Enable Javscript for better performance
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 219- Dinamani

சுடச்சுட

  
  eng

  புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப் பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்னும் பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். இந்தியர்கள் ஆங்கிலத்தை பயன்படுத்துவதில் வரும் பிழைகளை உண்மையென நம்பி தவறான பிரயோகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் Indianism பற்றி பேச்சு திரும்புகிறது. அவர்கள் பல இந்திய ஆங்கில தவறுகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, by and by எனும் சொற்றொடரின் பின்னணி என்ன, அது எப்படித் தோன்றியது என சுவாரஸ்
  யமான விளக்கத்தை சேஷாச்சலம் தர இருக்கிறார்.
  கணேஷ்: சொல்லுங்க டாக்டர், அதென்ன சுவாரஸ்யமான கதை?
  சேஷாச்சலம்: By and by என்றால் before long எனப் பொருள். அதாவது "விரைவில். ஆனால் இதை நுணுக்கமாகப் பார்த்தால் by and large எனும் சொற்றொடரில் இருந்து இது தோன்றியிருக்கிறது எனப் புரியும். அதென்ன by and large? By என்றால் "பக்கமாக, "சுற்றி வந்து" எனப் பொருள். Large என்றால் "பெரிய ஒன்றுடன்' என அர்த்தம். அதென்ன பெரிய ஒன்று? 
  கணேஷ்: டாக்டர் சீக்கிரம் சொல்லுங்க. இது என்ன பெரிய மர்மக் கதையாகப் போகிறது? 
  நடாஷா: வர வர டிவி சேனல்களைப் போட்டாலே யார் ஆட்சி அமைப்பது, யார் முதலமைச்சர், யார் குடிமக்கள் என்பதெல்லாம் திகிலாக புதுப்புது சேதிகளாக வருகின்றன. இந்த திகில் பத்தாதுன்னு நீங்க வேறயா டாக்டர்! 
  சேஷாச்சலம்: No politics in my clinic. நான் சொல்றது நிஜமாகவே ஆங்கில மொழியில் உள்ள மர்மங்கள். ஆங்கிலத்தில் பல சொற்றொடர்கள் கப்பல் மாலுமிகளின் பழக்கவழக்கத்தால், அன்றாட பிரச்னைகளை ஒட்டித் தோன்றியவை. 
  ஜூலி: Nautical?
  சேஷாச்சலம்: யெஸ்.
  கணேஷ்: நாட்டிக்கலா?
  ஜூலி: Nautical என்றால் concerning sea, sailor or navigation. அதாவது கடல், கடற்பயணம், கப்பல் ஆகியவை தொடர்பான சொற்கள் nautical words.
  கணேஷ்: சரி. இந்த by and by எப்படி கப்பல் தொடர்பானதாகிறது? 
  சேஷாச்சலம்: சொல்றேன் கேளு. ஒரு கப்பல் போகும் போது சூறாவளிக் காற்று வீசுகிறது. அப்போது மீகாமன் ஒரு முடிவெடுக்க வேண்டும். 
  கணேஷ்: மீகாமனா? அது ஒரு ஆர்யா படமாச்சே? 
  ஜூலி: உனக்குத் தமிழும் தெரியாதா? 
  கணேஷ்: அட்லீஸ்ட் தமிழ் என்னோட தாய்மொழி. உன் தாய்மொழி என்ன "பவ் பவ்' தானே?
  ஜூலி: ஷட் அப்! கிர்ர்ர்ர் 
  புரொபஸர்: கணேஷ், ஜூலி கிட்ட வம்பு வேண்டாம். நான் சொல்றேன் மீகாமன் என்றால் captain of a ship. 
  சேஷாச்சலம்: கரெக்ட். நான் சொல்லி முடிச்சிடறேன். அந்த காலத்தில் பெரும் புயல் வீசும் போது அதை எதிர்கொள்ள ஒரு வழி, புயல் வீசும் பகுதியைச் சுற்றி அதன் பக்கமாய் கப்பலை செலுத்துவது. அடுத்து புயல் சற்று சாந்தமானதும் அதன் பக்கமாகவே திரும்பி அதன் திசையில் கப்பலை செலுத்துவது. இப்படி புயலை நீங்கள் சமாளிக்கும் போது கப்பல் தன் இலக்கை எட்ட சற்று கூடுதல் நேரம் எடுக்கும். இந்த சமயோஜிதத்தைத் தான் by and by என்றார்கள். அதாவது பொறுமையாக ஆனால் சரியாக கப்பலை தன் இடத்துக்கு கொண்டு சேர்ப்பது. நவீன ஆங்கிலத்தில் இந்த மாலுமிப் பின்னணி எல்லாம் மறைந்து, அன்றாட வாழ்வில் ஒருவர் தாமதமாக, ஆனால் நிச்சயமாக ஒரு வேலையைச் செய்து முடிப்பதை, ஓர் இடத்துக்கு வந்து சேர்வதைக் குறிக்க பயன்படுத்துகிறார்கள். He was initially 
  reluctant to marry, but with his parents insisting he, by and by came, around and said yes. அதாவது அவருக்கு ஆரம்பத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ள இஷ்டமில்லை, ஆனால் பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்த ஒருவழியாக ஒப்புக் 
  கொண்டார். 
  நடாஷா: இதில் "ஒரு வழியாக' என்பது தான் by and by? eventually மாதிரி? 
  புரொபஸர்: கிட்டத்தட்ட. ஆனால் Eventually எனும் சொல்லில் நிறையப் பிரச்னைகள், தடங்கல்களுக்குப் பிறகு ஒரு விசயத்தை செய்து முடிப்பது என தடங்கல்களுக்கு ஒரு அழுத்தம் வருகிறது. அது by and by இல் இல்லை.
  கணேஷ்: டாக்டர், ரொம்ப நேரமா நாங்க உங்க கிட்ட இங்கே பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்குதே. நாங்க எப்போ போகலாம்? 
  சேஷாச்சலம்: By and by
  (இனியும் பேசுவோம்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai