Enable Javscript for better performance
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 205 - ஆர்.அபிலாஷ்- Dinamani

சுடச்சுட

  
  ENG

  புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா எனும் பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது ஜூலி புரொபஸர் சில நாட்களாக மன அழுத்தத்தில் வாடுவதாக டாக்டரிடம் சொல்கிறது. டாக்டர் மேலும் விசாரிக்கிறார். அப்போது ஜூலியின் விவரணைகளைக் கவனிக்கும் சேஷாச்சலம் புரொபஸருக்கு எந்த பெரிய மனப் பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லையே என்கிறார். இதை அடுத்து புரொபஸரிடம் வேறென்னவெல்லாம் நோய்க்குறிகள் தென்படுகின்றன என சேஷாச்சலம் விசாரிக்க, புரொபஸர் திடீரென தேசியவாதி ஆகி விட்டதாக கணேஷ் சொல்கிறான். இதைக் குறித்து பேசும் போது அவர் xenophobia பற்றி குறிப்பிடுகிறார். அதன் பொருள் என்ன? பார்ப்போம்.
  சேஷாச்சலம்: ஸீனோபோபியா என்பது அந்நியர் மீதான அச்சம். 
  கணேஷ்: ஸீ ஸீனோ ... எனக்கு அது வாயில நுழைய மாட்டேங்குது.
  புரொபஸர்: அது கிரேக்க மொழியில் இருந்து வந்த சொல். ஆதி கிரேக்கர்கள் அந்நியர்களை barbarians என அழைத்தார்கள். அதாவது பண்பற்ற காட்டுமிராண்டிகள் என பொருள். தாம் உன்னதமானவர்கள், அந்நியர்கள் காட்டுமிராண்டிகள் என நம்பியதால் அவர்கள் வேற்று நாட்டினரைக் கைப்பற்றி அடிமையாக வைத்துக் கொண்டார்கள். Zeno என்றால் வேற்று மனிதர்; phobia என்றால் பீதி. 
  கணேஷ்: ஏன் பயப்படணும்? 
  புரொபஸர்: பயமுன்னா பயம். அவ்வளவு தான். 
  சேஷாச்சலம்: நான் சொல்றேன். ஒரு சர்வாதிகார ஆட்சியில் மக்களிடம் பரவலாக ஒரு கடும் பீதியும் பதற்றமும் மேலிருந்து செலுத்தப்படும். இதுவே பின்னர் ஸீனோபோபியா ஆகிறது என்பது ஒரு பார்வை. ஸீனோபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்நியர்களைத் தம் சமூகத்தின் எதிரிகள் என்றும், தம் சமூகமே தேசம் என அவர்கள் கற்பனை பண்ணுவதால் தேசத்தின் விரோதிகள் என அவுட்-குரூப்பைச் சேர்ந்தவர்களை கருதுவார்கள். அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனும் கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்புவார்கள்.
  டெக்னிக்கலான விளக்கம் Xenophobia can involve perceptions <https://en.m.wikipedia.org/wiki/Perception> of an ingroup <https://en.m.wikipedia.org/wiki/Ingroup> toward an outgroup <https://en.m.wikipedia.org/wiki/Outgroup_(sociology)> and can manifest itself in suspicion of the activities of others, and a desire to eliminate their presence to secure a presumed purity and may relate to a fear of losing national, ethnic or racial identity 
  நடாஷா: அதென்ன அவுட்குரூப், இன்குரூப்? 
  சேஷாச்சலம்: இன்குரூப்பை முதலில் விளக்குகிறேன். நீங்கள் எந்தக் குழுவுடன் உங்களை அடையாளப்படுத்துகிறீர்களோ அதுவே உங்கள் இன்-குரூப். அது சாதி, மதம் என எந்த அடிப்படையிலும் இருக்கலாம். நீங்கள் எந்த மக்களுடன் உங்களை அடையாளப்படுத்தவில்லையோ அவர்கள் உங்கள் அவுட்-குரூப். அவர்களைக் கண்டு நீங்கள் அஞ்சுவீர்கள். அச்சம் பின்னர் வன்மமாகும். அவர்களைக் கட்டுப்படுத்த முயல்வீர்கள். கட்டுப்படுத்தாவிட்டால் உங்கள் இன்-குரூப்புக்கு பெரிய ஆபத்துகள் விளையும் என நம்புவீர்கள். பாகிஸ்தான் நம்மீது படையெடுக்கும் எனும் பீதி, ரஷ்யா போர் தொடுக்கும் என அமெரிக்காவில் ஐம்பதுகளில் இருந்த பீதி எல்லாமே ஸீனோபோபியா தான். 
  கணேஷ்: டாக்டர், எங்க புரொபஸர் அப்படி யாரையும் வெறுப்பவர் அல்ல. ஆனால் சமீப
  காலமாக அவர் திடீர் திடீரென யாரையாவது குறிப்பிட்டு திட்டுவார். அப்போது அவரது கோபத்தைக் காண பயமாக இருக்கும். 
  சேஷாச்சலம்: உதாரணமா? 
  கணேஷ்: டாக்ஸி புக் பண்ணி விட்டு டிரைவரே அதை ரத்து பண்ணினால், குடிநீர் வரவில்லை என்றால், செய்தித்தாளில் ஏதாவது பிடிக்கவில்லை என்றால், அயல் மாநில மக்களைக் கண்டால், ஏன் அவருக்கு உணவகங்களில் கிடைக்கும் உணவு அவருக்கு தோதாக இல்லை என்றால் கூட. 
  நடாஷா: You are talking about intolerence?
  சேஷாச்சலம்: இல்ல. Intolerence எனும் சகிப்பின்மை ஒரு அறிகுறி மட்டும் தான். 
  நடாஷா: டாக்டர்,  professor you mean he is turning into 
  a fascist? 
  கணேஷ்: ஐயோ அதென்ன பாசிஸ்ட்? பெரிய வியாதியா? 
  சேஷாச்சலம்: அது வியாதி இல்ல, ஓர் அரசியல் கோட்பாடு. சர்வாதிகாரம், centralisation எனும் மையவாதம், chauvenism, ஸீனோபோபியா ஆகியவற்றை உள்ளடக்கியதே ஒரு பாசிச ஆட்சி. 
  நடாஷா: இந்த chauvenism-மும் male chauvenism-மும் ஒன்றா?
  (இனியும் பேசுவோம்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai