இணைய வெளியினிலே...

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு புருடா கிளப்பப்படுகிறது. எட்டு கிரகங்கள் ஒரே பாதையில் வரப் போகிறது,
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....
• பூவின் மேல் அமரும்
வண்ணத்துப் பூச்சி...
இன்னொரு பூவாகிறது.
நேசமிகு ராஜகுமாரன்

• உன்னை முகத்துக்கு நேரே
புகழ்பவனிடமிருந்து 
விலகியே இரு... 
அவன் முதுகில் குத்த 
வரும்போது
நீ பாதுகாக்கப்படுவாய்.
அஜயன்பாலா பாஸ்கரன்

• எவரையும் உலகம் என்று
நினைத்துக் கொள்ளாதீர்...
பிறகு உங்கள் உலகம் 
சுழலாமல் அங்கேயே
நின்றுவிடும். 
ஜெயபிரகாஷ்

• விழுந்த இலைகளுக்காக 
எந்த மரமும்
விழுந்து விழுந்து அழுவதில்லை...
தளிர்களைத் தந்து,
மீண்டும் மீண்டும் 
தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது.
நட்பென்றால் நாம் என்போம்

சுட்டுரையிலிருந்து...
* தலையில் 
அதிக பாரம் வைத்து 
நடப்பவர்களை விட,
மனதில் 
அதிக பாரம் வைத்து
நடப்பவர்களே 
இங்கு அதிகம்..
ஷைலு

• உங்களுக்குப் பிடித்ததை எல்லாம்
செய்யாமல்...
தள்ளிப் போட்டுக் கொண்டே 
இருக்கிறீர்கள் என்றால், 
நீங்கள் பிழைத்துக் 
கொண்டிருக்கிறீர்கள்... 
வாழ்ந்து கொண்டிருக்கவில்லை.
கோழியின் கிறுக்கல்

• புதுசா பேனா வாங்கினால்
பிடித்த பெயரை 
எழுதிப் பார்த்ததன் 
பரிணாம வளர்ச்சிதான்...
புதுசா போன் வாங்கினால் 
மனதுக்குப் பிடித்தவரிடம் முதலில் பேசுவது.
மெத்த வீட்டான்

• "கூட யாராச்சும் 
வந்திருக்காங்களா?'' என்ற 
டாக்டரின் கேள்விக்கு...
அந்த முதியவரின் 
மௌனம் 
நோயினும் கொடியது.
சிலந்தி

வலைதளத்திலிருந்து...
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு புருடா கிளப்பப்படுகிறது. எட்டு கிரகங்கள் ஒரே பாதையில் வரப் போகிறது, அத்துடன் உலகம் அழிந்து விடப் போகிறது என்ற பீதி உண்டாக்கும் புரளி சில வருஷங்களுக்கு முன்பு பரவியது. ஆனால் கிளப்பப்பட்டது மட்டும்தான் மிச்சம். இந்த உலகத்திற்கு எதுவும் நேரவில்லை. ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒரு சிறிய நல்ல பலன் கிட்டியது என்று சொல்லலாம். மகா பெரியவா சொன்னதன் பேரில், எட்டு கிரகங்களால் ஏற்படும் அபாயத்தை தவிர்க்க தனியாகவோ சேர்ந்ததோ கோளறு பதிகம் பஜனை பலர் செய்தார்கள். அதனால் தமிழ் மொழியின் அழகை ரசிக்க முடிந்தது; பாடல்களைத் தெரிந்து கொள்ளவும், மனனம் செய்யவும் முடிந்தது. எட்டு கிரகங்கள் சேர்ந்து தமிழுக்கு செய்த சேவை என்று இதைக் கருதலாம். 
இந்த காலகட்டத்தில் மற்றொரு ஆதாரம் இல்லாத செய்தி பல நாடுகளில் பரவியது. அது பறக்கும் தட்டு. அயல் கிரகங்களிலிருந்து, அந்த "பயங்கர' கிரகவாசிகள் பறக்கும் தட்டுகளில் (Unidentified Flying Object) வந்து இறங்கப் போகிறார்கள் என்று யாரோ திரித்துவிட்டார்கள். கூகுள் இல்லாத காலத்தில் கூட மிக வேகமாக உலகெங்கும் பரவி விட்டது. 
"இந்த ஊரில் பறக்கும் தட்டு வந்தது; அந்த ஊரில் பறக்கும் தட்டு தெரிந்தது' என்று பல கற்பனை மன்னர்கள் வதந்திகளைப் பரப்பிக் கொண்டே இருந்தனர். இந்த பறக்கும் தட்டு சரடு அவ்வப்போது அடங்கிப்போகும் அவ்வப்போது வெளியே வரும். 
https://kadugu-agasthian.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com