வாங்க இங்கிலீஷ் பேசலாம் 200 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 200 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களும் நடாஷா எனும் பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது புரொபஸர் சில நாட்களாக மன அழுத்தத்தில் வாடுவதாக டாக்டரிடம் சொல்கிறது ஜூலி. டாக்டர் மேலும் விசாரிக்கிறார். 
சேஷாச்சலம்: ஜூலி சொல்லு, புரொபஸர் கிட்டே வேறென்னெல்லாம் symptoms நீ கவனிச்சே? 
ஜூலி: முன்னாடி he used to be chillax even when things get out of hand. ஆனால் இப்போ he loses cool for even silly issues.
கணேஷ்: சில்லேக்ஸ்ன்னா விஜய் அண்ணா பாடல் வருமே அதுவா? (பாடுகிறான்) சில்லாக்ஸ்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ்...
ஜூலி: சில்லாக்ஸ் என்பது ஒரு informal term. இன்றைய இளைஞர்களிடம் புழங்கும் நவீனச் சொல். ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான புதுச்சொற்களில் ஒன்று.
கணேஷ்: அதெல்லாம் இருக்கட்டும். நமக்குத் தேவையான ஆணி அதனோட அர்த்தம் என்ன என்பதே.
ஜுலி: Just be calm and relax.
சேஷாச்சலம்: அதிருக்கட்டும். புரொபஸர் is not cool as a cocumber anymore. ஆனால் யார் தான் அமைதியை இழந்து பதற்றப்பட்டு கத்த மாட்டார்கள்? அதுவும் இந்த காலத்தில்.
ஜூலி: இன்னொரு விசயம், அவர் முன்னாடி ரொம்ப ஆக்டிவா இருப்பார். வெளியே சுற்றுவார், வாக்கிங் போவார். இப்போ ரொம்ப டல்லாக ஒரே இடத்தில் இருக்கிறார். சதா டிவி முன்னாடி தவம் கிடக்கிறார். இல்ல ஸ்மார்ட்போன்ல he just bing-watches Netflix videos. 
கணேஷ்: பிஞ்ச் வாட்சிங் என்றால்? நான் binging கேள்விப்பட்டிருக்கேன்... 
ஜூலி: Binging என்றால் என்ன சொல்லு?
கணேஷ்: அதிகமாக ஒண்ணை செய்யுறது.
ஜூலி: குட். Excessively indulging in something. You could binge on ice cream and feel sick at the end, and even guilty over putting on weight.
சேஷாச்சலம்: Or you could go on a binge, like drinking way too much beyond a limit or constantly eat food until you want to throw up.
கணேஷ்: Throw up என்றால் தூக்கி மேலே போடுறதா?
சேஷாச்சலம்: சேச்சே. வாந்தி எடுக்கிறது.
நடாஷா: எனக்கு ஒரு பிரண்டு இருக்கிறா. ரொம்ப அழகா இருப்பாள். சமர்த்து. ஆனால் குடிச்சு வாந்தியெடுத்தா கீழே எடுக்க மாட்டாள். வாந்தி காற்றில் பறக்கும். பெரும்பாலும் பக்கத்தில் உட்கார்ந்திருக்க கூடியவங்க மேலே.
கணேஷ்: உவ்வே... அப்போ throwing up சரி தான்.
சேஷாச்சலம்: சரி... புரொபஸர் சதா டிவி, போன்ல நெட்பிளிக்ஸ்னு பழியா கிடக்கிறான். இது இன்னிக்கு பலரும் பண்றது தானே?
ஜூலி: அது மட்டுமில்ல டாக்டர், he is into DIY all the time.
நடாஷா: அதென்ன?
ஜூலி: You know, he is decorating, building, and making repairs at home by himself, rather than employing a professional. அன்னிக்கு பிளம்பிங் பிரச்னை. பாத்ரூம்ல பைப் உடைஞ்சு தண்ணீ வீணாகுது. பிளம்பரைக் கூப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சு, கூகிளில், யு டியூபில் பார்த்து, டூல்ஸ் வாங்கி வந்து தானே சாரி பண்ண டிரக் பண்ணி ஒரே களேபரம். வீடெல்லாம் தண்ணி ஆகி, எலெக்டிரிக்கல் பொருட்களெல்லாம் வீணாகி ... பிளம்பரை கூப்பிட்டிருந்தா இதில் பத்தில ஒரு பங்கு கூட செலவாகி இருக்காதுன்னு மீனு ஒரே கத்தல்.
சேஷாச்சலம்: அது இவன் எப்பவும் பண்றது தானே. எல்லாரும் தேங்காய் தோசை, வெங்காய தோசை, மசால் தோசை சாப்பிட்டிருப்பீங்க. சின்ன வயசில நாங்க ஹாஸ்டலில் தங்கி இருந்த போது இவன் ஜெல்லி தோசை பண்ணப் போறேன்னு சமையலறையை தலைகீழாக்கிட்டான். அந்த தோசையைச் சாப்பிட்டு ஒரு பையன் ஒரு வாரம் ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகி கிடந்தான். So I am hardly surprised. He is an. He is an infomaniac. 
கணேஷ்: அதென்ன?
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com