சுடச்சுட

  
  im6

  தேசிய உரத்தொழிற்சாலையில்   வேலை

  பணி: Marketing Representative

  காலியிடங்கள்: 40
  சம்பளம்: மாதம் ரூ.9,500 - ரூ.19,500
  வயதுவரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  தகுதி: விவசாயப் பாடப்பிரிவில் 55 மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முலம் செலுத்தலாம். 
  விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற வலைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
  மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/DETAILED%20ADEVRTSIMENT-MARKETING%20REPRESENATIVE.pdf  என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 
  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.04.2019

   

  சிண்டிகேட் வங்கியில்   வேலை 

  மொத்த காலியிடங்கள்: 129
  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

  பணி: Senior Manager (Risk Management) - 05
  சம்பளம்: மாதம் ரூ. 42,020 - 51,490

  பணி: Manager (Risk Management) - 50

  பணி: Manager - (Law) 41 

  பணி: Manager (IS Audit) - 03

  பணி: Security Officer - 30  

  சம்பளம்: மாதம் ரூ. 31,705 - 45,950
  தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் படித்தவர்கள், சட்டம் படித்தவர்கள், எம்.பி.ஏ. (பேங்கிங், நிதி), எம்.எஸ்சி., சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ. முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
  வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.02.2019 தேதியின்படி 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.
  விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
  விண்ணப்பிக்கும் முறை: www.syndicatebank.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  
  மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.syndicatebank.in/RecruitmentFiles/LATERAL_RECT_2019_DETAIL_ADVT_HO_HRDD_27032019.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.04.2019 

   

  எஸ்பிஐ வங்கியில்   வேலை

  பணி: Probationary Officer 

  காலியிடங்கள்: 2000 
  தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
  வயது வரம்பு: 01.04.2019 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட  சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.  
  தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கலந்துரையாடல் தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

  விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers  என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
  விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பத்தாரர்கள் ரூ.750, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் தகவல் அளிப்பு கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.  
  மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.04.2019 

   

  தமிழ்நாடு மின்சாரத்துறையில் வேலை 

  பணி: கேங்க்மேன் (பயிற்சி)
  காலியிடங்கள்: 5000
  தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்ப தாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-இல் (அதாவது ரூ.16,200 - 51,500) பொருத்தம் செய்யப்படும். 
  வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 
  தேர்வு கட்டணம்:  ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.  குறிப்பிட்ட சில பிரிவனர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
  விண்ணப்பிக்கும் முறை: ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ஞ்ங்க்ஸ்ரீர்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
  மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf    என்ற வலைதள லிங்க்கில்  சென்று தெரிந்துகொள்ளவும். 
  விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  22.04.2019  


  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை


  மொத்த காலியிடங்கள்: 224
  பணி: Assistant Engineer
  காலியிடங்கள்: 73
  தகுதி: பொறியியல் துறையில் சிவில் அல்லது கெமிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது Environmental, Chemical,  Environmental Science and Technology, Petroleum Refining and Petrochemical, Environmental Management போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  பணி: Environmental Scientist

  காலியிடங்கள்: 60
  சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
  தகுதி: Chemistry, Bioligy, Zoology, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Microbiology, Marine Biology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry, Botany போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  பணி: Assistant (Junior Assistant)

  காலியிடங்கள்: 36
  தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் டிப்ளமோ, 6 மாத சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  பணி: Typist

  காலியிடங்கள்: 55
  சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
  தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு பிரிவில் மேல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவில் 6 மாத டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  வயதுவரம்பு: மேற்கண்ட 4 பணியிடங்களுக்கும் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 
  விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, விதவைகள் உள்பட மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். 
  விண்ணப்பிக்கும் முறை: www.tnpcb.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.  
  மேலும் விவரங்களுக்கு: https://tnpcb.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  23.04.2019

  தொகுப்பு:  இரா.வெங்கடேசன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai