வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 187

​புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 187


புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களும் நடாஷா எனும் பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது சேஷாச்சலம் தன் மருத்துவ வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

சேஷாச்சலம்: அன்னிக்கு, என் முன்னாடி ஓர் அம்மா - 18 வருசமா என் பேஷண்ட் - ரொம்ப ஹெவி டிப்ரஷன்ல இருக்காங்க. அவங்களுக்கு மருந்தை மாத்தி கொடுக்கலாமான்னு யோசிச்சு பாதி எழுதிக்கிட்டு இருக்கும் போதே the wind caught up the papers and blew it out of my hands. காகிதங்கள் அவங்க மூஞ்சியில போய் அறைஞ்சது. பழைய prescriptions, அதில ஒண்ணு, 18 வருசங்களுக்கு முன்னாடி நான் எழுதின prescription. அவங்க அதை பார்த்திட்டு எழுந்து போயிட்டாங்க. அதுக்குப் பிறகு வரவே இல்ல. I think she felt too overwhelmed, she felt hopeless suddenly, lost all faith in me.

கணேஷ்: டாக்டர் எனக்கு இப்போ நிறைய சந்தேகங்கள்...
புரொபஸர்: டேய் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் - இது கிளினிக்கா இல்ல டியூஷன் சென்டரா?
சேஷாச்சலம்: ரெண்டு பேர் கேள்விகளுக்கும் பதில் சொல்றேன். முதல்ல கணேஷுடைய  கேள்விக்கு வரேன். கேளு.
கணேஷ்: முதலில் presence என்றால் என்ன என்று விளக்குங்க. எனக்குத் தெரிந்த presence வகுப்பில present ஆக இருக்கிறது. Present இல்லேண்ணா absent. நீங்க டெரிடா சொன்ன disruption of presence என்கிற ஒரு விசயத்தை குறிப்பிட்டீங்க. அந்த பிரசெண்ட் என்ன?
சேஷாச்சலம்: அதை உன் புரொபஸர் தான் விளக்கணும். டேய் சொல்லுடா.
புரொபஸர்: ரெண்டு விதமான presence இருக்குது. Roll call எடுக்கும் போது வர பிரசென்ஸ் ஒண்ணு. 
கணேஷ்: சார் அந்த இடத்தில எனக்கு இன்னொரு சந்தேகம். இந்த ரோல் என்பது சுருட்டின காகிதமாகத் தானே இருக்கணும். ஆனால் நீங்க அட்டெண்டென்ஸ் எடுக்கையில் அப்படி எந்த சுருளும் எடுத்து வரதில்லையே. In fact நீங்க மொபைல்லிருந்து தான் appஇல பார்த்து ரோல் கால் எடுக்கறீங்க. அப்புறம் ஏன் அதையும் ரோல் கால்ன்னு கூப்பிடறாங்க?
புரொபஸர்: அந்த சொல் பதின்மூன்றாம் நூற்றாண்டு பிரஞ்சு சொல்லான rolle என்பதில் இருந்து வருகிறது. அப்போது அச்சொல்லின் பொருள் a rolled up piece of paper inscribed with an official record. அதாவது காகிதச்சுருள் வடிவிலான  அரசு ஆவணம். நீண்ட காலம் நமது பெயர் பட்டியல்கள் இப்படி சுருளான ஆவணங்களாகவே இருந்தபடியால் சுருளை விரித்து பெயர் வாசிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று சுருள் இல்லாவிடிலும் பெயரில் மட்டும் அது நீடிக்கிறது. இன்னும் சொல்வதானால், சிலருக்கு அது ழ்ர்ப்ப்ஆ அல்லது ழ்ர்ப்ங்ஆ எனும் குழப்பம் உள்ளது. ஆனால் சரியான ஸ்பெல்லிங் ழ்ர்ப்ப் தான்.
கணேஷ்: இப்போ தெளிவாயிடுச்சு சார். இனி ஸ்பெல்லிங் குழப்பம் வரும் போதெல்லாம் சுருள் ஆவணங்கள் நினைவு வந்திடும். நீங்க கண்டினியூ பண்ணுங்க சார்.
புரொபஸர்: சரி, டெரிடா சொல்ற presence என்பது வேறு. இது நமது சம்ஸ்கிருத சொல்லான பிரசன்னம் என்பதற்கு இணையானது.
நடாஷா: என்னுடைய தாத்தா ஒரு பிரசித்த சோதிடர். அவர் பிரசன்ன சோதிடம் எனும் ஒன்றை பிராக்டீஸ் பண்ணுகிறார். தினமும் அவரைப் பார்க்க பெரிய வரிசையில் மக்கள் காத்திருப்பார்கள்.
கணேஷ்: என்ன சார் குழப்பறாங்க.
புரொபஸர்: இது கொஞ்சம் சிக்கலான மேட்டர்டா. கவனிச்சு கேப்பேன்னா சொல்றேன். கேட்கறியா?
கணேஷ்: கேட்குறேன் சார்.
புரொபஸர்: சரி, இப்போ நீ கேட்குறேன்னு சொன்னியே... அப்போ நீ கேட்டியா?
கணேஷ்: அதெப்படி சார் முடியும்?
புரொபஸர்: முடியுமாங்கிறது கேள்வியில்லை. ஆமாவா... இல்லியா?
கணேஷ்: இல்ல
புரொபஸர்: குட். இப்போ, நீ எதிர்காலத்தில கேட்குறேன்னு எனக்கு உறுதி தரதுக்கு இப்போ சமகாலத்தில கேட்காம இருக்கணும். விளங்குதா? You are not present in time when you say you will listen carefully in future. நீ இப்போ இல்லைங்கிறது - கவனமா கேட்கலைங்கிறது - தான் நீ எதிர்காலத்தில் கவனிப்பேங்கிறதை உறுதிப்படுத்துது. So absence validates presence. 

கணேஷ்: அதெப்படி? இப்பவும் கேட்பேன், அப்பவும் கேட்பேன்னா?
புரொபஸர்: அதுக்குள்ளாடி, நான் எதிர்காலத்தில் கவனிக்க மாட்டேன்னு நினைக்காதீங்க என்கிற implication இருக்கு. இந்த implication உள்ளாடி absent ஆக இருக்கே. இப்படித் தான் டெரிடாவோட தத்துவத்தில் absence, presence விளக்கப்படுது.
நடாஷா: அதுக்கும் சம்ஸ்கிருத பிரசன்னத்துக்கும் என்ன தொடர்பு?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com