Enable Javscript for better performance
இணைய வெளியினிலே...- Dinamani

சுடச்சுட

  
  im2

  முக நூலிலிருந்து....
  * மரங்களின் கிளைகளில் 
  பால்யத்தின் நினைவுகள்... 
  கிளைகளின் தளிர்களில் 
  குறும்புகளின் சித்திரங்கள்.
  சுந்தரபுத்தன்

  * ஓர் இருட்டிலிருந்து
  இன்னோர் இருட்டு 
  நிகழ்வதில்லை.
  ஒரு வெளிச்சத்திலிருந்துதான்... 
  இன்னொரு வெளிச்சம்.
  நா.வே.அருள்

  * நாம் நிராகரிக்கப்படும் 
  இடத்தில்
  நம் கோபத்தைக் காட்டுவதை விட...
  சிரித்த முகத்தைக் 
  காட்டுவதே...
  சிறந்த பதிலடி. 
  திருப்பதி ராஜா

  * கையேந்த வருபவரிடம் மனிதனாக இருங்கள்.
  கல்லாக நின்று...
  கடவுளாகிவிடாதீர்கள்.
  கற்குவேல் ராஜன் தங்கராஜன்

  சுட்டுரையிலிருந்து...
  * 2ஜி இல்ல...
  3ஜி இல்ல... 
  டவர் இல்லனு ஃபீல் பண்ணாதீங்க ஜீ... 
  உங்க ஊர்ல தான், 
  சிட்டுக் குருவி இருக்கு.
  கலியுக கர்ணன்

  * உன் சோகத்தைப் போக்க...
  என்னோடு 
  உடன்கட்டை ஏறாதே-
  சிகரெட்.
  செந்திலின் கிறுக்கல்கள் 

  * பல முட்டாள்களுக்கு 
  வாத்தியாராக இருப்பதை விட...
  ஒரு நல்ல அறிவாளிக்கு
  சீடனாக இருந்து விட்டுப் 
  போய்விடலாம். 
  அசோக் சக்ரவர்த்தி

  * எல்லா இடங்களிலும் பணிந்து 
  போகாதீர்கள்...
  புதைத்து விடுவார்கள்- 
  பிணம் என்று நினைத்து!
  *** 
  * நீங்கள் யாரையாவது
  தலையில் தூக்கி வைத்து
  கொண்டாட நினைத்தால்...
  அது குழந்தையாக 
  மட்டுமே இருகட்டும். 
  பாரமும் இருக்காது...
  துரோகமும் இருக்காது.
  ஷைலு

  * அவசர ஊர்தியில் எத்தனை
  மருத்துவர்கள் இருந்தாலும்.,
  ஓட்டுநரின் முகத்தில் மட்டுமே
  ஓர் உயிரைக் காப்பாற்ற 
  வேண்டும் என்ற பதற்றம்
  தொற்றிக்கொள்ளும்..!!
  முகமூடி

  வலைதளத்திலிருந்து...
  சமூக வலைதளங்களில் உங்கள் ஜாதகம்
  ஜன்ம நட்சத்திர ஜாதக கணிப்புகள் செய்ய முடியாத வித்தைகளையும் சேர்த்தே செய்துவிடுகிறது உங்கள் கணினி தரவுகள். உங்களுக்குப் பிடித்தமானவற்றை எப்போதும் காட்டிக் கொண்டே இருக்கிறது. 
  உங்கள் பயணங்கள், டிக்கெட் விவரங்கள், சாப்பிட்ட ஹோட்டல், சுற்றிப் பார்த்த நாடுகள் என்று உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் டைரியில் போல முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் பாதுகாத்து வைத்திருக்கின்றன.
  இதெல்லாம் கணினியின் பயன்பாடுகள்தானே என்று சொல்ல வருகிறீர்களா...?
  இதில் அவர்களுக்கு என்ன இலாபம்? என்று யோசித்துப் பாருங்கள்.
  இத்தகவல்களைக் கொண்டு நம்மை எளிதில் விற்பனைப் பண்டமாக்கி கோடிக்கணக்கில் முதலீடே இல்லாமல் அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள்!
  கட்டணமே இல்லாமல் முகநூல் போன்ற இணையதளங்கள் இலாபகரமாக இயங்கிக் கொ ண்டிருப்பதன் காரணம் இதுதான்.
  இதை நமக்கான பயனிலையாக எடுத்துக் கொண்டு போக முடியாதா என்றால், அங்கேயும் ஏற்படும் சிக்கல்கள் உளவியல் சார்ந்ததாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
  லைக்ஸ்கள் , பின்னூட்டங்கள், மொண்ணையான எழுத்துகள், மவுன யுத்தங்கள், இனம் புரியாத குழப்பங்கள், இப்படியாக எல்லாரையும் டென்சனாக்கி தன்னைச் சுற்றி ஓட வைத்து அதன் மூலம் தன் வியாபாரத்தளத்தை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்கிறது சமூக வலைதளங்கள். பொய்யான தகவல்கள் மற்றும் செய்திகளை உருவாக்குவதிலும் சமுக வலைத்தளங்கள் முன்னணியில் நிற்கின்றன. சமூக வலைத்தளங்களுக்கு யார் அதிகம் தீனி போடுகிறார்களோ அவர்களை அணுகி தங்கள் முகவர்களாக்கி கொள்கிறது இன்னும் ஆபத்தாக இருக்கிறது.
  விளக்கு வெளிச்சத்தில் சுற்றி சுற்றி வந்து செத்து மடியும் விட்டில்பூச்சிகளாகிவிட்டோமோ?
  http://puthiyamaadhavi.blogspot.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai