சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 74

வைல்ட் லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (Wildlife Institute of India) என்ற கல்வி நிறுவனம், இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின்
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 74

வைல்ட் லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (Wildlife Institute of India) என்ற கல்வி நிறுவனம், இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின் கீழ் (Ministry of Environment, Forest and Climate Change) உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 1982 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது உலக அளவில் பெரும் புகழ் பெற்று விளங்கும் கல்வி நிறுவனமாகும். 
இந்த கல்லூரியின் பாடத்திட்டம், கட்டமைப்பு ஆகியவை உயரிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனம் ICLEI - (International Council for Local Environmental Initiatives) தெற்காசியாவுடன் கூட்டுச் சேர்ந்து பங்காற்றி வருகிறது. 
இங்கு பயிலும் மாணவர்கள் இந்தியாவில் உள்ள வனங்களுக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள பல்லுயிர்கள் எவ்வாறு தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன என்பதைப் பற்றிய உயரிய ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். 
அதன் மூலம் வன உயரினங்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றுவதற்கு எம்மாதிரியான திட்டங்களை வரையறுக்க வேண்டும்? அந்தத் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்? வனத்தில் வாழும் பல்லுயிரினங்களைக் காப்பதற்கு எவ்வளவு நிதி உதவி தேவைப்படுகிறது என்பன போன்ற ஆராய்ச்சிகள் இந்த கல்விநிறுவனத்தின் மூலம் செய்யப்படுகின்றன.
இந்தக் கல்விநிறுவனம் உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரமான டேராடூனுக்கு அருகில் அமைந்துள்ளதால் அதன் அருகே அமைந்துள்ள மலைப்பிரதேசமான முசூரி மற்றும் அவற்றின் அருகில் உள்ள இமயமலை வனப்பகுதிகளுக்கு மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் எளிதில் நேரடியாகச் செல்ல முடிகிறது. தங்கள் ஆராய்ச்சிப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடிகிறது. டேராடூனில் கோடைக்காலத்தில் 36 டிகிரி சென்டிகிரேடு முதல் 16.7 சென்டிகிரேடு வரை தட்பவெப்பம் உள்ளது. குளிர்காலத்தில் 5.2 டிகிரி சென்டிகிரேடு முதல் 23.4 சென்டிகிரேடு வரை தட்பவெப்பம் உள்ளது. குளிர்காலத்தில் பனிப்பொழிவு ஏற்படுவது குறிப்பாக கார்வால், ஹிமாலயா பகுதியில் அதிகமாக உள்ளது. இவை போன்ற மாறுபட்ட தட்பவெப்பநிலைகளின்போது வனப்பகுதியில் ஏற்படுகின்ற மாறுதல்களை மாணவர்கள் ஆராய்ச்சி செய்ய கல்லூரி அமைந்துள்ள வளாகத்தில் இருந்து மிக குறுகிய நேரப் பயணத்தில் செல்ல முடிகிறது. வனப்பகுதியில் ஏற்படும் மாறுதல்களை உன்னிப்பாகக் கவனித்து ஆராய்ச்சி செய்து அவற்றை ஆவணப்படுத்துவதும் எளிதாக உள்ளது. 
இங்கு கீழ்க்கண்ட துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 
1. Animal Ecology and Conservation Biology, 2.Ecodevelopment Planning and Participatory Management, 3. Endangered Species Management, 4.Habitat Ecology, 5.Landscape Level Planning and Management, 6. Protected Area Network, Wildlife Management and Conservation Education, 7.Population Management, Capture and Rehabilitation, 8. Wildlife Health Management ஆகிய துறைகள் இயங்கி வருகின்றன. 
இந்தத் துறைகளில் உலகளாவிய பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
நகர்மயமாதலின் காரணமாக வனச்சூழல்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. வனங்களில் வாழக் கூடிய மக்கள் அங்கு கிடைக்கக் கூடிய பொருள்களை (NATURAL RESOURCES) வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வருவதும் அழிக்கப்படுகிறது. இதன் காரணமாக வனத்தில் வாழும் பல்லுயிர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. பெரும்பாலான வன உயிரினங்களைப் பற்றி நாம் அறிவதற்கு முன்பே அவை அழிக்கப்பட்டுவிடுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வன உயிரினங்கள் வாழும் பகுதிகளை விட்டு இடம் பெயராமல் இருக்கும்படி அவற்றை எவ்வாறு பாதுகாப்பது? வனப்பகுதியிலுள்ள மரங்கள், செடிகள் ஆகியவற்றை அழியாமல் எவ்வாறு பாதுகாப்பது? ஆகியவற்றைப் பற்றி இங்கு கற்பிக்கப்படுகின்றன. குறிப்பாக பல்வேறு தட்பவெப்ப சூழலுக்கு ஏற்றவிதத்தில் வாழும் பல்லுயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து இங்கு கற்பிக்கப்படுகிறது. இந்தத் துறை, கன்சேர்வேஷன் ஜெனிட்டிக்ஸ் போன்ற துறைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இதுதவிர, தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு வனப்பகுதியிலும் வாழும் உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. விலங்குகளின் எண்ணிக்கை கண்டறியப்படுகிறது. அவற்றின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.
இதுவரை அறியப்படாத விதிவிலக்கான பகுதிகளை அறிந்து அவை ஆவணப்படுத்தப்படுகின்றன. இதுவரை நாம் அறிந்திராத பல்லுயிர்களைப் பற்றி அறிந்து அவற்றை ஆவணப்படுத்துவதே இத்துறையின் முக்கிய பணியாகும். 
அடுத்த துறையான Ecodevelopment Planning and Participatory Management துறையின் மாணவர்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்கு வாழும் மக்களைச் சந்தித்து அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளை ஆராய்ச்சி செய்து, அங்கு நிலவிவரும் இயற்கைச் சூழல்களை ஆராய்ச்சி செய்து, அந்த ஆராய்ச்சியின் விளைவாக முடிவுகளை வந்தடைகிறார்கள். அந்த ஆராய்ச்சி முடிவுகளை இதேபோன்ற சூழலும், வாழ்நிலையும் உள்ள பிற வனப்பகுதிகளுக்குப் பொருத்திப் பார்த்து அங்கு நல்ல மாறுதல்களை ஏற்படுத்த அவற்றைப் பயன்படுத்த திட்டமிடுகிறார்கள். 
பாதுகாக்கப்பட்ட வனங்களில் உள்ள மரங்கள், விலங்குகள் மற்றும் பல்லுயிர்களைத் திருடிச் செல்லவதைத் தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? அதற்கு எவ்வாறு திட்டமிட வேண்டும்? என்பதற்கு அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் உதவுகின்றன. 
வனத்தின் பாதுகாப்புக்காக வனப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர், மலைவாழ் மக்களை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது? என்ற நோக்கத்துடன் அங்குள்ள சூழல்களை மேம்படுத்த நுண்ணிய செயல் திட்டங்கள் இந்தத் துறையின் மூலம் வடிவமைக்கப்படுகின்றன. 
இவை தவிர, மலைவாழ் மக்களுக்குள் ஏற்படும் தகராறுகள், முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு அங்கு வாழ்பவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இது அந்த மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த இந்தத் துறை ஆய்வு செய்கிறது. 
அடுத்து Endangered Species Management என்ற துறையில் குறிப்பாக அருகிவரும் உயிரினங்கள், பறவைகள் ஆகியவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பது இந்தத்துறையின் கீழ் முக்கியமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. குறிப்பாக ridley turtle எனப்படும் அரிய வகை ஆமைகள், ஹிமலாயாவில் பழுப்புநிறக்கரடி, ஆசியாவில் உள்ள கரும் கரடி போன்றவற்றைப் பாதுகாப்பது குறித்து கற்றுத்தரப்படுகிறது. International Union for Conservation of Nature (IUCN) என்ற உலக அளவில் உள்ள அரிய வகை உயிரினங்களைப் பற்றி ஆவணப்படுத்தி வருகிறது. அது இங்குள்ள உயிரினங்களை ஆராய்ந்து அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்று ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்துகிறது. 
இங்கு ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள், இமயமலையின் உச்சியிலும், இந்தியப் பெருங்கடலிலும், தெற்கிந்திய கடற்கரைப் பகுதிகளிலும், தீவுகளிலும் சென்று மனிதர் மற்றும் வனவிலங்குகளுக்கும் உள்ள தொடர்புகளை எளிமைப்படுத்தி வருகிறார்கள். 
இந்தியா பங்களாதேஷுக்கு இடையில் அமைந்துள்ள சதுப்புநிலக் காட்டுப்பகுதியான சுந்தரவனம் பகுதியில் ராயல் பெங்கால் டைகர், மற்றும் அரிய வகை முதலைகளும், கங்கை நதி டால்பின்களும் உள்ளன. இந்த சதுப்புநிலக்காடுகளின் பரப்பளவு 1330 கி.மீ. ஆகும். 
இங்குள்ள வெள்ளைப் புலிகள் (பெங்கால் டைகர்ஸ்) நடமாடும் பகுதியில் 10 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்கள் வெள்ளைப் புலிகளுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. புலிகளும் மக்களைத் தாக்குவதில்லை. இதுபோன்று ஒருபகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்து பிற 
பகுதிகளிலும் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை இந்தத் துறையின் மூலம் மாணவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். 
இத்துறையின் கீழ் மாணவர்களுக்கு எவ்வாறு வனவாழ் உயிரினங்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது, அவற்றின் நடவடிக்கைகளை கண்காணிப்பது, அங்குள்ள வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது போன்றவை கற்பிக்கப்படுகிறது. மிகக் குறிப்பாக இங்கு பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை அருகிலிருந்து ஆராய்ந்து அவற்றின் வாழ்க்கை முறைகளை அறிந்து அவற்றைப் பாதுகாப்பதற்கு எந்தவகையான சூழல்களை ஏற்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக லடாக் பகுதியில் உள்ள சந்தாங் வனவிலங்கு சரணாலயம், சரிஸ்கா டைகர் ரிசர்வ்ஸ், வெஸ்டர்ன் ஹிமாலாயா ஆகிய பகுதிகளில் அரிய வகை மருத்துவ மூலிகைகள், மிகக்குறைவான எண்ணிக்கையுள்ள தாவரங்கள் எந்தவகைச் சூழ்
நிலையில் உயிர்த்திருக்கின்றன என்பதை ஆராய்ந்து அவற்றைப் பற்றி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
சமூக கல்வி ஆர்வலர்
 www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com