ஓட்டுநரின் தூக்கத்தை எச்சரிக்கும் ஸ்மார்ட் கண்ணாடி!

நொடிப்பொழுதில் நடந்துவிடுவது சாலை விபத்து. ஆனால், படுகாயமடைபவர்களின் வாழ்வை அந்த விபத்து பின்னுக்கு தள்ளிவிடுகிறது. இந்தியாவில் தான் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன
ஓட்டுநரின் தூக்கத்தை எச்சரிக்கும் ஸ்மார்ட் கண்ணாடி!

நொடிப்பொழுதில் நடந்துவிடுவது சாலை விபத்து. ஆனால், படுகாயமடைபவர்களின் வாழ்வை அந்த விபத்து பின்னுக்கு தள்ளிவிடுகிறது. இந்தியாவில் தான் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, வேகமாக ஓட்டியது போன்ற காரணங்கள்தான் பெரும்பாலான விபத்துகளுக்கு கூறப்படுகின்றன.
 இதற்கு இணையான ஒரு காரணமும் உண்டு. அதுதான் தூக்க நிலையில் வாகனம் ஓட்டுவது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப்போல், உடலின் சோர்வு கண்களில் தெரிந்துவிடும். கண் அசரும் நொடியில் ஏற்படும் சாலை விபத்தும், குடிபோதையில் ஏற்படும் சாலை விபத்தும் ஒரே மாதிரியாக நிகழும் என ஆய்வுகள் கூறுகின்றன.
 இந்தப் பிரச்னைக்கு பிரான்ûஸச் சேர்ந்த "எல்லைஸ்' என்ற நிறுவனம் "ஸ்மார்ட் மூக்குக் கண்ணாடி' மூலம் தீர்வு கண்டுள்ளது. ஓட்டுநர்கள் இந்த மூக்குக் கண்ணாடியை அணிந்து வாகனம் ஓட்டினால், தூக்கமோ அல்லது சோர்வோ இருந்தால் இந்தக் கண்ணாடி துல்லியமாக கண்காணித்து எச்சரிக்கும்.
 இந்தக் கண்ணாடியில் உள்ள 15 வகையிலான சென்சார்கள் ஓட்டுநர்களின் தலை அசைவு, கண் அசைவு, ஏன் கொட்டாவியைக் கூட கணக்கிட்டு ஓட்டுநர்களின் நிலையை எச்சரிக்கும். ஓட்டுநர்களின் உடல்நிலையை கண்களின் அசைவு மூலம் கண்காணித்து கண்ணுக்கு அருகே உள்ள சென்சார் மூலம் சிறு ஃபிலாஷ் லைட் அல்லது ஒலி மூலம் எச்சரிக்கும் வகையில் இந்தக் கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளது. தூங்கும் ஓட்டுநர்களைக் கண்காணிக்க தற்போது சந்தையில் உள்ள கருவிகள், ஓட்டுநருக்கு எதிரே பொருத்தும் வகையிலும் அல்லது கையில் அணிந்து ஓட்டக் கூடியதாகவும் உள்ளன. ஆனால், மூக்குக் கண்ணாடியைப் போல் அணிந்து ஓட்டக் கூடிய இந்த ஸ்மார்ட் எல்லைஸ் கண்ணாடியின் விலை சுமார் ரூ. 17 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரம் வாகனம் ஓட்டுபவர்களும், வயதான வாகன ஓட்டிகளுக்கும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி உயிர்காப்பானாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.
 - அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com