அக்கம் பக்க தகவல்களை அறிய... நெய்பர் ஆப்!

இன்றைய நகர வாழ்வில் அக்கம், பக்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதே அபூர்வமாக உள்ளது.
அக்கம் பக்க தகவல்களை அறிய... நெய்பர் ஆப்!

இன்றைய நகர வாழ்வில் அக்கம், பக்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதே அபூர்வமாக உள்ளது. அதுவும் அண்டை வீட்டாரின் பெயர்கள் கூட தெரியாமல் வாழ்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இந்தச் சூழலில் வேறு மாநிலத்தில் இருந்து ஒருவர் புதிதாக குடியேறினால் அவரது நிலை திண்டாட்டம்தான். வீட்டு வேலைக்காக அருகே உள்ள பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்றவர்களைத் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, ஒரு பகுதியில் வாழ்பவர்களுக்கு, அந்தப் பகுதியில் உள்ள தகவல்களைத் தேடித் தரும் "நெய்பர்லி' (neighbourly) எனும் புதிய செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து நமது செல்லிடப்பேசியில் லோக்கேஷனை ஆன் செய்ய வேண்டும். நாம் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரம் உள்ளவர்கள் இந்த நெய்பர்லி ஆப்பில் சேர்ந்துவிடுவார்கள்.
பின்னர் அந்தப் பகுதியில் நமக்கு தேவையான தகவல்களை கேள்விகளாக அவர்களிடம் கேட்கலாம். அதற்கு அப்பகுதியில் உள்ளவர்கள் பதிலளிப்பார்கள். எத்தனைப் பேர் வேண்டுமானாலும் பதில்களைப் பதிவு செய்யலாம். வாய்ஸ் மெசேஜாகவும் பதில்களைப் பதிவு செய்யும் வகையில் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்காக பிரத்யேகமான நெய்பர்லி ஆப் கடந்த மே மாதம் மும்பையில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. மும்பைவாசிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த நெய்பர்லி ஆப்பில், "மழை நீர் தேங்காத பகுதியா இது?', "இந்த வகை உணவுகள் எங்கு கிடைக்கும்?' என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. இதைத் தவிர ஒரு பகுதியில் கேஸ் சிலிண்டர் அலுவலகம் எங்கு உள்ளது? அருகே மார்க்கெட் எங்கு உள்ளது? குழந்தைகள் விளையாடும் பூங்கா எங்கு உள்ளது? போன்ற தகவல்களும் இதில் கேட்டுப் பெறலாம்.
ஜெய்ப்பூர், ஆமதாபாத், கோயம்புத்தூர், மைசூர் ஆகிய பகுதிகளிலும் இந்த ஆப் சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தில்லி, பெங்களூருவில் நவம்பர் மாதம் இந்த ஆப் முழுமையாக அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் 15 லட்சம் பேர் நெய்பர்லி ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர். விரைவில் சென்னை, ஹைதராபாத், புணே, சண்டீகர், லக்னௌ, இந்தூர், கொல்கத்தாவிலும் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹிந்தி, மராட்டி, குஜராத்தி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com