஒரே ஒரு மாணவி மட்டும் ""பை ஹார்ட் செய்வது சரி'' என்றார். மற்ற அனைவரும் அது தவறு என்றனர்.

  ""நீ மட்டும் ஏன் மனப்பாடம் செய்வது சரி என்கிறாய்?'' மாணவியிடம் கேட்டேன்.

  ""சார் எல்லாவற்றையும் பை ஹார்ட் பண்ணறது சரின்னு நான் சொல்லவில்ல. ஆனால் ஏ ப்ளஸ் பி தி ஹோல் ஸ்கொயர்ட் போன்ற ஃபார்முலாக்கள்,கணக்கு, பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி இதுல வர பல ஃபார்முலாக்கள் எல்லாத்தையும் மனப்பாடம் செய்தால்தான் மேலே ப்ராப்ளம்ஸ் போடுவது ஈஸி'' என்றாள்.

  நான் மறுபடியும் வகுப்பைப் பார்த்தேன்.

  ""இந்த மாணவி சொல்வதில் உண்மை இருந்தால், இதைப் போல மனப்பாடம் செய்யத் தக்க வேறு பகுதிகள் உண்டா?''

  வகுப்பறை ஒரு நிமிடம் அமைதியில் ஆழ்ந்தது. பிறகு மாணவர்கள் கலந்து பேசிக் கொண்டனர். ஐந்து நிமிடங்கள் கழிந்தன.

  ஒரு மாணவர் எழுந்தார்.

  ""எஸ் சார்... டெஃப்பனிஷன் (ஈங்ச்ண்ய்ண்ற்ண்ர்ய்), அறிவியல் கொள்கைகள் (Definition) போன்றவற்றையும் மக் அப் (ஙன்ஞ் ன்ல்) செய்வது தேவை'' என்றார்.

  பயாலஜி, மருத்துவம், பொறியியல்துறை மாணவர்கள் கலைச் சொற்கள் (Technical terms) எல்லாவற்றையும் மனப்பாடம் செய்துதான் ஆகவேண்டும். இலக்கியம் பயிலும் மாணவர்கள், சட்டம் பயில்பவர்கள்... ஏன் வரலாறு, பொருளாதாரம், தத்துவம் படிக்கக் கூடிய மாணவர்கள் அனைவருக்கும் மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகள் இருக்கின்றன. தேவையானவற்றை மனப்பாடம் செய்வது அவசியம்.

  சாதனை படைத்தோரெல்லாம் மனப்பாடம் செய்வதிலும் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதுதான் வரலாறு. கணித மேதை ராமானுஜம் பல கடினமான மேதெமெடிக்ஸ் ப்ராப்ளங்களை மனதிலேயே போட்டு விடை சொல்லிவிடுவாராம். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

  கால்குலேடர் வருவதற்கு முன்னால் வாய்ப்பாடு நினைவில் இருந்தது கம்ப்யூட்டர் வருவதற்கு முன்னால் கையெழுத்து ஒழுங்காக இருந்தது ஈ மெயில் வருவதற்கு முன்னால் நண்பர்களின் முகவரிகள் ஞாபகம் இருந்தது. செல் போன் கல்சர் வருவதன் முன், ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஐம்பது லேண்ட் லைன் தொலைபேசி எண்களையாவது நினைவில் வைத்திருந்தார்கள். இன்றோ தேசிய கீதத்தையே ஒரு மாணவி ஐ பேடைப் பார்த்துப் பாடுகிறார்.

  விலங்குகளில் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளில் ஒன்று நினைவாற்றல். குறுகிய கால நினைவைப் (short-term memory) பொறுத்தவரை விலங்குகளுக்கு 27 வினாடிகள்தான் நினைவு நிற்கும். ஓர் ஆய்வில் மீன்கள் 12 நாட்களுக்கு தமக்கு உணவு கிடைக்கும் இடத்தை நினைவில் வைத்திருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு உள்ள நினைவாற்றல் பல ஆண்டுகள் நீடிக்கும் தன்மை கொண்டது. இந்த இயற்கை வரத்தை வீணடிக்கலாமா?

  மாறிவிட்ட இன்றைய நிலையில் மாணவர்கள் தீவிர முயற்சியும் பயிற்சியும் செய்துதான் தங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு மனப்பாடப் பகுதிகளைப் படித்துப் பயிற்சி செய்ய வேண்டும். இளைஞர்கள் இன்று தேடிச் செல்லும் பல நல்ல வேலைகளில் நினைவாற்றல் என்பது மிகவும் தேவைப்படும் திறமையாகும்.

  நீங்கள் நடுநிலை அல்லது உயர்நிலை அதிகாரிகளாகப் பணி செய்யும் போது, கம்பெனியின் எதிர்பார்ப்புகளை சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம். (டழ்ர்ச்ண்ப்ங் ஈங்ற்ஹண்ப்ண்ய்ஞ்) அதை விளக்கமாக விவரித்துச் சொல்லும் போதும், நிறுவனத்தின் கொள்கைகளில் மாற்றம் வந்து விடாமல் அப்படியே சொல்ல வேண்டும்.

  ""ஏன்டா பானிபட் யுத்தம் இருபதாம் நூற்றாண்டில் நடந்தது என்று எழுதியிருக்கே?

  நீங்கதானே சார் நெட்ரூஅடிச்சு எழுதாதே... ஒரிஜினலா எழுதுன்னீங்க.. அதுதான்.. மாத்தி யோசிச்சேன். தேதி மாத்தி எழுதிட்டேன்''

  இப்படி மாற்றி எழுதினால் தலையெழுத்தே மாறிவிடும். ஒழுங்காக மனப்பாடம் பண்ணி எழுத வேண்டும்.

  யோசித்துப் பார்த்தால், இன்று பிரபலமாக இருக்கின்ற மார்க்கெட்டிங், பைனான்ஸ் கம்யூட்டர், ஐ.டி போன்ற எந்தத் துறையில் பணிபுரிந்தாலும், ஏதோ சிலவற்றைத் தொடர்ந்து பை ஹார்ட் செய்ய வேண்டும் என்பது புரிகின்றது.

  எனவே மனப்பாடம் செய்வது தவறல்ல தரக் குறைவும் அல்ல. அது தகுதியை வளர்த்துக் கொள்ள உதவும் அடிப்படைப் பயிற்சி.

   

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai