வேலை...வேலை...வேலை...

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை, விமான சரக்கு பெட்டக நிறுவனத்தில் வேலை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் வேலை
வேலை...வேலை...வேலை...

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை
பதவி: CONTRACT ENGINEERS (ELECTRONICS ENGINEERING,  MECHANICAL ENGINEERING,  COMPUTER SCIENCE,  ELECTRICAL ,  CIVIL)
காலியிடங்கள்: 16
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஓபிசி, பிசி, எஸ்டி, எஸ்டி மற்றும் மாற்றுத்
திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 
சம்பளம்: மாதம் ரூ.23,000 வழங்கப்படும். கணினி அறிவியல் பிரிவினருக்கு ரூ.26,500 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் கைவசம் வைத்துக்கொள்ளவும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://bel-india.in/Documentviews.aspx?fileName=CE-Web-ad-English-201118.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.12.2018

விமான சரக்கு பெட்டக நிறுவனத்தில் வேலை
பதவி: Security Screeners
காலியிடங்கள்: 372 
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அத்துடன் என்.சி.சி. சான்றிதழ் அல்லது விமான நிறுவனத்தின் AVSEC சான்றிதழ் பெற்றிருப்பதுடன் இந்தி, ஆங்கிலம் மொழி அறிவுடன் உள்ளூர் மொழியும் தெரிந்திருக்க வேண்டும். 
வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு சில பணியிடங்களுக்கு மட்டும் உடற்தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர், பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை: www.aaiclas.org என்ற வலைதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
முகவரி: The Chief Executive Officer, AAI Cargo Logistics & Allied Services Company Limited, AAI Complex, Delhi Flying Club Road, Safdarjung Airport, New Delhi -110 003  
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://aaiclas-ecom.org/images/career3.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பம் சென்றுசேர கடைசித் தேதி: 15.12.2018

மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் வேலை
பதவி: Assistant Sub Inspector
காலியிடங்கள்: 519
தகுதி: மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் தற்போது காவலர், தலைமை காவலர், டிரேஸ்மேன் போன்ற ஏதாவதொரு பணியில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையால் நடத்தப்படும் துறைதேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தற்போது பணிபுரியும் துறையின் வழியே விண்ணப்பிக்கவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.cisf.gov.in/wp-content/uploads/2018/11/4201.pdf என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.12.2018

தமிழ்நாடு தொல்லியல் துறையில் நூலகர் வேலை
பதவி: Librarian in Archaeology Department
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 18,500 - 58,600
கல்வித் தகுதி: நூலக அறிவியல் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 18.12.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.02.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/notifications/2018_34_notyfn_Librarian_Archaeology.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.12.2018

தமிழ்நாடு தொழிலாளர் துறையில் வேலை
பதவி: அலுவலக உதவியாளர் 
மொத்த காலியிடங்கள்: 21 
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சிறப்பு தகுதி: மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 
வயதுவரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு வயதுவரம்பில் உச்ச வயது வரம்பு இல்லை. 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும்முறை: இப்பணிக்கான விண்ணப்பங்களை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) அலுவலகங்களிலும், சென்னை மற்றும் வேலூர், தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களிலும் மற்றும் சென்னை, தொழிலாளர் கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நேரிலும் சமர்ப்பிக்கலாம். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கட்டிடம், 6வது தளம், டி.எம்.எஸ். வளாகம், சென்னை - 600 006. தொலைபேசி: 044 -2433 9934
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://govtjobsdrive.in/wp-content/uploads/2018/11/Chennai_OA_Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.12.2018. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலும் சமர்ப்பிக்கலாம். 
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com