வாங்க இங்கிலீஷ் பேசலாம் 204 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 204 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்ற பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது ஜூலி புரொபஸர் சில நாட்களாக மன அழுத்தத்தில் வாடுவதாக டாக்டரிடம் சொல்கிறது. டாக்டர் மேலும் விசாரிக்கிறார். அப்போது ஜூலியின் விவரணைகளை கவனிக்கும் சேஷாச்சலம் புரொபஸருக்கு எந்த பெரிய மனப்பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லையே என்கிறார். இதை அடுத்து புரொபஸரிடம் வேறென்னவெல்லாம் நோய்க்குறிகள் தென்படுகின்றன என சொல்லும் ஜூலி அவர் ஒரு locavore ஆகி விட்டதாய் சொல்கிறது. அதென்ன?
சேஷாச்சலம்: ஓ... லோக்காவோர் ஆகி விட்டாரா?
ஜூலி: ஐயய்யோ...
கணேஷ்: அப்போ எங்க சார் செத்துடுவாரா?
சேஷாச்சலம்: சேச்சே ... ஆனால் அவருக்கு ஆக்கிப் போட முடியாம அவரோட ஆத்துக்காரி தான் செத்துடுவாங்க...
நடாஷா: that’s sad
கணேஷ்: எனக்குப் புரியல...
சேஷாச்சலம்: நான் விளக்குகிறேன். Locavore is a person whose diet consists only or principally of locally grown or produced food. அப்படீன்னா, உள்ளூரில் விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உட்கொள்பவர் தான் ஒரு லோக்கோவோர். உள்ளூர் உணவு எனும் ஓர் இயக்கம் இன்று வெளிநாடுகளில் பரவலாகி உள்ளது. இந்தியாவில் கூட உள்ளூர் உணவுப்பொருட்களை மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்தும் உணவகங்கள் உள்ளன. இவர்களின் கொள்கை 100-250 மைல் சுற்றுப்பரப்புக்குள் விளையும் உணவுப்பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது. பால் வேண்டுமா, பாக்கெட் பால் வாங்காமல் சுற்றுவட்டாரத்தில் பாலை கறந்து விற்பவர்களை அணுகுவது. பழங்களை சூப்பர் மார்கெட்டில் வாங்காமல் தெருவோர சின்னக் கடைகளில் உள்ளூர் பழங்களாகப் பார்த்து வாங்குவது. இப்படி ஒவ்வொரு சின்ன உணவுப்பொருளிலும் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். எண்ணெய் வேண்டுமா? பக்கத்தில் செக்கில் ஆட்டி விற்கும் எண்ணெய்யை வாங்குவார்கள். 
கணேஷ்: உப்பு, சர்க்கரை, தேயிலை?
சேஷாச்சலம்: இவர்களில் சிலர் purist ஆக இருப்பார்கள். ரொம்ப கறாரான ஆசாமிகள். இவர்கள் டீ, காபி, சாக்லேட் எதையும் தொட மாட்டார்கள். உங்க சார் எப்படி? 
கணேஷ்: மேடம் வாங்கிக் கொண்டு வந்த அரிசி, எண்ணெய், மளிகைச் சாமான்களை சாக்கடையில் கொண்டு கொட்டி விட்டார். ரெண்டு நாளா வீட்டில் சமையலே நடக்கலை. தினமும் யுத்தம் தான். சார் இவங்க ஏன் இப்படி இருக்காங்க?
சேஷாச்சலம்: உள்ளூர் உணவை உட்கொண்டால் ஆரோக்கியம் மேம்படும், உள்ளூர் வியாபாரிகள் பயனடைவார்கள் மற்றும் சூழலுக்கும் நல்லது. சரி வேறென்ன? 
கணேஷ்: சமீபமா இன்னொரு பிரச்னை, அதுவும் சமீபத்தில் ராணுவத்தினர் மீது நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, சார் ஓவரா தேச பக்தி காட்டுகிறார். டிவியில் தன் தலைவர் வந்தால் எழுந்து சலூட் பண்ணுகிறார். படுக்கை விரிப்பில் கூட பெரிசாய் தேசக்கொடியை பிரிண்ட் பண்ணி அதில் தான் தூங்குகிறார். இதனால அவருக்கும் மேடமுக்கும் தினமும் சண்டை. அவங்க தனியா போய் ஹாலில் படுத்து தூங்குறாங்க.
சேஷாச்சலம்: I am not surprised. He has turned into an ultranationalist. It may not be a direct symptom, ஆனால் பதற்றப்படும் பலரிடம் இந்த இயல்பைப் பார்க்கிறேன். 
புரொபஸர்: தேசப்பற்று தப்புங்கிறியா? 
சேஷாச்சலம்: தேசப்பற்று is patriotism. அதாவது தன் தேசத்தின் நல்ல விசயங்கள் குறித்து பெருமை கொள்வது. காந்தியும் தேசப்பற்றாளர்தான். ஆனால் இந்தியாவின் குற்றங்குறைகளைப் பற்றி பேசவும், reform பண்ணவும், அதாவது சீர்திருத்த, அவர் தயங்கவில்லை. ஆனால் தேசத்தின் பெயரில் நடக்கும் அநீதியைக் கூட கண்மூடித்தனமாய் ஆதரிப்பவர்கள் patriots அல்ல, they are nationalists. அதாவது தேசியவாதிகள். குடிமக்களின் நலனுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைக் கூட அவர்கள் தேசபாதுகாப்பு / முன்னேற்றம் எனும் பெயரில் ஆதரிப்பார்கள். ஆனால் ultranationalist என்று ஒன்று உள்ளது. அது ஒரு மிகையான தேசியவாதம். இப்படியான அல்ட்ரா-நேஷனலிஸ்டுகளுக்கு என்று சில அடிப்படையான இயல்புகள் உண்டு. அவர்கள் எதேச்சதிகாரம் கொண்ட தலைவர்களைக் கொண்டாடுவார்கள். தம் தலைவர், அவரது கட்சி, தம் தேசம் இம்மூன்றும் ஒன்றே என நம்புவார்கள். அதாவது தலைவருக்கோ கட்சிக்கோ எதிராய் ஒரு சின்ன மாற்றுக்கருத்து வந்தால் கூட அது தம் தேசத்தை அவமதிப்பது என நினைத்து கொதிப்படைவார்கள். 
மேலும் இவர்களிடம் ஒருவித xenophobia இருக்கும். எந்த பிரச்னை எழுந்தாலும் அதன் வேர் என்னவென ஆராயாமல் அதை இந்த ஸீனோபோபிக் மனநிலையிலே எதிர்கொள்வார்கள். 
கணேஷ்: அதென்ன டாக்டர் xenophobia?
(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com