வாங்க இங்கிலீஷ் பேசலாம் 179 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 179 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களும் நடாஷா எனும் பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். லொட லொட, படபட என தமிழில் வரும் இரட்டைக்கிளவி சொற்கள் ஆங்கிலத்தில் உண்டா எனும் கேள்விக்கு நடாஷா onomatopoeia என பதிலளிக்க சேஷாச்சலம் அது குறித்து மேலும் விளக்குகிறார். 
சேஷாச்சலம்: அதாவது தம்பி, ரெண்டாவது வகையான onomatopoeia சொற்களை வாயில் இருந்து வெளிப்படும் ஒலிகள் என்போம். உதாரணமாய் grunt அல்லது grumble போன்றவை அடித்தொண்டையில் இருந்து நாம் எழுப்பும் ஒலியை பிரதிநிதித்துவப்படுத்துவன. இப்படி வாயில் இருந்து எழும்பும் ஒலியை பிரதிநிதித்துவப்படுத்தும்படியாய் ஒரு சொல் அமைவதும், வெறுமனே வாயில் இருந்து உச்சரித்து சொல்லை வெளிப்படுத்துவதும் வேறுவேறு தானே? உதாரணமா, what, when ஆகிய சொற்களுக்கும் அவற்றை நாம் உதடுகளை "ஒ' வடிவில் குவித்து உச்சரிப்பதற்கும் தொடர்பில்லை. ஆனால் grunt எனும் போது அச்சொல்லை அல்ல அடித்தொண்டையில் இருந்து உறுமுகிற ஒலியைத் தான் குறிக்கிறோம். வித்தியாசம் புரிகிறதா இப்போ?
கணேஷ்: ஓரளவுக்கு டாக்டர்.
சேஷாச்சலம்: ஆங்... இப்போதைக்கு இது போதும். இப்படி அடித்தொண்டை ஒலிகளுக்கான சொற்கள் gr-இல் இருந்து ஆரம்பிக்கும். Growl – ஒரு புலி உறுமுவது. ஆனால் ஞ்ழ்ன்ய்ற் என்பதில் வேறொரு பொருளும் உண்டு. ஆமா என்பதை நேரடியாய் முழுமையாய் சொல்லாமல் அதை "ம்ம்' என தொண்டையை லைட்டாய் செருமி சொல்வாங்களே... என்னோட அப்பா எப்பவுமே அப்படித் தான். நாங்க ... சின்ன வயசில எங்களுக்கு எது வேணும்னாலும் அம்மா கிட்ட சொல்லி அப்பா கிட்ட கேட்கச் சொல்வோம். அப்புறம் அவர் பேப்பர் வாசிக்கும் போது முன்னாடி போய் நிப்போம். அம்மா வாசல் பக்கமா வந்து நின்னும் ஞாபகப்படுத்துவா. அப்பா கண்டுக்கவே மாட்டார்... And we just wait for him to grunt his approval. சட்டுன்னு பேப்பரை தாழ்த்தி என்னைப் பார்த்து he will grunt. அவ்வளவு தான் நான் உற்சாகமா ஓடுவேன்.
நடாஷா: Beautiful!
புரொபஸர்: ஆமா, அடுத்து ஞ்ன்ழ்ஞ்ப்ங் கேள்விப்பட்டிருக்கியா? நோயாளிகளுக்கு தொண்டை கட்டினா நாங்க இதைப் பண்ணச் சொல்லுவோம். ஆனால் ஒருத்தரும் பண்ண மாட்டாங்க.
கணேஷ்: எனக்குத் தெரியும். உப்புத்தண்ணி கொப்புளிக்கிறது தானே?
சேஷாச்சலம்: கரெக்ட். இந்தச் சொல்லை நீ எப்படி உச்சரிப்பே? தொண்டைக்குள்ள தண்ணி ஊத்தி வாயை தூக்கி சாய்த்து அதை கொடகொடன்னு சத்தம் எழும்ப கொப்புளிக்கிற மாதிரியே தொண்டையை பாதி மட்டும் திறந்து சொல்வோம். அந்த ஒலி ஞாபகப்படுத்தும்படியே gurgle என்று சொல்வோம். Murmur, mumble  போன்ற சொற்களும் இப்படியே தான். Murmur என்றால் முணுமுணுப்பது. தமிழிலும் பாருங்கள்... "முணுமுணு' என்றே வருகிறது. Mumble என்றால் தெளிவின்றி மெதுவாக எதையாவது சொல்வது. 
புரொபஸர்: அதே போல, பல்லால் சரியாய் கடிக்காமல் மெல்லுவதையும் mumble என்போம். பல்லில்லாத ஆட்கள் சவ்வுசவ்வென்ற உணவை மென்று சாப்பிடுவதை இப்படி சொல்வோம்: The old man mumbled the piece of chapatti dipped in chicken curry.
சேஷாச்சலம்: யெஸ் கரெக்ட். Have you heard people belching after a fulsome meal?
புரொபஸர்: இல்லடா, நீ சொல்றது தப்பு. Fulsome என்பதை நாம் மிகுதியான, அதிகப்படியான என்கிற அர்த்தத்தில் அவ்வளவாய் பயன்படுத்துறதில்ல. அதுவும் ஒரு பொருண்மையான, concrete ஆன உணவு மாதிரியான விசயத்துக்கு adjective வாக அதை பயன்படுத்துறதில்ல. மாறாக, மிகையான போலியான புகழ்ச்சி, flattery, ஜால்ரா பேச்சு ஆகியவற்றை குறிக்கத்தான் அதிகமும் இப்போது fulsome என்பதை சொல்கிறோம். The MLA showered minister with fulsome 
praise for increasing jobs for the youth, without realizing the factual error in his claim. எம்எல்ஏ அமைச்சரை அவர் வேலை வாய்ப்பை பெருக்கியதற்காக புகழ்ந்தார், ஆனால் புள்ளிவிவரம் மாறுபடுவதை அவர் கவனிக்கவில்லை. இவ்வாக்கியத்தில் fulsome எனும் சொல் வந்ததுமே இதன் எதிர்மறையான pejorativeவான தொனி வாசகர்களுக்குப் புரிந்து விடும்.
சேஷாச்சலம்: ஓ... ஆமா. நான் இதை யோசிக்கல. Fulsome என்னை எப்பவுமே குழப்புற வார்த்தை. But I like that word.
புரொபஸர்: ஆமாடா உனக்குத் தான் பழைய சொற்கள் என்றால் விருப்பமாச்சே? இதுவும் ரொம்ப பழைய சொல் தான். இதோட வரலாறு ரொம்ப சுவாரஸ்யமானது. 
சேஷாச்சலம்: சொல்லுடா கேட்போம். 
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com