சுடச்சுட

  

  வேலைக்கு ஓர் இன்ஸ்சூரன்ஸ் பாலிஸி!

  By -பாரத் தி.நந்தகுமார்.  |   Published on : 24th November 2015 11:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  im3

  இன்றைய வாழ்வின் முக்கிய ஒரு அம்சமாக இன்ஸ்சூரன்ஸ் என்பது மாறியுள்ளது. இன்ஸ்சூரன்ஸ் இல்லாதவர் இயலாதவர் என்ற நிலைதான் இப்போது.

  ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எடைபோட்டு எவ்வளவு தொகைக்கு காப்பீடு வழங்க தகுதியானவர் என்பதை முடிவு செய்து இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்து பாலிசி பெறும் பொறுப்புதான் முகவர் பணி.

  130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் சுமார் 30 கோடி பேர் மட்டுமே இன்ஸ்சூரன்ஸ் எடுத்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் களத்தில் இருந்தாலும் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி)தான். இதில், 1.20 லட்சம் அலுவலர்கள், ஊழியர்களும், சுமார் 12.5 லட்சத்துக்கும் அதிகமான முகவர்களும் பணியாற்றுகின்றனர்.

  முகவர் பணிக்கு, நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் பிளஸ் 2-வும், கிராமங்களில் வசிப்போர் 10-ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றால் போதும். ஆன்லைனில் 50 மணி நேர பயிற்சியை வீட்டிலிருந்தே பெறலாம்.

  4 நிதியாண்டுகள் நல்ல வணிகம் புரிந்தால் தகுதியின் அடிப்படையில் குறைந்த வட்டியில் வீடு கட்ட கடன், கார், மோட்டார் சைக்கிள் வாங்க வட்டியில்லாக் கடன், அலுவலகப் பராமரிப்பு செலவு ஆகியன கிடைக்கும். திறமையாகச் செயல்படும் முகவர்களுக்கு எல்.ஐ.சி.யில் மேற்கொண்டு கூடுதல் தகுதிகளும், வளர்ச்சி அலுவலர் பணியிலும் கூட உயரலாம்.

  தங்கள் அலுவலகத்திலேயே ஆன்லைன் மூலம் பிரீமியம் வசூலிக்கலாம். இதற்கு தனி கமிஷன் உண்டு. திறமையாகச் செயல்பட்டால் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு இந்தத் தொழிலில் உள்ளது.

  இதர அரசின் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களும் உண்டு: இதுமட்டுமின்றி, ஓரியண்டல் இந்தியா, நேஷனல் இன்ஸ்சூரன்ஸ், யூனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் & கோ உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் வாகனங்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன.

  மேலும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில வங்கிகளும் இன்ஸ்சூரன்ஸ்துறையில் தடம் பதித்துள்ளன. இவற்றிலும் முகவராக வாய்ப்பு உள்ளது.

  தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களில் கூட முகவர் வாய்ப்பு: இன்ஸ்சூரன்ஸ் துறையில் டாடா, ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் கூட உள்ளன. இவற்றில் முகவராகினால், கூடுதல் வருவாய், எண்ணற்ற சலுகைகள் கிடைக்கின்றன.

  சிறுசேமிப்புத் துறையில்: எல்.ஐ.சி. உள்ளிட்ட இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களில் முகவராக இருந்துகொண்டு, இவற்றிலும் முகவராக இருப்பதில் எவ்விதத் தடையும் இல்லை.

  நம்பகத்தன்மை வாய்ந்த அஞ்சலகத்தில் வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் முகவர்களுக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை. துணிந்து களத்தில் இறங்கலாம். உழைப்புக்கேற்ற வருவாய் நிச்சயம்.

  அஞ்சலகங்களில் வைப்புத் தொகை, தொடர் வைப்பு நிதி, கிஸôன் விகாஸ் பத்திரங்கள், செல்வ மகள் சேமிப்புத் திட்டம், உள்ளிட்ட பல்வேறு நிதித் திட்டங்களில் வைப்புத் தொகையை சேகரிக்க முகவர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள சிறுசேமிப்புத் துறையின் உதவி இயக்குநர்கள்தான் முகவர்களை நியமிக்கின்றனர்.

  எஸ்.ஏ.எஸ். முகவராக குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பும், தொடர் வைப்பு நிதி (ஆர்.டி.) முகவராக 8-ஆம் வகுப்பு படித்த பெண்களும் தகுதியானவர்கள். முதலீடு திட்டங்களுக்கு 2 சதவீதம் வரையிலும், ஆர்.டி.யில் 6 சதவீதம் வரையிலும் கமிஷன் வழங்கப்படுகிறது.

  வீட்டுக் கடன் வழங்கும் ஆலோசகர்களாகப் பணியாற்றலாம்: எல்.ஐ.சி. வீட்டுவசதி நிறுவனம் வீடு கட்ட கடனுதவியும், அடமானக் கடனும் வழங்கி வருகிறது. இதில் வட்டி விகிதம் 12 சதவீதம் வரையில்தான் உள்ளது.

  வீடு கட்டுவோரை அணுகி, தேவைப்படும் ஆவணங்களைச் சேகரித்து நிறுவனத்துக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பாலமாக இருந்து பணியாற்றும் முகவர் பணியில் ஈடுபடலாம். எல்.ஐ.சி. முகவராகத் தேவைப்படும் தகுதிதான் எல்.ஐ.சி.யின் வீட்டு கடன் ஆலோசகர்களுக்கும் தேவை.

  உழைப்புக்கேற்ற வருவாயும், சலுகைகளும் உண்டு. எல்.ஐ.சி., சிறுசேமிப்புத் துறைகளில் முகவர்களாக இருந்து கொண்டே, எல்.ஐ.சி. வீட்டு வசதி நிறுவனத்திலும் முகவராகலாம். கோட்ட அளவிலே இந்த நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளன.

  இதேபோல், 20-க்கும் மேற்பட்ட தனியார் வீட்டு வசதி நிறுவனங்களும் வீட்டுக் கடன்களை வழங்கி வருகின்றன. இவற்றில் முகவரானால் கூடுதல் வருவாய், சலுகைகள் உண்டு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai