வாங்க இங்கிலீஷ் பேசலாம் 220

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 220

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
புரொபஸர்: சேஷு, இங்கே இருந்தா போகப் போக இது ஒரு மனநல ஆஸ்பத்திரிங்கிற உணர்வே வர மாட்டேங்குது. I feel at home.
ஜூலி: அப்ப இவரை இங்கேயே விட்டுட்டு நாம போயிரலாமா?
புரொபஸர்: ஷட் அப் ஜூலி. ஒரு வாரம் உனக்கு சிக்கன் கட்.
ஜூலி: யாருக்கு வேணும் சிக்கன். நான் ஏற்கனவே வெஜிடேரியன் ஆகிட்டேன். ரொம்ப பசிச்சா மட்டும் சிக்கன் கொடுங்கோ போதும்.
கணேஷ்: சார்... ஜூலி என்ன தப்பா சொல்லிடுச்சு? நீங்க இங்கே ஹாஸ்பிட்டலில் இருக்கும் போது வீட்டில் இருக்கிறாப்ல பீல் பண்ணுறீங்கன்னு சொன்னீங்க. ஜூலி அதனால் "நீங்க பேசாம இங்கியே இருந்திருங்கன்னு' சொல்லுச்சு. அதிலென்ன தப்பு? 
புரொபஸர்: அதுக்கு மீனிங் வேறடா. Feel at 
home-ன்னா நாம ஓர் இடத்தில் relaxedஆ, comfortableஆ உணர்வது. இங்கே நான் அப்படி உணர்வதானால் இது 
என் வீடு மாதிரின்னு ஆகிடுமா? ஆகாது. You can feel at home in a friend’s house, in a coffee shop, in a book shop, in a petshop, in a super market. அதெல்லாம் வீடாகுமா? 
ஜூலி: அப்படீன்னா வீட்ல நீங்க feel at home ஆ இல்ல. அப்படித் தானே? அங்க டென்ஷனா, அசெளகரியமா 
இருக்கீங்க?
புரொபஸர்: Don’t put words in my mouth. நான் அப்படி சொல்லவே இல்ல. படுபாவி அதை அங்கே போட்டுக் கொடுத்து என்னையும் மீனுவையும் பிரிச்சிடாதே! ஏற்கெனவே அவ என்கிட்ட பேச மாட்டேங்குறா. பட் ஐ லவ்ஹெர். 
சேஷாச்சலம்: எனக்கு என்னவோ உங்களுக்கு இடையே ஒரு crisis இருக்கிற மாதிரி படுது. அதை மறைக்கப் 
பார்க்குறே. 
புரொபஸர்: ஆமா. ஆனா அது நாங்க பிரியற அளவுக்கு பெரிய விசயமில்ல. இப்போ அதை விட பெரிய விசயம் ஜுலியோட மனநலம். அவனுக்கு மனசு சரியில்ல. நீ 
ஜூலியை கொஞ்சம் கவனியேன். நாங்க கிளம்பனும். 
ஜூலி: எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. வெஜிடேரியன் ஆன பிறகு நான் உத்தமமான இந்தியன் வேற ஆகிட்டேன். 
புரொபஸர்: ஷட் அப். 
சேஷாச்சலம்: இல்லடா ஜூலி கிட்ட எந்த பிரச்னையும் இல்ல. He is absolutely fine. நீ உன் உடம்பைப் பார்த்துக்கோ. அடுத்த வாரம் ஒரு டேட் தரேன். கவுன்சலிங் வா. சரி பண்ணிடலாம். 
புரொபஸர்: அவ என்னை விட்டு போயிடுவாளாடா சேஷு? 
சேஷாச்சலம்: I am a doctor, not a clairvoyant. 
கணேஷ்: அதென்ன கிளேர்... 
புரொபஸர் (கண்ணைத் துடைத்தபடி): 
அதாவது a person who claims to have a supernatural
ability to perceive events in the future or beyond normal sensory contact. A fortune-teller, a forecaster of the future. 
ஜூலி: அழாதீங்க மாமா. மீனு இல்லாட்டி ஜானு. ஜாலியா இருங்கோ.
புரொபஸர்: அடி, படவா. வாயை மூடிட்டு வா. உனக்கு எங்க பந்தம் பத்தி என்ன தெரியும். It was a match made in heaven. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட பந்தம் எங்களது.
சேஷாச்சலம்: இருக்கலாம். ஆனால் எந்த உறவுக்கும் ஒரு expiry date உண்டு. life burns you out. 
ஜூலி: உண்மை. 
சேஷாச்சலம்: டேய் நீ ஒரு நிலையா இல்ல. You are burning the candle at both ends these days. 
கணேஷ்: என்ன தான் சொல்ல வர்றீங்க? 
சேஷாச்சலம்: ஒரு மெழுகுவர்த்தியை ரெண்டு பக்கமும் பத்த வச்சா என்ன ஆகும்? 
கணேஷ்: எரியும். வேகமா எரியும். நல்ல வெளிச்சத்தோட எரியும். 
சேஷாச்சலம்: ஒரு மனிதன் கடுமையா ஏதாவது வேலைகளில் ஈடுபட்டு தன் ஆற்றலை முழுக்க வெளிப்படுத்துகிறான் என்றால் அதற்கு ஈடாக ஓய்வும் எடுக்க வேண்டும். ஓய்வின்றி ஓர் உறவில் தன் மன 
ஆற்றலை வெளிப்படுத்தினாலும் you burn out. அது தான் அந்த மெழுகுவர்த்தி விசயம். மிதமிஞ்சி ஒருத்தர் மேல அன்பு காட்டுறதும் அந்த உறவை அழிச்சிடும். புரியுதா?
ஜூலி: தாடி வளர்த்து தேவதாஸ் ஆகுறதுன்னா உங்களுக்கு ரெடிமேடா ஒரு நாயா நான் கூடவே இருக்கேன். 
புரொபஸர்: உன்னை முதல்ல கொல்லப் போறேன்.
ஜூலி ஓட புரொபஸர் துரத்திக் கொண்டு போக சேஷாச்சலம் புன்னகைக்கிறார்.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com