தேவ்ராய் கலை கிராமம்: ஒரு புதிய வழி!

மகாராஷ்டிர மாநிலத்தின் காடுகள் நிறைந்த மலைப்பகுதி பஞ்ச்கனி. இங்குள்ள பழங்குடியின மக்களில் திறன்மிக்க ஒரு குழுவினர் பழங்கால மரபு சார்ந்த கலைப் பொருள்களை உருவாக்கி அவற்றின் மூலம் தங்கள் சமூகத்தை
தேவ்ராய் கலை கிராமம்: ஒரு புதிய வழி!

மகாராஷ்டிர மாநிலத்தின் காடுகள் நிறைந்த மலைப்பகுதி பஞ்ச்கனி. இங்குள்ள பழங்குடியின மக்களில் திறன்மிக்க ஒரு குழுவினர் பழங்கால மரபு சார்ந்த கலைப் பொருள்களை உருவாக்கி அவற்றின் மூலம் தங்கள் சமூகத்தை முன்னேற்றிச் செல்ல கடந்த 10 ஆண்டுகளாக உழைத்து வருகின்றனர்.

ஆண்கள், பெண்கள் என இருபாலரும் அப்பகுதியில் உள்ள ஒரு பெரிய மரத்தின் அடியில் நாள்தோறும் ஒன்று கூடி, தொல்பொருள்களை ஒத்த உலோக கண்கவர் கலைப் பொருள்களை சமகால ரசனைக்கு ஏற்ப உருவாக்குகின்றனர். 

இங்குள்ள ஆதிவாசி மக்களின் மரபுசார்ந்த, காலம்கடந்த உலோக கலைத் திறன்களைப் பாதுகாக்கும் நோக்கில்  "தேவ்ராய் கலை கிராமம்' என அழைக்கப்படும் இந்த அமைப்பு,  பழங்குடியின கலைஞர் சுரேஷ் பங்குடி, புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் மந்தாகிணி மாதுர் ஆகியோரால் கடந்த 2008- இல் தொடங்கப்பட்டது.

இந்த கலை கிராமத்தை தொடங்க வேண்டும் என நினைத்து   சுரேஷ் மந்தாகிணியைச் சந்தித்தபோது,  ஆதிவாசி கலைஞர்களின் மோசமான நிலை குறித்தும்,   தங்களின் கலைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும், தங்களின் கலையை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாதது குறித்தும்   பகிர்ந்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து சுரேஷின் வழிகாட்டுதலோடு மதியா பழங்குடியைச் சேர்ந்த 4 கலைஞர்களை கொண்டு தேவ்ராய் கலை கிராமத்தை உருவாக்கினர். இன்று இந்த அமைப்பில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தனிநபர், குடும்பம் என 35 ஆண், பெண் கலைஞர்கள் உள்ளனர். 

சுரேஷ், மகாராஷ்டிர மாநிலத்தில், சந்த்ரபூர் மாவட்டத்தின் வரோரா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஆனந்த்வான் என அழைக்கப்படும் பாபா ஆம்தே ஆசிரமத்தில் பலவிதமான பழங்குடி கலைகளையும் கற்றவர். இவர், கட்சிரோலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழங்குடி சமூகத்தினரின் முன்னேற்றம், வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் கடுமையாகப் பணியாற்றி, கடந்த 2002-ல் மாநில அரசின் ஆதிவாசி சேவக் புரஸ்கார் விருது பெற்றவர்.

தேவ்ராய் கலை கிராமத்தில் தயாரிக்கப்பட்ட கலைப் பொருள்களின் விற்பனை அதிகரித்ததைத்  தொடர்ந்து, சுரேஷின் ஊரான கட்சிரோலியிலும் கலைப் பொருள்களின் உற்பத்தி விரிவுபடுத்தப்பட்டது. இந்த இரு இடங்களிலும் இருந்து உருவாக்கப்படும் அழகிய கலைப் பொருள்கள் கண்காட்சிகள் மற்றும் நாடு முழுக்க  உள்ள சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த பகுதியில் வாழும்  ஒருவர்,  தனது எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கலைப் பொருள்களை தயாரிக்கவும் தேவ்ராய் கலை கிராமத்தை அணுகலாம் என கூறுகின்றனர். மேலும், இந்த அமைப்பின் கலைப் பொருள் தயாரிப்புப் பிரிவில் இளம் தொழில்பழகுநர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். அவ்வாறு சேர்பவர்களுக்கு 2 ஆண்டுகள் தொடர்ந்து தீவிரப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்களிடம் உள்ள மிகச்சிறந்த ஆண், பெண் கலை நிபுணர்களைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் பயிற்சி பட்டறைகளையும் நடத்தி வருகிறது.

நவீன அழகியலை எதிர்கொள்ளக்கூடிய வகையில், பண்டைய உலோக கலைத்துவத்தை எவ்வாறு புதுப்பிப்பது என்பதை அறிந்துகொள்வதற்காக தேசிய வடிவமைப்புக் கழகம் உள்ளிட்ட முக்கிய வடிவமைப்புப் பள்ளிகளில் இருந்து பயிற்சி பெற்ற மாணவர்களை இந்த அமைப்பு வரவழைத்து அறிந்துகொள்கிறது.

தேவ்ராய் கலை கிராம அமைப்பு பழங்குடி இன கைவினைஞர்களின் மரபார்ந்த கைவினை கலையான தோக்ராவுக்கு சமகால யோசனைகளை தருகிறது. குறிப்பாக, தர்ஸ்ரீந்-ஈட்ர்ந்ழ்ஹ என்பது இவர்களுடைய தனித்துவமிக்க முன்னோடி கைவினை வடிவமாகும்.   

ராக் தோக்ரா மட்டுமல்லாமல், இந்த கைவினைஞர்கள் மூங்கில் கலைப் பொருள்கள், கரிம அழகுப் பொருள்கள், ஆபரணங்கள், பழுப்பு சிவப்பு வண்ணம் கொண்ட களிமண்ணால் செய்யப்பட்ட கலைப் பொருள்கள், பித்தளை இழைகளால் பிணைக்கப்பட்ட பீங்கான் கலைப் பொருள்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், மற்றொரு மரபார்ந்த-சமகாலத்திய கலை வடிவமான உருகிய உலோக சுவரோவியங்களை உருவாக்குவது குறித்தும் இவர்கள் பெருமையாகக் குறிப்பிடுகின்றனர்.

தேவ்ராய் கலை கிராமம், கலை மற்றும் வடிவமைப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு 4 முதல் 6 வாரங்கள் வரை திட்டப் பயிற்சி அளிக்கிறது. பெங்களூரு சிருஷ்டி வடிவமைப்புப் பள்ளி, ஜெய்ப்பூரில் உள்ள இந்திய கைவினை மற்றும் வடிவமைப்பு கழகம்,  ஊழ்ஹய்ஸ்ரீங் - இல் உள்ள ஐயுடி மாணவர்கள் இந்த அமைப்பில் பயிற்சிப் பெற்றுள்ளனர். பயிற்சிக்கு வரும் மாணவர்கள் இங்குள்ள நிபுணத்துவம் மிக்க கைவினைஞர்களிடம் கற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு புதுமையான வடிவமைப்பு உத்திகளை வழங்கி, அவர்களோடு இணைந்து புதுமை படைக்கவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மேலும், பயிற்சி பெற வருவோர், சந்தைப் பிரிவு, திரைப்படம், தொழில்நுட்பம், சில்லறை மற்றும் பொருள்காட்சி வடிவமைப்பு ஆகிய தளங்களில் பங்களிக்கவும் வாய்ப்பு உள்ளது. தேவ்ராய் கலை கிராம அமைப்பு 7 முதல் 10 நாள்கள் கொண்ட உண்டு உறைவிடப் பயிற்சிப் பட்டறையை விரைவில் தொடங்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com