இணைய வெளியினிலே...

வேர்களுக்குப் பெருமை கிளைகளால்தானெனினும்,வேரா? கிளையா? என்ற கேள்வி வரும் போது...கிளைகள் வெட்டி வீழ்த்தப் படுகின்றன.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

அறிவை அடையாமல்
எப்படி வெற்றி வரும்? 
வாசிப்பு இல்லாமல்
எப்படி அறிவு வரும்?

- ராணி குணசீலி

கடன், மரியாதை இரண்டையுமே
பெற்றதைப் போலவே
திரும்பக் கொடுத்தால்
உறவு நீடிக்கும்

- நிர்மலா பழனி

என் பெயரே மறந்து போன
இந்த காங்கிரீட் காட்டில்
என் நம்பரைச் சொல்லி
அழைக்கும் நீ யார்?

-மானா பாஸ்கரன்

மஞ்சள் நிறம் ஒளிர்வதற்குள்ளாவது 
போக்குவரத்து சிக்னலைக்
கடந்துவிட வேண்டுமென்ற
ஒற்றை நோக்குடன்...
வாகனத்தை வேகமாக
இயக்குவதற்குப் பெயர்தான்
சுயநலம். 

- கிரிதரன்

வேர்களுக்குப் பெருமை கிளைகளால்தானெனினும்,
வேரா? கிளையா? என்ற கேள்வி வரும் போது...
கிளைகள் வெட்டி வீழ்த்தப் படுகின்றன.

- மகா

சுட்டுரையிலிருந்து...

குடிநீருக்காக 
நாளை நாம் எந்த அளவுக்கு
அல்லாடப் போகிறோம்
என்பதற்கான சாட்சியே 
இந்தக் காட்சி. 


இடம்: கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு கருங்குளம் ஊராட்சி 

- இரா.சரவணன்


நிலத்துல எங்க தாத்தா கம்பு, கேழ்வரகு, நெல் நட்டு 
கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை...
எங்க அப்பா, சித்தப்பா எல்லாரும் கல் நட்டு ஈசியா சம்பாதிச்சிட்டாங்க.

- சுந்தர கஜேந்திரன்


பெயர் கிடைக்கணும்னு வேலை செய்றத விட... செய்ற வேலையை 
முழு ஈடுபாட்டோடு செஞ்சா நம்ம பெயர் என்றுமே நிலைக்கும்.

- அமீர்


வலைதளத்திலிருந்து...

மனுசன்கள்ல சில வகை உண்டு. எப்பவும் தன் மேல ஒரு கழிவிரக்கம் இருந்து கிட்டே இருக்கும் அவங்களுக்கு. 

நாம மட்டும் தான் ரொம்ப கஷ்டப்படுறோம், நமக்கு மட்டும் தான் இந்த உலகம் துரோகம் பண்ணுதுன்னு எப்பவும் மனசுக்குள்ள புலம்பிகிட்டே இருப்பாங்க. 

சின்னதா ஒரு வெற்றி அவங்க வாழ்க்கைல கிடைச்சாலும், ""ஹைய்யா இந்த வெற்றிக்காக நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன், இவ்வளவு கஷ்டப்பட்டேன்ன்னு'' அப்பவும் தன்னோட கஷ்டங்கள முன் நிறுத்துவதுலயே குறியா இருப்பாங்க... 

இவங்களோட கேரக்டர் எப்படி பட்டதுனா, எப்படியாவது மத்தவங்களோட ஈர்ப்ப தன் மேல திருப்பணும். அதுக்கு தன்னோட வாழ்க்கை சோக மயமானதுன்னு ஒரு மாயையை தன்ன சுற்றி வச்சுக்குறாங்க... தனக்கு எல்லாம் தெரியும்ங்குற மமதை வேற அவங்க மனசுக்குள்ள இருக்கும். ஆனா அத வெளிக்காட்டிக்க கூடாதுன்னு அவங்களே நினச்சாலும், புலம்பி புலம்பியே தன்னோட ஒரிஜினல் முகத்த காட்டிடுவாங்க.... 

எப்பவும் அடுத்தவங்க சோகத்த பாத்து தனக்கும் தாங்க முடியலன்னு புலம்பிட்டே இருப்பாங்க. கூர்ந்து பாத்தா, இதுவும் கூட அடுத்தவங்க பார்வையைத் தன்மேல திருப்பிக்க முயற்சிக்குற ஒரு டெக்னிக் தான்... 

இப்படியானவங்க ரொம்ப சுயநலவாதிகள் கூட... தன்னோட தேவைகள நிறைவேத்த மட்டுமே அடுத்தவங்கள இவங்க பயன்படுத்திப்பாங்க... 

சோகங்களை புலம்பிட்டே இருப்பவங்க கிட்ட ஜாக்கிரதையா தான் இருக்கணும்...

http://gayathrid.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com