Enable Javscript for better performance
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 173 - ஆர்.அபிலாஷ்- Dinamani

சுடச்சுட

  

  வாங்க இங்கிலீஷ் பேசலாம் 173 - ஆர்.அபிலாஷ்

  By DIN  |   Published on : 08th January 2019 10:00 AM  |   அ+அ அ-   |    |  

  im5

  புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள்.
  நடாஷா எனும் பெண்ணும் அங்கு காத்திருக்கிறாள். சமகால ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் சொற்களை அவர்கள் விவாதிக்கிறார்கள்.
  செவிலி: மிஸ்டர் புரொபஸர்
  புரொபஸர் எழுந்து நிற்கிறார்.
  செவிலி: அதுக்கு ஏங்க எழுந்து விறைப்பா நிக்குறீங்க? இங்க என்ன போலீசுக்கா ஆளெடுக்குறாங்க? அப்படீக்கா போங்க - உங்க வெயிட் செக் பண்ணுவாங்க.
  அப்புறம், வலது பக்கம் திரும்பினா டாக்டர் ரூம். கிளம்புங்க.
  (போகிறார்)
  கணேஷ்: சார் நீங்க டிவியில பிக்பாஸ் ஜூலியைப் பார்த்து அரண்டப்பவே நினைச்சேன். நர்ஸýன்னாலே ஏன் ஜெர்க் ஆகிறீங்க?
  புரொபஸர் தனக்குள் முனகுகிறார்: 
  மரியாதை கொடுக்கறது எங்க தலைமுறையோட பழக்கம்டா. அது போகாது. இப்ப அப்படி செஞ்சா கிண்டலடிக்கிறாங்க.
  கணேஷ்: உங்களுக்கு என்னதான் ஆச்சு?
  செவிலி திரும்பி கணேஷைப் பார்த்து: Who is this class clown? 
  நடாஷா (சிரிக்கிறார்): ஹா... ஹா... 
  That was a good one.
  செவிலி: தேங்க் யூ டியர் (போகிறார்).
  கணேஷ்: சார்... அக்கா என்னை அசிங்கப்படுத்திட்டாங்க. என்னை ஸ்கூல் பையன்ட்டாங்க.
  நடாஷா: நோ... அதில்ல மீனிங். 
  கணேஷ்: அப்புறம்?
  நடாஷா: ஒரு வகுப்பில சீரியஸான பிரச்னை நடந்துக்கிட்டு இருக்கும் போது சட்டுன்னு காமெடி பண்ணி எல்லாரையும் சிரிக்க வைக்கிறதுக்குன்னே ஒருத்தன்
  இருப்பான். சில்லி ஜோக்ஸ், கோணங்கி சேஷ்டைன்னு கலகலக்க வைப்பான். அவன் எதாவது சீரியசா சொன்னா யாரும் பொருட்படுத்த மாட்டாங்க. சிலநேரம்
  ஒரு முக்கியமான டிஸ்கஷனின் போது இப்படி பண்ணி எல்லாரையும் கடுப்பேத்துவாங்க. அவங்க தான் கிளாஸ் கிளவுன். நீ பண்ணினது ரெண்டாவது.
  சமயோஜிதம் இல்லாத கிளவுன்.
  கணேஷ்: இப்போலாம் class clown ஆக இருக்கிறது தான் சரி. சரி... வாங்க சார்... போவோம்.
  கணேஷும் புரொபஸரும் ஜூலியும் நேராகச் சென்று திரும்பி ஓர் அறை நோக்கிப் போகிறார்கள்.
  நடாஷா அவர்களுக்குப் பின்னால் செல்கிறாள்: சார்... நானும் உங்க
  கூட வரேன். சும்மா பேச்சுத் துணையா இருக்குமே.
  மீசைக்காரரிடம் செவிலி செல்கிறார்.
  செவிலி: நீங்க கவுன்சலிங் அறைக்கு போங்க.
  (அவர் செல்கிறார்)
  புரொபஸர் எடையை அளக்கிறார்கள்.
  செவிலி: 55. கரெக்ட் வெயிட் தான்.
  ரத்த அழுத்தத்தை சோதிக்கிறார்.
  செவிலி: 110. இதுவும் சரியா
  இருக்குது. Fit as a fiddle.
  கணேஷ்: சார்... அது ஏன் ஆரோக்கியம் பற்றி சொல்லும் போது பிடில் பத்தி சொல்றாங்க?
  புரொபஸர்: அதுவா? மிகக் கச்சிதமாக உடல் தேர்ச்சியுடன் கட்டமைப்புடன் ஒருவர் இருக்கிறதா பொருள். உதாரணமா, 
  Virat Kohli is fit as a fiddle.
  நடாஷா: So is MS Dhoni.
  கணேஷ்: சார் எனக்கு இரண்டு டவுட்ஸ். ஒண்ணு, So isன்னு ஏன் நடாஷா சொல்றாங்க? நர் என்றால் அதனால் என்று தானே அர்த்தம். அடுத்ததா, ஏன் பிடில்?
  அது நீரோ மன்னன் வாசிச்சதாச்சே?
  புரொபஸர்: So is என்றால் "அவரும் தான்' எனும் பொருள் இங்கே வருது. எங்க காலத்தில Vyjayanthimala was a beauty queen. So was Padmini.
  நடாஷா: கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே stunning perfor
  mance இல்லையா?
  புரொபஸர்: Coffee is addictive, so is tea. காப்பி ஒரு போதை, டீயும் அப்படியே. அடுத்தது பிடில். பிடில் என்றால் இங்கே வயலின். ஜிம்மில் உடற்பயிற்சி
  தொடர்ந்து செய்பவரின் இடை வடிவம் வயலினின் வளைவை ஒத்திருக்கும்; மார்பு அதே போல விரிந்திருக்கும். இப்படி இடுப்பு ஒடுங்கி மார்பு விரிந்து வலுவாக
  தெரிபவரே fit as a fiddle என அழைக்க தகுதியானவர். பதினேழாம் நூற்றாண்டில் இருந்து இந்த சொலவடை புழக்கத்தில் இருக்கிறது.
  கணேஷ்: சார்... உங்க டாக்டர் வெயிட் பண்றாரு... வாங்க போலாம்.
  அவர்கள் மூவரும் ஜூலியுடன்
  உளவியலாளர் சேஷாச்சலத்தின் அறைக்குச் செல்கிறார்கள்.
  சேஷாச்சலம்: என்ன கூட்டமா இவ்வளவு ஜாலியா பேசிக்கிட்டு வரீங்க? நீங்க இப்படி சிரிச்சா எனக்கு வேலையில்லாமப் போயிடுமே?
  நடாஷா: The doctor has now got ergophobia. ஹா... ஹா... so funny.
  கணேஷ்: ஆங்?
  (இனியும் பேசுவோம்)


   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp