வடிகட்டும் ஆப்!

விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரகாம் பெல்லால் அவசரத் தேவைக்காக கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி, இன்றைய ஸ்மார்ட் போன் யுகத்தில் தொல்லை பேசியாக மாறிவிட்டது.
வடிகட்டும் ஆப்!
Published on
Updated on
1 min read

விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரகாம் பெல்லால் அவசரத் தேவைக்காக கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி, இன்றைய ஸ்மார்ட் போன் யுகத்தில் தொல்லை பேசியாக மாறிவிட்டது.
 சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன்களுக்கு எளிதில் அடிமையாகிவிடுகிறார்கள் என்பதால், அதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி தங்கள் வியாபார விளம்பரங்களை பெரு நிறுவனங்கள் தொலைபேசி மூலம் பரப்பி வருகின்றன.
 கண்ணியத்துடன் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் விளம்பரங்களை பரப்பி வந்த காலம்போய், தற்போது "ஆட்டோமேட்டட் வாய்ஸ் கால்' மூலம் மனிதர்களின் பயன்பாடே இல்லாமல் இந்த நிறுவனங்கள் விளம்பரங்களைப் பரப்பி வருகின்றன. ஆயிரக்கணக்கான தொலைபேசி எண் தரவுகளைச் சேகரித்து, அதற்கான பதிவு செய்யப்பட்ட விளம்பரங்களை அந்த எண்களுக்கு தொலைபேசி மூலம் அழைத்து கூறுவதே இன்றைய நவீன விளம்பர யுக்தியாக மாறிவிட்டது.
 அதுவும் வாடிக்கையாளருக்கே தெரியாமல் அவரது இண்டர்நெட் நுகர்வை வைத்து அதற்கு ஏற்ற விளம்பரங்களை அவருக்கு தொடர்ந்து தொலைபேசி மூலம் அழைத்து மூளைச்சலவைச் செய்யும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
 என்ன நிலையில் வாடிக்கையாளர் இருக்கிறார் என்பது கூட தெரியாமல் அவருக்கு இதுபோன்ற விளம்பரங்களை அளிப்பதுதான் சோதனையின் உச்சகட்டம். சிலர், இது வாய்ஸ் ரிக்கார்டிங் அழைப்பு என்பதை அறியாமல் எதிரே பேசுபவரை திட்டவும் செய்கின்றனர்.
 இதுபோன்ற தொல்லை அழைப்புகளைத் தானாகக் கண்டுபிடித்து நிராகரிக்கும் செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. "கூகுள் போன் ஆப்' பை பதிவிறக்கம் செய்து அதன் "செட்டிங்ஸ்' -இல் சென்று "காலர் ஐடி & ஸ்பாம்'-ஐ கிளிக் செய்து, "பில்டர் சஸ்பெக்டெட் ஸ்பாம் கால்ஸ்' என்பதைத் தேர்வு செய்தால்போதும். உங்கள் தொலைபேசிக்கு வரும் "ஆட்டோமேட்டட் வாய்ஸ் கால்' அழைப்புகளை இந்த செயலி தானாக கண்டுபிடித்து வாய்ஸ் மெயிலுக்கு அனுப்பிவிடும். இதுபோன்ற அழைப்புகள் வரும்போது உங்கள் தொலைபேசியில் சத்தமோ, மிஸ்டு கால் எச்சரிக்கையோ வராது. பின்னர் நீங்கள் விரும்பினால் அழைப்புகளின் தரவுகளுக்குள் சென்று வாய்ஸ் மெயில் பதிவு இருந்தால் கேட்டுக் கொள்ளலாம்.
 தொல்லைதரும் தொலைபேசி எண்களை கூகுள் நிறுவனமே கண்டுபிடித்து, சேகரித்து வருகிறது. இதனால் செயலி தானாகவே தொல்லைதரும் தொலைபேசி அழைப்புகளை சாதுரியமாக கண்டுபிடித்து தவிர்த்து விடுகிறது.
 - அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.