வாங்க இங்கிலீஷ் பேசலாம் 202 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 202 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்ற பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது ஜூலி புரொபஸர் சில நாட்களாக மன அழுத்தத்தில் வாடுவதாக டாக்டரிடம் சொல்கிறது. டாக்டர் மேலும் விசாரிக்கிறார். அப்போது ஜூலியின் விவரணைகளைக் கவனிக்கும் சேஷாச்சலம் புரொபஸருக்கு எந்த பெரிய மனப்பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லையே என்கிறார். இதைத் தொடர்ந்து புரொபஸரின் பல்வேறு இயல்புகளை அவர்கள் விவாதிக்கையில் touch wood எனும் சொல்லாடல் வருகிறது. அதன் பொருளை, பண்பாட்டு வேர்களை விளக்குகிறார்கள். இதை ஒட்டி நடாஷாவுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. 
நடாஷா: சார், touch wood என சொல்வதை கிறித்துவர்கள் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் இதை பண்ணத் தொடங்கினதாக எங்கேயோ படித்திருக்கிறேன். 
புரொபஸர்: உண்மை தான். இங்கே wood என்பது மரத்தாலான சிலுவையைக் குறிக்கிறது. கர்த்தரைத் தொட்டு வணங்கி அதனால் தீய சக்திகளை விரட்டலாம் எனும் நம்பிக்கை இது. ஆனால் இன்று டச் வுட் சொல்கிறவர்கள் இதையெல்லாம் யோசிக்கிறார்கள் என்றில்லை. தற்செயலாக தெரியாமலேயே இதைக் குறிக்கிறோம். அவ்வளவு தான். 
சேஷாச்சலம்: சரி, கணேஷ்
கணேஷ்: யெஸ் டாக்டர்!
சேஷாச்சலம்: நீ உங்க புரொபஸரிடம் எதாவது வித்தியாசமான நடவடிக்கைகளைக் கவனித்தாயா?
கணேஷ்: ஆமாம் டாக்டர். சமீபமாகவே அவர் ரொம்ப stressed out ஆக உள்ளார். சிலநேரம் பேஸ்புக்கிலேயே மூழ்கிக் கிடக்கிறார். மணிக்கணக்காய் டைம்லைனில் வருவதை எல்லாம் படிக்கிறார். அலுத்தால், refresh பண்ணி மீண்டும் படிக்கிறார்.
சேஷாச்சலம்: Oh, I get it. He is suffering from FAD.
புரொபஸர்: அதென்னடா? 
சேஷாச்சலம்: Facebook Addiction Disorder என்பதன் சுருக்கமே FAD. இந்த போதையில் ஆட்பட்டவர்கள் ஆறுவிதமான அறிகுறிகளில் மூன்றையாவது கொண்டிருப்பார்கள்.
புரொபஸர்: என்னென்ன?
சேஷாச்சலம்: tolerance, withdrawal symptoms, reduction of normal social / recreational activities, virtual dates மற்றும் fake friends.
கணேஷ்: இதில் இந்த tolerance என்றால் சகிப்புத்தன்மை அல்லவா? அது நல்ல விசயம் தானே?
சேஷாச்சலம்: இங்கு தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். சில சொற்கள் அறிவியலில் டெக்னிக்கலான கலைச்சொற்கள் ஆகும் போது அதன் பொருளே முழுக்க மாறி விடுகிறது. Tolerance என்பது addiction theory -இல் வேறு அர்த்தம் கொள்கிறது. உதாரணமாக, தினமும் குடிக்கிறவருக்கு சாராயம் குறைவாகவே போதையைத் தரும். போதை மருந்தை தொடர்ந்து உட்கொள்ளும் போதும் இதுவே நடக்கிறது. The body gets used to the chemicals that you grow tolerant. You body 
tolerates liquor or drugs so well that you hardly get a high with a regular dosage. இதைத் தான் உளவியலில் டாலரென்ஸ் என்கிறார்கள். 
கணேஷ்: அதென்ன சார் ஹை?
சேஷாச்சலம்: ஒருவித உச்சநிலை போதை. தன்னை மறந்த அனுபூதி. 
கணேஷ்: Withdrawal symptoms என்பது மது போதையில் வருவது போல கைநடுங்குவது, சகஜமாக இருக்க முடியாது தவிப்பது எல்லாமா? 
சேஷாச்சலம்: ஆமாம்... பேஸ்புக் போதையில் இருப்பவர்களால் அன்றாட விசயங்களில் எளிதாக ஈடுபட முடியாது. சதா ஒரு anxiety, எப்போதுமே பேஸ்புக்கை பற்றி பேசிட மனம் தவிக்கும். 
கணேஷ்: அதென்ன வெர்ச்சுவல் டேட்? 
சேஷாச்சலம்: க்ஹற்ண்ய்ஞ் என்றால் தெரியும் இல்லையா, ஆணும் பெண்ணும் ஓர் இடத்தில் சந்தித்து நேரம் செலவிடுவது. ஆனால் பேஸ்புக் பைத்தியங்களால் அது முடியாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிதம் காதலன் / காதலியை அப்போது மெஸஞ்சரில் சாட்டுக்கு வரக் கேட்பார்கள். வெளியே சந்தித்து உரையாடுவதை விட பேஸ்புக்கில் உரையாடுவதே அவர்களுக்கு கிக்காக இருக்கும். இது தான் virtual dating. Fake friendsஉம் இப்படியே தான். உங்கள் பேஸ்புக் நண்பர்களில் பத்தில் எட்டு பேர் உங்களுக்கு யாரென்றே தெரியாத strangers என்றால் நீங்கள் பேஸ்புக் பைத்தியம் என அர்த்தம். முழுக்க பரிச்சயமே இல்லாதவர்களை நண்பர்களாக வைத்திருப்பதே உங்களுக்குப் பிடிக்கிறது என்றால் நீங்கள் நட்பின் பலன்களை அனுபவிக்க முடியாதவர் ஆகிறீர்கள். சரி... உங்க புரொபஸர் இந்த நோய்க்குறிகளில் எவ்வளவு ஸ்கோர் வாங்குவார்? 
கணேஷ்: ம்...ம்...ம்... ஒன்று அல்லது ரெண்டு நோய்க் குறிகளை சொல்லலாம். ஆனால் மூணு வராது.
சேஷாச்சலம்: அப்படீன்னா he doesn’t have FAD...
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com