சுடச்சுட

  
  im7

  ரொபஸர் வகுப்பில் மெதுவான குரலில் பாடம் நடத்துகிறார். கணேஷ் வாசலில் வந்து நின்று ""சார்'' என்கிறான். புரொபஸருக்குக் கேட்கவில்லை. அவன் மீண்டும் அழைக்க, தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் திடுக்கிட்டு நிமிர்கிறார்கள். அதுவரை போனில் பேஸ்ஃபுக் பார்த்துக் கொண்டிருந்த காவ்யா எனும் மாணவி போனை உள்ளே வைத்து விட்டு கவனிப்பது போல் பாவனை செய்கிறாள். மாணவர்களின் திடீர் மாற்றம் கண்டு புரொபஸர் அதிர்ச்சியாகி வாசலைப் பார்க்கிறார்.

  புரொபஸர் கணேஷைப் பார்த்து: என்ன இவ்வளவு லேட்?

  கணேஷ்: தெரியல சார்

  புரொபஸர்: என்னது தெரியலையா?

  கணேஷ்: என்ன காரணம் சொல்றதுன்னு தெரியல சார்

  புரொபஸர்: பரவாயில்ல. நீ வேணும்னா பஸ் லேட், மழை, உடம்பு முடியலேன்னு சொல்லியிருக்கலாம். உன் நேர்மையை பாராட்டுறேன். வந்து உட்கார்.

  கணேஷ்: சார் லேட்டுக்கும் லேட்டஸ்டுக்கும் என்ன வித்தியாசம்?

  புரொபஸர்: லேட்டுன்னா தாமதம். லேட்டஸ்டுன்னா ரொம்ப சமீபம்ன்னு அர்த்தம்.

  கணேஷ்: சார் அதிக தாமதா வந்தா ப்ஹற்ங்ழ்ன்னு சொல்லலாமா?

  புரொபஸர்: சொல்லலாம். I thought I would belate by 5 minutes. But I was later than thatன்னு சொல்லலாம். கஹற்ங்ழ்க்கு அப்புறமாய் என்றொரு அர்த்தமும் உண்டு. I will tell you laterன்னா இப்போ சொல்ல நேரம் இல்ல, பிறகு சொல்றேன்னு அர்த்தம். கூட ஒரு t  சேர்த்து latterன்னா இரண்டாவது என்று பொருள். அதாவது நீ பெண் பார்க்க போகிறாய். இரண்டு பெண்கள் நிற்கிறார்கள். ஒரே தோற்றம் கொண்டவர்கள். முதல் பெண் சிவப்பு சேலையும் அடுத்தவள் மஞ்சள் சேலையும் கட்டியிருக்கிறாள். நீ மஞ்சள் சேலையணிந்தவளைத் தேர்ந்தெடுத்தால் you choose the latter.

  கணேஷ்: சார் இங்கிலீஷ் பேப்பர்ல அப்துல் கலாமை late presidentன்னு போட்டிருந்தாங்க. அப்பிடீன்னா என்ன?

  புரொபஸர்: உயிருடன் இருக்கிற முன்னாள் ஜனாதிபதியை former presidentன்னு சொல்லலாம். காலமானவர் late president. அது போல காலமான கணவரை late husbandன்னு சொல்லலாம். அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட விசயத்தை வழிபடுகிறவர்களை laterன்னு சொல்வாங்க. சிலையை வழிபடுகிறவர் idolater.

  புரொபஸர் கணேஷை பார்த்து: சரி நீ உட்காரு.

  கணேஷ் முதல் பெஞ்சில் காவ்யா அருகில் உட்கார்கிறான். புரொபஸர் அவன் முகத்தை உற்றுப் பார்க்கிறார்.

  புரொபஸர்: என்னடாது முகத்தில் ஒரே வெள்ளை. திட்டு திட்டா இருக்குது?

  கணேஷ்: பவுடர் போட்டிருக்கேன் சார்

  புரொபஸர்: ஏன்டா இவ்வளவு போட்டிருக்கே?

  கணேஷ்: இல்லாட்டி ரொம்ப பிளேக்கா இருப்பேன் சார்

  புரொபஸர்: இப்போ சாம்பல் நிறமாயிட்டே. பிளேக்குன்னு சொல்லக் கூடாது. dark தான் சரி

  கணேஷ்: கறுப்புன்னா பிளேக் தானே சார்?

  புரொபஸர்: அப்பிடீன்னா சிகப்புன்னா redஆ? மனிதத் தோலைப் பொறுத்த மட்டிலே சிகப்பானவங்களே fair-skinnedன்னு சொல்லணும். கறுப்பானவங்க dark-skinned. பிளேக்குன்னா கறுப்பினத்தவர்கள் என்று பொருள். பழங்காலத்தில அவர்களை நீக்ரோ என்றார்கள். இப்போ பிளேக்ஸ் என்று அழைக்கிறார்கள்.

  காவ்யா: சார் இவன் பார்க்க நீக்ரோ மாதிரி தான் இருக்கிறான்.

  புரொபஸர்: உனக்கொண்ணு தெரியுமா? இந்த உலகத்தில உள்ள எல்லாரும் கறுப்பர்களிடம் இருந்து தோன்றினவர்கள் தான்.

  கணேஷ்: அப்போ ஏன் சார் சிலர் மட்டும் வெள்ளையா இருக்கிறாங்க?

  புரொபஸர்: தோலில் உள்ள மெலனின் என்கிற நிறமி தான் காரணம். அது குறைவாச் சுரக்கும் போது தோல் வெள்ளையாகுது. நிறைய சுரந்தால் கறுப்பாகுது. தோல் கறுப்பாக இருந்தால் அதிகமான வெயிலில் உள்ள புற ஊதாக் கதிர்கள் நம்மைப் பாதிக்காது. தோல் புற்றுநோய் வராது. அதனால் தான் வெப்பம் அதிகமுள்ள பகுதியில் உள்ளவர்கள் கறுப்பாக இருக்கிறோம். ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பி ஐரோப்பா போனவர்களுக்கு அங்கு வெயில் அதிகம் இல்லாததால் கறுப்பு நிறம் தேவையில்லாமல் ஆயிற்று. தோல் வெள்ளையாய் இருந்தால் தான் அங்கு குறைவாய் உள்ள வெயிலை அதிகமாய் உறிஞ்ச முடியும். அதனால் அங்கு போன கறுப்பர்கள் வெள்ளையர்கள் ஆனார்கள்.

  காவ்யா: சார் அப்பிடீன்னா unfair என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

  புரொபஸர்: Fairக்கு நியாயமான என்கிற பொருளும் உண்டு. ரேஷன் கடைகளை fair price shops என்றும் தான் சொல்கிறோம். Fairஇன் எதிர்பதம் unfair. அதாவது அநியாயம். நான் உங்களிடம் அநியாயமாய் நடந்து கொண்டால் I am being unfair to you. Fairக்கு மிதமான என்கிற பொருளும் உண்டு. ஒரு குறிப்பிட்ட படம் ஓடுவதற்கு சுமாரான வாய்ப்புண்டு என்றால் the film has a fair chance of doing well at box officeன்னு சொல்வோம். அதே போல கண்காட்சியும் fair தான். உதாரணமா புத்தகக் கண்காட்சி என்றால் book fair. பழங்காலத்தில் fair என்றால் அழகு என்கிற பொருளும் இருந்தது. Fair என்கிற வார்த்தையே அழகு என்கிற ஜெர்மானிய சொல்லில் இருந்து தான் வந்தது.

  கணேஷ்: சிகப்புன்னா அழகுன்னு அந்த வார்த்தையிலேயே அர்த்தம் வருதே சார். அப்பிடீன்னா கறுப்புன்னா அழகு இல்லேன்னு ஆயிடுதே

  புரொபஸர்: இது ஒரு மறைமுகமான இனவாதம் தான்.

   

  (இனியும் பேசுவோம்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai