வாங்க இங்கிலீஷ் பேசலாம் 201 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 201 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களும் நடாஷா என்ற பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது ஜூலி புரொபஸர் சில நாட்களாக மன அழுத்தத்தில் வாடுவதாக டாக்டரிடம் சொல்கிறது. டாக்டர் மேலும் விசாரிக்கிறார். அப்போது ஜூலியின் விவரணைகளைக் கவனிக்கும் சேஷாச்சலம், "புரொபஸருக்கு எந்த பெரிய மனப்பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லையே'' என்கிறார். அவர் புரொபஸருக்கு சின்ன வயதில் இருந்தே இன்போமேனியா உண்டு என்கிறார். அது என்ன என்ன பிறர் வினவ, அவர் விளக்குகிறார். 
சேஷாச்சலம்: nfomania  ஒரு நவீன மனச்சிக்கல்.  The compulsive desire to check or accumulate news and information, typically via mobile phone or computer. சதா கூகுளில் தகவல்களைத் தேடுவது, இந்த தகவல்களைப் படித்துப் படித்து அதில் போதையாகி நேரத்தை வீணடிப்பது, எந்த வேலையையும் சரியாக நேரத்துக்கு முடிக்க முடியாமல் போவது. இவன் சின்ன வயசில கொஞ்ச நாள் கடல் நீரைக் குடிநீராக மாற்றுவது பற்றி படித்துக் கொண்டு அதைப் பற்றியே பிதற்றிக் கொண்டு திரிந்தான் தெரியுமோ? பீச்சுக்குப் போய் ஒரு டிரம் நிறைய உப்புத் தண்ணீரை அறைக்குக் கொண்டு வந்தான். நாங்கள் உள்ளேயே விட மாட்டோமுன்னு சொல்லி மிரட்டி இவன் முடிவை மாற்ற வைத்தோம்.
கணேஷ்: நிஜமாவா சார்?
சேஷாச்சலம்: Touch wood
புரொபஸர்: அது ஒரு கனாக்காலம். அப்துல் கலாம் ஆகலாமுன்னு கனவு கண்டு திரிஞ்ச காலம்.
சேஷாச்சலம்: நீ வேறே. கலாம் எதையும் கண்டுபிடிக்கல. நீங்களா எதாவது கதை கட்டி விடறது. It is a myth, you know.
கணேஷ்: மித்துன்னா?
சேஷாச்சலம்: தொன்மம்.
கணேஷ்: மகாபாரதம், ராமாயணம் போலவா?
சேஷாச்சலம்: அது தொன்மத்தின் ஒரு பொருள் மட்டும் தானே? இன்னொரு அர்த்தம் இன்று அதிகமாய் புழக்கத்தில் உள்ளது. A commonly held but false idea. உதாரணமா, தினமும் உடற்பயிற்சி பண்ணினால் தொப்பை குறையும் என்பது ஒரு myth.
கணேஷ்: என்னது அப்போ குறையாதா?
சேஷாச்சலம்: ம்ஹும்... புது ஆராய்ச்சி என்ன சொல்லுதுன்னா தினமும் வொர்க் அவுட் பண்ணினா உடல் எடை கம்மியா குறையும். ஆனால் அவ்வப்போது மட்டுமே வொர்க் அவுட் பண்ணி போதுமான ஓய்வு எடுத்தால் இன்னும் சீக்கிரமா அதிகமா எடை குறையுமுன்னு இப்போது சொல்றாங்க.
புரொபஸர்: அட...
சேஷாச்சலம்: யெஸ்.
கணேஷ்: டாக்டர், அதென்ன touch wood? வேறு சிலரும் அடிக்கடி இந்த பதத்தைப் பயன்படுத்திக் கேட்டிருக்கேன்.
சேஷாச்சலம்: Hopefully it should no change என்பது இதன் பொருள். அதாவது ஒரு நல்ல விசயத்தைச் சொல்றோம். ஆனால் அப்படி சொன்னதுனாலே அதுக்கு நேர்மாறா எதிர்காலத்தில் நடந்துடக் கூடாதேங்கிற பயத்தில் சொல்றது தான் touch wood. தமிழில் இதுக்கு இணையா "நல்ல வேளை' என்பதை பயன்படுத்துறோம்."நல்ல வேளை, தப்பிச்சோம், "ராத்திரி எல்லாம் ஜுரம் கொதிச்சுது. காலையில ஆஸ்பத்திரி போகணுமுன்னு நினைச்சோம். ஆனால் நல்ல வேளை விடிஞ்சதும் பார்த்தா ஜுரம் போய் வேர்த்திடுச்சு.' இந்த இடங்களில் நாம ஏன் "நல்லவேளைன்னு சொல்லணும்? அது கெட்டவேளையாக ஆகிடக் கூடாதேங்கிற பயத்தில. வாழ்க்கையில் ஒரு சின்ன மாற்றம், குறுக்கீடு பெரிய பிரச்னைகளை, ஆபத்துக்களைக் கொண்டு வரும், நம்மால் அவற்றைத் தனியாக எதிர்கொண்டு மாற்ற முடியாது; அதிர்ஷ்டம் முக்கியமுன்னு நினைக்கிறோம். அது தான் ஆங்கிலத்தில் touch wood.
கணேஷ்: சரி, ஆனால் அதென்ன wood? நாம எந்த மரத்தையும் தொட்டு இதை சொல்றதில்லையே?
சேஷாச்சலம்: தொடறது இல்ல தான். ஆனால் மேற்குலகில் அவர்களுக்கு அப்படி மரத்தில் தொட்டு சத்தியம் பண்ற பாரம்பரியம் இருந்தது. உதாரணமா, இயற்கையை ஆன்மா உள்ள உயிரினமாக, தெய்வமாக கருதிய pagan கலாசாரத்தில் ஒரு மரம் என்பது ஒரு மனிதனைப் போலத் தான். மரத்துக்குள் தீய சக்திகளும் தேவதைகளும் குடியிருக்கும் என பண்டைய மனிதர்கள் நம்பினார்கள். ஆகையால், ஒரு விசயத்தை சொன்னதுமே அதை மரத்துக்குள் இருக்கும் ஒரு தீய சக்தி கேட்டு, நாளை தீங்கு விளைவிக்கக் கூடாதே எனும் பயத்தில் மரத்தை இரண்டு முறை தொடுவார்களாம். முதல் முறை, மரத்தில் உறையும் தேவதை / தீய சக்தியுடன் ஒரு விருப்பத்தை சொல்லி உதவி கோர. அடுத்த முறை, நன்றி செலுத்த. இன்னொரு நம்பிக்கை, இப்படி மரத்தை தட்டும் போது தீய சக்திகள் தம் கவனத்தை இழந்து நாம் அதுவரை சொன்னதை மறந்து விடும் என்பது. இப்படி distract பண்ணுவதற்காகவும் மரத்தை தட்டியதை 
touch wood என்பார்கள்.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com