சுடச்சுட

  

  தரமான கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்க...!

  By வி. குமார முருகன்  |   Published on : 24th November 2015 11:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  im2

  தேசிய அளவில் தரமான கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி கற்க ஆசைப்படுபவர்கள் சிமேட் தேர்வு எழுதலாம்.

  அப்படி தேர்வு எழுதி சிறப்பு மதிப்பெண் பெறுபவர்கள் இந்திய அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.

  அத்தகைய தேர்வு 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய அரசின் மக்கள் நல்வாழ்த்துறையின் ஆலோசனையின் படி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்( அஐஇபஉ),மேலாண்மை படிப்பில் சேருவதற்காக சிமேட் (ஸ்ரீம்ஹற்) என்ற தேசிய நுழைவுத் தேர்வினை நடத்துகிறது. இத்தேர்வினை எழுத விரும்புபவர்கள் டிசம்பர்-10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 5 ஆம் தேதி தேர்வு எழுதுவதற்கான அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  தேர்வு ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறும். 3 மணி நேரம் ஆன்லைன் தேர்வாக நடைபெறும் இதில் பொதுவான கேள்விகள், தர்க்கரீதியிலான கேள்விகள், மொழித்திறன் அறிவை சோதிக்கும் வகையிலான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இந்த மதிப்பெண்ணை அஐஇபஉ யால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு உயர்கல்விக்கு அனுமதி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  கூடுதல் விபரங்களுக்கு: <www.aicte-cmat.in>

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai