சுடச்சுட

  
  im8

  முக நூலிலிருந்து....

  கடன் மட்டுமல்ல... 
  அளவுக்கு அதிகமாய் அரசியல் பேசுவதும்...
  அன்பை முறிக்கும்


  ************************

  வெயில் அதிகமாக இல்லை;
  மரங்கள் தான் குறைவாக உள்ளன.

  கிரிதரன்

  ஒருநாளும் என்னைத் தேடி வராத அந்தச் சாலையை...
  ஒவ்வொரு நாளும் தேடிப் போகிறேன்.

  கவி வளநாடன்


  இந்தக்கிளை இல்லையெனில்  இன்னொரு கிளை... 
  இந்த மரம் இல்லையெனில் இன்னொன்று... 
  எதுவென தீர்மானிப்பது மரம் அல்ல, பறவை.

  நேசமிகு ராஜகுமாரன்


  வாழ்க்கையில் நிமிர ஆசை இருந்தால்...
  வளைந்து கொடுக்கக் கற்றுக் கொள்!
  வில் வளைந்து  கொடுக்காமல்...
  அம்பு ஒருபோதும் இலக்கை எட்டாது.

  மாரியப்பன்

   

  சுட்டுரையிலிருந்து...


  சிறுவர் பூங்கா...
  ஊஞ்சல் ஆடி கொண்டிருக்கிறது தூசிகளும், காய்ந்த சருகும்!

  பழைய சோறு


  யாரை  பார்த்தாலும் சந்தோஷமா  தெரிந்தால்...
  நாம ரெம்பவே  சோகமா இருக்கோம்னு  அர்த்தம் 

  புன்னகை மன்னன் 

  யாரையும் தேடி போய் நிற்காதே
  அவமானப் படுத்தினால் கூட பரவாயில்லை,,,
  அலட்சியப் படுத்துவார்கள். 

  கோவக்காரி


  காற்றின் அழுக்கைப் போக்க எந்த சோப்பும் கண்டுபிடிக்கப்படவில்லை...
  மரங்களைத் தவிர.

  கலா


  வலைதளத்திலிருந்து...

  புத்தகம் படிப்பது என்பது ஒரு பழக்கமோ இல்லையோ,  புத்தகம் வாங்கி குவிப்பதும் ஒரு போதையாக மாறிவிட்டது. என்னைப் போல எத்தனை பேர் இந்த பழக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

  வாசிப்பாளர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

  தீவிர வாசகர்கள்: தொடர்ந்து வாசித்துகொண்டே இருப்பார்கள். ஒரு நூலை எடுத்தால் படித்து முடித்துவிட்டு, அடுத்த நூலை எடுத்து படித்துகொண்டு இருப்பார்கள். அல்லது பாத்ரூமில் ஒன்று, பெட்ரூமில் ஒன்று ( சில வீட்டில் இங்கு இவர்களால் படிக்கப்படவேண்டிய புத்தகம் சும்மாவே தூங்கிக்கொண்டிருக்கும்) காபி டேபிளில் ஒன்று, காரில் ஒன்று, பால்கனியில் ஒன்று என இரைந்து கிடக்கும். மாற்றி மாற்றி படித்துக்கொண்டிருப்பார்கள். 

  படிக்கும் பழக்கம் உள்ளவர்கள்: பிடித்தமான நூல்களை வாங்கி வைத்துக் கொண்டு நேரம் கிடைத்தாலோ, நேரம் ஒதுக்கி வைத்துக்கொண்டோ படிப்பவர்கள்.

  பொழுதுபோக்கு வாசகர்கள்: நேரத்தைக் கடத்த புத்தகத்தை படிப்பார்கள். இவர்கள் தீவிர வாசகர்கள் போல் நிறைய அழுத்தம் கொடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

  இப்படி வகைப்படுத்தினால், மாதம் எத்தனை நூல்கள் படிக்கிறோம் அல்லது எத்தனை பக்கம் படிக்கிறோம் என்று கணக்கு வரும். ஒரு தீவிர வாசகனாக நாளொன்று நூறுபக்கம் என்ற கணக்கில் மாதம் 3000 பக்கங்கள் படித்துவிடுபவராக இருந்தால், ஆண்டுக்கு 35000 முதல் 50000 பக்கங்கள் வரை படிப்பவராக இருப்பார். இவர்கள் நூறு முதல் இருநூறு புத்தகங்கள் வரை 100 பக்கத்தில் இருந்து 500 பக்கங்கள் உடையதாக  வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

  http://rajmohanfourthestate.blogspot.com
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai