வாங்க இங்கிலீஷ் பேசலாம் 176 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 176 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா எனும் பெண்ணிடம் நட்பாகிறார்கள். நால்வரும் மருத்துவரின் அறையில் உரையாடுகிறார்கள். சேஷாச்சலம் நடாஷாவுடனான அரட்டையின் போது பிரேக் டவுன் எனும் சொற்றொடர் பற்றிப் பேசும் போது எதேச்சையாக உரையாடல் உளவியல் துறையில் பிரசித்தமான சொற்களை நோக்கிச் செல்கிறது. அப்போது அவர் பயன்படுத்தும் synapse எனும் சொல்லின் பொருள் என்னவென விளக்க நேர்கிறது.
சேஷாச்சலம்: Synapsis என்பது இரு நரம்பணுக்களின் இடையிலான ஒரு junction. அதாவது ஓர் இணைப்பு. இந்த இணைப்பு என்பது எப்போதும் இருப்பதில்லை. இது பெளதிகமான இணைப்பு அல்ல. மாறாக சினாப்ஸிஸ் என்பது ஒரு இடைவெளி. A gap.
நடாஷா: அதெப்படி ஒரு விசயம் junction மற்றும் gap ஆக ஒரே சமயம் இருக்க முடியும்?
சேஷாச்சலம்: நல்ல கேள்வி. நம்முடைய நரம்பணுக்களை பிளாஸ்டிக் என்கிறார்கள். அதாவது நரம்பணுக்களின் செயல்பாடு இறுகினதாய் மாறாமல் இருப்பதில்லை. அவை தொடர்ந்து மாறி வருகின்றன. இதை neuroplasticity என்கிறார்கள். இதையே brain plasticity, neural plasticity என்றும் சொல்கிறார்கள். பிளாஸ்டிசிட்டி என்றால் தொடர்ந்து உருமாறும் நிலை. நமது மூளையின் அமைப்பே தொடர்ந்து உருமாறுவது என்கிறார்கள். உதாரணமாய், நம் மூளையின் grey matter பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? 
நடாஷா: Intelligence?  
புரொபஸர்: ஆமா, அது ஓர் அர்த்தம். ஆனால் கிரே மேட்டர் அது மட்டுமல்ல. மருத்துவர்களைப் பொருத்தமட்டில் கிரே மேட்டர் என்றால் நம் மூளை மற்றும் முதுகெலும்பில் உள்ள நரம்பணுக்களின் திரட்சி - கருமையான திசுக்கள். அதனாலே இவை கிரே மேட்டர் எனப்படுகிறது. கிரேமேட்டரின் அளவு ஒருவரது மூளைத்திறனைச் சுட்டுகிறது. ஒருவரது நினைவுத்திறன், பேச்சுத்திறன் மற்றும் தசைக்கட்டுப்பாடு ஆகியவற்றை இது தான் தீர்மானிக்கிறது. நம்முடைய மூளையினால் ஆயிரம் TB அளவு தகவல்களை உள்ளடக்க முடியும். ஒரு galaxyயில், அதாவது ஒரு நட்சத்திர மண்டலத்தில், உள்ள விண்மீன்களை விட அதிகமான நரம்பணுத் தொடர்புகள் நம் மூளையில் உள்ளன. ஒரு நரம்பணு 4-100 micron (மைக்ரோன்) அளவு அகலம் கொண்டிருக்கும். Micron என்பது மிக மிக சிறிய ஒரு அளவு. 
நடாஷா: ஓ...
சேஷாச்சலம்: புரொபஸர் இவ்வளவு விசயங்களை எங்கே போய் கத்துக்கிறீங்க? சரி, நான் கிரே மேட்டர் பற்றி இன்னொரு முக்கியமான விசயத்தைச் சொல்றேன். ஒருவரது கிரே மேட்டர் என்பது நமது மூளையிலும் முதுகெலும்பிலும் தொடர்ந்து வளர்ந்தும் குறைந்தும் வரும். நீங்க ஒரு குறிப்பிட்ட திறனை வளர்க்கும் பொருட்டு தொடர்ந்து பயிற்சி செய்யும் போது உங்க கிரே மேட்டரில் மாற்றங்கள் நிகழும். அதே போல, நீங்க உடற்பயிற்சி செய்தாலோ ஒரு புது விளையாட்டைக் கற்றுக் கொள்ளும் போதோ நிகழும். இது elasticityக்கு மற்றோர் உதாரணம்.
புரொபஸர்: ஆம், மூளை வளரணுமுன்னா புதுசா எதையாவது எப்போதும் கத்துக்கணும். 
சேஷாச்சலம்: சரி நடாஷா, நான் உங்க கேள்விக்கு வருகிறேன். ஒரு நரம்பணுவிடம் ஒரு தகவல் வந்து சேர்வதை euro
transmission என்கிறார்கள். Transmission என்றால் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு ஒரு விசயத்தை கடத்துவது. ஒரு பொருளை மற்றொரு இடத்துக்கு அனுப்புவதை transport என்போம். Blood 
transfusion கேள்விப்பட்டிருக்க இல்ல? அதாவது, ஆரோக்கியமான ஒருவரின் தேகத்தில் உள்ள குருதியை எடுத்து நோயாளியின் உடலுக்குள் செலுத்துவது. 
Transmigration? இது migration அல்ல. அதாவது ஒரு ஊரில் இருந்து இடம்பெயர்ந்து செல்வதல்ல. இறந்து போன ஒருவரின் ஆவி இன்னொருவரின் தேகத்துக்குள் புகுவது தான் transmigration. Transaction? உங்கள் செயல் மூலம் ஒரு பொருளைக் கடத்துவது, அதாவது வணிகப் பரிமாற்றத்தில் உங்கள் பணத்தைக் கொடுத்து ஒரு பொருளை வாங்குவது. Transsexual? ஆண் உடம்பில் இருக்கிற ஒருவர் தான் மனதளவிலும் உணர்வளவிலும் ஒரு பெண்ணே என உணர்வது (அல்லது பெண் தன்னை ஆணாக உணர்வது). இப்படி trans என ஆரம்பிக்கும் சொற்களின் பொருள் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். இந்த சொற்கள் பழைய இத்தாலிய சொல் ஒன்றில் இருந்து வருகிறது தெரியுமோ?
கணேஷ்: எனக்குத் தெரியும். எங்க புரொபஸர் சொல்லிக் கொடுத்திருக்கிறாரே. Transportare.
புரொபஸர்: சமத்து!
சேஷாச்சலம்: ஆமா! சரி இது வந்து…
நடாஷா: டாக்டர், நீங்க இன்னும் synapsis-ஐ விளக்கவே இல்ல.
புரொபஸர்: ஹா... ஹா... இவன் அப்பவே இப்படித்தான். லொடலொட கேஸ். 
சேஷாச்சலம்: ஆமா, நான் லொலொடதான். நான் விளக்குறேம்மா. ஆனால் அதுக்கு முன்னாடி லொடலொட மாதிரியான சொற்களை ஆங்கிலத்தில் தனியாக எப்படி சொல்வோமுன்னு தெரியுமா?
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com