பூச்சிக்கொல் மருந்து தெளிக்கும் ஸ்மார்ட் அக்ரிகாப்டர்!

விஞ்ஞான வளர்ச்சியால் பல்வேறு துறைகள் நவீனமயமாகி வருகின்றன. ஆனால், இந்தியா உள்பட வளர்ந்து வரும் நாடுகளில் வேளாண்துறையில் விஞ்ஞான தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு குறைவாக இருக்கிறது
பூச்சிக்கொல் மருந்து தெளிக்கும் ஸ்மார்ட் அக்ரிகாப்டர்!

விஞ்ஞான வளர்ச்சியால் பல்வேறு துறைகள் நவீனமயமாகி வருகின்றன. ஆனால், இந்தியா உள்பட வளர்ந்து வரும் நாடுகளில் வேளாண்துறையில் விஞ்ஞான தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு குறைவாக இருக்கிறது என்றே கூறலாம்.
 பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், வேளாண்துறைக்கு அளிக்கப்படுவதில்லை. இந்த நிலையை அறிந்த சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் வேளாண் துறைக்காக "ஸ்மார்ட் அக்ரிகாப்டர்' எனும் தானியங்கி பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.
 பார்ப்பதற்கு ட்ரோனைப் (ஆளில்லா விமானம்) போல் இருக்கும் இந்த ஸ்மார்ட் அக்ரிகாப்டரில் 10 மடங்கு வேகமாக பூச்சிக் கொல்லி மருந்தைத் தெளிக்க முடியும். இதில் உள்ள நவீன கேமரா, பயிர்களின் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. பூச்சிக்கொல்லி மருந்தில் உள்ள ரசாயனங்களால் அதைத் தெளிப்பவர்களுக்கு நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கவே ஸ்மார்ட் அக்ரிகாப்டரை உருவாக்கியதாக ஐஐடி மாணவர்கள் தெரிவித்தனர்.
 "ஸ்மார்ட் அக்ரிகாப்டரில் ஒரு முறை 15 லிட்டர் பூச்சிக் கொல்லி மருந்தைத் தெளிக்கலாம். மனிதர்களைக் காட்டிலும் 10 மடங்கு வேகமாகத் தெளிக்கும் இந்த ஸ்மார்ட் அக்ரிகாப்டருக்கும் பணியாள்களை வைத்துத் தெளிக்கும் செலவுதான் ஆகும்' என்று விண்வெளி பொறியியல் மாணவர் கவி கைலாஷ் தெரிவித்தார்.
 "நம் நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஸ்மார்ட் அக்ரிகாப்டரின் விலை சுமார் ரூ. 5.1 லட்சமாக இருக்கும். இந்த ஸ்மார்ட் அக்ரிகாப்டருக்கு காப்புரிமை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று விண்வெளி பொறியியல் மாணவர் ரிஷப் வர்மா கூறினார்.
 - அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com