சுடச்சுட

  
  dominos-pizza-drone-dru

  ஆளில்லா விமானங்களான ட்ரோன்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் அமேசான் நிறுவனத்தை விஞ்சிய கூகுள் நிறுவனம், ஆஸ்திரேலியாவில் உள்ள கென்பேரா நகரத்தில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு ட்ரோன் சேவையை உலகில் முதல் முறையாக தொடங்கி உள்ளது.  இதற்காக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் அந்த நிறுவனம் முறைப்படி அனுமதி பெற்றுள்ளது. கென்பேரா நகரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இல்லங்களுக்கு இந்த சேவை முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகள், டீ, காபி, உணவுப் பொருள்கள், சமையலுக்கு தேவைப்படும் பொருள்கள் ஆகியவற்றை ஆப் மூலம் பதிவு செய்து வீட்டிலேயே பெற்று கொள்ளலாம். பதிவு செய்த சில நிமிடங்களிலேயே தங்களது வீட்டுக்கு வெளியே சென்று ட்ரோனிடம் இருந்து பொருள்களைப் பெற்று கொள்ளலாம் என்பதுதான் இதன் தனிச் சிறப்பாகும்.

  வாடிக்கையாளர்கள் தங்களது பொருள்களைப் பதிவு செய்து ட்ரோன் மூலம் அனுப்பி வைக்க தேர்வு செய்ததும், இதற்காக பிரத்யேகமாக விமான வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள கூகுளின் "விங்க்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள ட்ரோன் உடனடியாக பறக்கவிடப்படும். அந்த ட்ரோனில் இருந்து கீழே தொங்கவிடப்படும் கயிற்றில் பொருள்களை வைத்து கட்டிவிட்டால்போதும். அந்தப் பொருள்களை ட்ரோன் மேலே இழுத்து வைத்துக் கொண்டு பறந்து சென்று, வாடிக்கையாளரின் வீட்டின் வெளியே பறந்தபடியே நின்று பொருளை மட்டும் கீழே இறக்கும். அந்தப் பொருளை வாடிக்கையாளர் பெற்று கொண்டதும் கயிற்றை அந்த ட்ரோன் மீண்டும் மேலே இழுத்துக் கொண்டு சென்றுவிடும். விங்ஸ் ட்ரோன் பிரதான சாலைகள் மீது பறப்பதற்கும், பொதுமக்களுக்கு மிக அருகாமையில் பறப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் இந்த ட்ரோன்களை இயக்க வேண்டும் என்றும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai