வேலை...வேலை...வேலை...

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை, தேசிய நீர் மேலாண்மைத் துறையில் வேலை, சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்தில் வேலை
வேலை...வேலை...வேலை...

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 60 
பணி: Assistant System Engineer
காலியிடங்கள்: 36
பணி: Assistant System Analyst
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500 
தகுதி: பொறியியல் துறையில் Computer Science and Engineering, Computer Engineering, Information Technology, Electronics and Communication Engineering, Electrical and Electronics Engineering போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பிசி,எம்பிசி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் 32 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
பதிவுக் கட்டணம்: ரூ.150. ஏற்கெனவே, ஒரு முறை பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்தினால் போது
மானது. கட்டணங்கள் வங்கியின் அட்டைகளைப்பயன்படுத்தியும், ஆன்லைன் மூலம் செலுத்தலாம். கட்டணச் சலுகைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 22.02.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.04.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:
http://www.tnpsc.gov.in/Notifications/2019_05_Notifyn_Assistant_System_Engineer_Analyst.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.02.2019

தேசிய நீர் மேலாண்மைத் துறையில் வேலை
பணி: Junior Engineer
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 
பணி: Junior Accountant 
காலியிடங்கள்: 07 
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: வணிகவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
பணி: Stenographer Grade-II 
காலியிடங்கள்: 08 
சம்பளம்: மாதம் ரூ.25,500 -81,100 
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 10 நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடம் சுருக்கெழுத்தில் எழுதி அதை ஆங்கிலத்தில் 65 நிமிடத்திற்குள்ளும் ஹிந்தியில் 75 நிமிடத்திற்குள்ளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் 50 நிமிடத்திற்குள் இந்தியில் 65 நிமிடத்திற்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
பணி: Lower Division Clerk  
காலியிடங்கள்: 33 
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 25 வார்த்தைகள் இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
சம்பந்தப்பட்ட பணியில் அனுபவமும், கூடுதல் தகுதி மற்றும் கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.650, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.450 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 
தேர்வு செய்யப்படும் முறை: கணினி எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.nwda.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://cdn.digialm.com/per/g01/pub/1258/EForms/NWDAFinalDetailedAdvertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.02.2019

சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்தில் வேலை
பணி: Scientist (Gr.IV)
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.67,700
தகுதி: பொறியியல் துறையில் Highway, Transportation Engg, Rock Mechanics, Geotechnical Engineering பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும் முறை: www.crridom.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட்அவுட் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு சுய சான்று செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
முகவரி: Controller of Admisistration, CSIR-Central Road Research Institute, Delhi - Mathura Road, PO-CRRI, New Delhi -110 025.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.crridom.gov.in/sites/default/files/detailed-advt-scientist-18-01-2019.pdf என்ற லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.02.2019
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 01.03.2019

தமிழக சுகாதாரத்துறையில் வேலை
பணி: செவிலியர்(Nurse) 
காலியிடங்கள்: 520
தகுதி: செவிலியர் துறையில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் குடும்ப நலத்துறை கவுன்சில் நிரந்த பதிவு செய்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350ம், மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.700 கட்டணமாக செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_SNCU_Notification_06022019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.02.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com