வாங்க இங்கிலீஷ் பேசலாம் 178 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 178 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்
திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களும் நடாஷா எனும் பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். Neural pathway என்பதை சேஷாச்சலம் விளக்க, நினைவுத்திறனை வலுவாக்குவதில் அதன் பங்கென்ன எனும் கேள்வியை கணேஷ் எழுப்புகிறான். முன்னமே கேட்ட ஒரு கேள்விக்கு சேஷாச்சலம் பதில் சொல்லாமல் சுற்றி சுற்றி வருகிறார் என்பதை புரொபஸர் கேலி செய்ய, சேஷாச்சலம் அவரை அவசரக்குடுக்கை என மென்மையாக கண்டிக்கிறார்.

சேஷாச்சலம்: You are trying to eat grass that isn’t there. Why don’t you give it a chance to grow? யார் சொன்னது?
புரொபஸர்: Richard Adams.
சேஷாச்சலம்: யெஸ். Watership Down எனும் நாவல் எழுதியவர்.
நடாஷா: ஆமா, நான் படிச்சிருக்கேனே!
கணேஷ்: தனக்குள் அடங்க மாட்டேங்குறாளே. (புரொபஸரிடம்) சார், அந்த மேற்கோளின் பொருள் என்ன?
புரொபஸர்: மனிதனை ஒரு பசு மாடாக கற்பனை பண்ணுகிறார். புல் வளரும் முன்னரே அதை சாப்பிடத் தவிக்கக் கூடாது. அதை வளர விடனும். அப்பத் தான் எதிர்காலத்தில் நிம்மதியா சாப்பிட முடியும். எப்பவுமே அவசரமா கருவிக்கிட்டு இருந்தால் மேய்ச்சல் நிலமே மொட்டையாகிடும் என்கிறார். 
சேஷாச்சலம்: ஆமா! ஆகையால், ஒரு நல்ல விசயம் நடக்க பொறுமை காக்கணும். எல்லாத்துக்கும் பொருத்தமான சந்தர்ப்பம் அமையணும் இல்லையோ? அதனால் கொஞ்சம் பொறுத்து லொடலொட இரட்டைக்கிளவிக்கு வரேன். சரி இப்போ விசயத்துக்கு வரேன். Neural pathway-க்கும் நினைவுத்திறனுக்குமான தொடர்பு பற்றி கேட்டே இல்லியா... ஏற்கனவே உருவான ஒரு தடத்தில் தானே நாம சுலபத்தில் பயணிப்போம். வீட்டுக்குள் கூட நாம நடப்பதில் ஒரு ழ்ங்ல்ங்ற்ண்ற்ண்ஸ்ங் தடம் உண்டு. ரோட்டில், வனத்தில் கூட உண்டு. நடக்க நடக்க பாதை தோன்றும். நினைவுத் திறனை எடுத்துக்
கொள்ளேன். நீ படித்த வார்த்தை அல்ல, பழகிய வார்த்தையே உன் நினைவில் தங்கும். 
புரொபஸர்: கரெக்ட். நான் ஆங்கிலம் கற்க விரும்பும் என் மாணவர்கள் அனைவரிடமும் சொல்வது இது. யாராலும் படிக்க முடியும். ஏனென்றால் நமது மூளை பிளாஸ்டிக்கானது. அதனால் எந்த நிலையில் இருந்தும் நம்மால் மேம்பட, மாற முடியும். கல்வி அறிவே இல்லாத ஒருவர் கூட ஒரு குறிப்பிட்ட சூழலுக்குத் தள்ளப்படும் போது, அங்கு ஒரு மொழியில் புழங்கும் கட்டாயம் ஏற்படும் போது, சட்டென அதை கற்றுக் கொள்வார். பிரான்ஸில் இருக்கும் ஒரு ஈழத்தமிழர் பிரஞ்சு மொழியைக் கல்லாமலே கற்று சரளமாய் பேச முடியும். இது எல்லாருக்கும் பொருந்தும். ஒருவர் தன் காதைத் திறந்து வைத்திருக்க வேண்டும்; வாய் வலிக்கும் வரை பேச தயாராக இருக்க வேண்டும். மேலும், இதனால் தான் வடிவேலுவின் "முடியல' அவ்வளவு பாப்புலர் ஆனது. அதை எல்லாராலும் சொல்ல முடிந்தது; நாம் அதை திரும்பத் திரும்ப சொல்ல அது நம் neural pathways -இல் படிய அதை நம்மால் மறக்க முடியாமல் ஆகிறது. 
சேஷாச்சலம்: சரி, இனி லொடலொடக்கு வருகிறேன். 
நடாஷா குறுக்கிட்டு: அது onomatopoeia தானே?
கணேஷ்: அதென்ன யானை முட்டையா? 
நடாஷா: நோ, இப்படி உச்சரிக்கணும் - ஒனெமடெபியெ. அதாவது ஒலியை ஒட்டி உருவாக்கப்பட்ட சொற்கள். Cuckoo, sizzle. 
சேஷாச்சலம்: ஆமா. இது இரு கிரேக்க சொற்கள் இணைந்து உருவானது. Onoma என்றால் ஒலியின் பெயர். Poiein என்றால் உருவாக்குவது. இதை ரெண்டையும் சேர்த்தால் ஒலியை உருவாக்குவது என்றாகும். Slap என்று சொன்னாலே நமது பளார் என்ற ஒலியும் காதுக்கும் ஒலிக்கும் இல்லையா? இச்சொற்கள் அப்படியானவை. இதை ஐந்தாகப் பிரிக்கிறார்கள். ஒன்று நீர்ச் சொற்கள்: Splash, spray, sprinkle, squirt, dribble, drip, drizzle. இந்த சொற்கள் பெரும்பாலும் so அல்லது dr- எனத் தொடங்கும். குறைவான நீர் வெளியாவதை சொல்லும் சொல் என்றால் அது -le என முடியும். 
கணேஷ்: எனக்கு இதில் நிறைய சொற்கள் புரியல டாக்டர்.
சேஷாச்சலம்: அதை விளக்கிறது உன் புரொபஸரோட டிபார்ட்மெண்ட். நான் சொல்ல வந்ததை முடிச்சிடறேன். ஒரு டாக்டருக்கு time management, அதாவது ஒரு விசயத்தை நேரத்துக்கு செய்து முடிக்கும் தன்மை, அவசியம்.
புரொபஸர்: ம்க்கும். இந்த பேச்சு மட்டும் இல்லேன்னா உன்னை நாய் கவ்விட்டு போயிடும்.
சேஷாச்சலம் (புரொபஸரிடம்): ச்சூ! (எல்லாரையும் நோக்கி): இரண்டாவது வகை, வாயில் இருந்து நாம் வெளிப்படுத்தும் ஒலிகளுக்கான சொற்கள்.
கணேஷ்: எல்லா சொற்களையும் வாயில இருந்து தானே டாக்டர் வெளிப்படுத்துறோம்?
சேஷாச்சலம் (அலுத்துக் கொண்டு): இரு சொல்றேன்.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com